சொல்லித் தீரவில்லை (எதிர்க் கலாச்சாரம் -3)

ஒரு விஷயம் எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. வள்ளலாரும் நானும் சமகாலத்தில் வாழ்கிறோம். வள்ளலாரை போலீஸ் கைது செய்கிறது. என்ன விஷயம்? வள்ளலார் சாருவைக் கத்தியால் குத்தி விட்டார். ஐயோ, என்ன இது, சாரு வள்ளலாரைப் புகழ்ந்து அல்லவா எழுதிக்கொண்டிருந்தார்? அது என்னவோ போங்க, சாருவின் TOV… TOVன்னா? தலையில் ஓத்த விதி! அந்த இசை விமர்சகர் விஷயத்திலும் இதேதான் நடந்தது. மிகவும் நல்லவர். பண்பானவர். அதிர்ந்தும் பேச மாட்டார். நானும் அவரைப் புகழ்ந்து புகழ்ந்தே எழுதியிருக்கிறேன். … Read more

நாய் படும் பாடு (எதிர்க் கலாச்சாரம் – 2)

தோழி, இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்து போனேன். நீ பேசும் போது நான் எழுதிய – அதாவது, இடுப்புக்குக் கீழே அடித்துக் கொன்ற நவீன தீண்டாமை என்ற கட்டுரையில் அந்த இசை விமர்சகரை நாய் என்று குறிப்பிட்டு எழுதியதெல்லாம் அநியாயத்திலும் அநியாயம் என்றாய். எனக்கு நாய் என்றால் உயிர். யாரையுமே நான் நாய் என்று திட்ட மாட்டேன். ஆனாலும் நீ சொன்னதால் மௌனமாகவும், அதே சமயம், நாய் என்று சொல்ல மாட்டேனே என்று முணகியும் மருகினேன். … Read more

எதிர்க் கலாச்சாரம் ரவுடித்தனம் இல்லை!

இன்று ஒரு தோழி ஃபோனில் அழைத்தார். சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். மாதாமாதம் எனக்குத் தேவையான அலோபதி மருந்துகளை பல ஆண்டுகளாக அனுப்பிக்கொண்டிருப்பவர். அவர் சொன்ன விஷயங்களுக்கு நான் அவருக்கு ஒரு மின்னஞ்சல் போடலாம். ஆனால் அவர் சொன்னது எல்லாமே ”நான் கொடுத்த பணத்தை நீ திருப்பவில்லை” என்பது போன்ற தனிப்பட்ட விஷயங்கள் அல்ல. எல்லாமே என் இயக்கம் சம்பந்தப்பட்டவை. எல்லாமே என் எழுத்து சம்பந்தப்பட்டவை. மேலும், இதையேதான் அவர் … Read more

ஒரு முடிவு: எல்லோரும் இன்புற்றிருக்க…

நவீன தீண்டாமை என்ற கட்டுரையை நீக்கி விட்டேன். அது அதில் சம்பந்தப்பட்ட நபரை மட்டுமல்லாமல் மற்ற பலரையும் புண்படுத்தி, அவர்களுக்கு வேறு பல சங்கடங்களையும் விளைவித்திருக்கிறது என்று அறிகிறேன். முட்டாள்களே ஒரு சாதாரண ஆளை அறிஞர் என்றும், படுமுட்டாள்களே அவரை பேரறிஞர் என்றும் சொல்வார்கள் என்று அண்ணாதுரை இறந்த போது சொன்னவர் ஜெயகாந்தன். அதேபோல் சிவாஜி கணேசனின் பாராட்டு விழாவில் சென்று கலந்து கொண்டு, சிவாஜியின் நடிப்பு பற்றி மிக மோசமாகப் பேசி உயிராபத்துடன் தப்பி வந்தவர் … Read more