Silence
Silence by Pablo Neruda கவிதை வாசிப்பு https://youtube.com/shorts/dJEUZmY1DgQ?si=6SipRZUlJWmTmLv5
Silence by Pablo Neruda கவிதை வாசிப்பு https://youtube.com/shorts/dJEUZmY1DgQ?si=6SipRZUlJWmTmLv5
மயன் மாளிகை வெளிவந்து விட்டது. கட்டுரைத் தொகுப்பு. 190 பக்கம். விலை 250 ரூ. ஜோடிப்புறாவை எங்கே காணோம்? நாவல். 450 பக்கம். விலை 660 ரூ. கெட்டி அட்டை. நாவல் அச்சுக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. இன்னும் இரண்டு வாரத்தில் கிடைக்கும். இரண்டையும் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: Email address: raasaleelapathippagam@gmail.com Phone: +917339680708
நேற்று எழுதிய விபரீத ராஜயோகமும் அகத்திக்கீரை தண்ணிச்சாறும் என்ற சிறுகதையில் பின்குறிப்பு பகுதியை மாற்றி எழுதியிருக்கிறேன். சில முக்கியமான விஷயங்களைச் சேர்த்திருக்கிறேன். கதையை மீண்டும் வாசிக்கவும். அல்லது, பின்குறிப்பை மட்டுமாவது வாசிக்கலாம். அந்தக் காலத்து சினிமாவில் படத்தில் வரும் வேலைக்காரர் உட்பட பிராமண பாஷையிலேயே பேசுவார்கள். காரணம், வசனகர்த்தா பிராமணராக இருப்பார். அசோகமித்திரனின் ஒரு கதையில் வரும் மீனவர் பிராமண பாஷையில் பேசுவார். அந்தத் தவறை மட்டும் செய்யவே கூடாது என்பதை அப்போது நான் கற்றுக்கொண்டேன். நேற்றைய … Read more
1 கண்ணாயிரம் பெருமாள் ரிஷப ராசி. ராசியிலேயே வசீகரமான ராசி ரிஷப ராசிதான். ஏன், எப்படி என்பதை நீங்கள் ரிஷப ராசி பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் ரிஷப ராசிக்கு 2025 முடிவு வரை இறங்கு திசையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. 2026ஆம் ஆண்டில் விபரீத ராஜ யோகம் நிச்சயம். இது என்ன கதையா, சோதிடக் குறிப்பா என மிரளாதீர்கள். கதை எப்போதோ ஆரம்பித்து விட்டது. அதிலும் 2026 மார்ச்சிலிருந்து ரிஷப ராசியின் திசையில் ஒரே … Read more
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என் முதல் நாவல் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் – ஐ எழுதி முடித்து விட்டு, பதிப்பகம் எதுவும் அதைப் பதிப்பிக்க முன்வராததால் நானே அதைப் பதிப்பிக்க முடிவு செய்தேன். சக எழுத்தாளர்களுக்கு அது ஒரு குப்பை என்று தோன்றியது. காரணம், இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் அப்படி ஒரு புதினம் – கவிதையிலோ உரைநடையிலோ அல்லது வேறு எந்த வடிவத்திலோ எழுதப்பட்டதில்லை. எனவே சகாக்களுக்கு அது குப்பை எனத் தோன்றியதில் எனக்கு … Read more
விபரீத ராஜயோகமும் அகத்திக்கீரை தண்ணிச்சாறும் என்ற சிறுகதையில் பல ரசமான சம்பவங்கள் விடுபட்டு விட்டன. எல்லாவற்றையும் சரி செய்து இன்று மாலைக்குள் பதிவேற்றம் செய்கிறேன்.