ஜோடிப்புறாவை எங்கே காணோம்?

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என் முதல் நாவல் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் – ஐ எழுதி முடித்து விட்டு, பதிப்பகம் எதுவும் அதைப் பதிப்பிக்க முன்வராததால் நானே அதைப் பதிப்பிக்க முடிவு செய்தேன்.  சக எழுத்தாளர்களுக்கு அது ஒரு குப்பை என்று தோன்றியது.  காரணம், இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் அப்படி ஒரு புதினம் – கவிதையிலோ உரைநடையிலோ அல்லது வேறு எந்த வடிவத்திலோ எழுதப்பட்டதில்லை.  எனவே சகாக்களுக்கு அது குப்பை எனத் தோன்றியதில் எனக்கு … Read more

ஓர் அறிவிப்பு

விபரீத ராஜயோகமும் அகத்திக்கீரை தண்ணிச்சாறும் என்ற சிறுகதையில் பல ரசமான சம்பவங்கள் விடுபட்டு விட்டன. எல்லாவற்றையும் சரி செய்து இன்று மாலைக்குள் பதிவேற்றம் செய்கிறேன்.

விபரீதம் (நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை)

விபரீதம் April 17, 2022 எனக்குப் பிடித்த நாவல் புயலிலே ஒரு தோணி என்கிறார் நடிகர் விஜய் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுகிறார்கள் சென்னையில் முதலமைச்சர் தன் வீட்டிலிருந்து தன்னுடைய காரைத் தானே ஓட்டிக் கொண்டு தலைமைச் செயலகம் செல்கிறார் நாலு காலில் தவழ்ந்து சென்று தன் தலைவியை நமஸ்கரித்த முன்னாள் மந்திரி தலைவியின் பெயர் சொல்லி அழைக்கிறார் மற்றவர்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்கிறார் கமல்ஹாசன் இலக்கிய நூல்களின் விற்பனை ஒரு கோடியைத் தாண்டுகிறது பிரபலத் தமிழ் … Read more

சர்வதேச இலக்கியத்துக்கான வாழும் தமிழ் விருது – சில குறிப்புகள்

இலக்கிய விருதுகளில் பெரும் மதிப்புக்குரியதாகக் கருதப்படுவது நோபல் விருது. ஆனால் நோபல் விருது இலக்கியத்துக்கு மட்டும் அளிக்கப்படுவதல்ல என்பதை நாம் அறிவோம். விருதுத் தொகை சுமார் ஒன்பது கோடி ரூபாய். இதற்கு அடுத்து பெருமைக்குரியதாகக் கருதப்படும் இலக்கிய விருது டப்ளிக் இம்ப்பாக் விருது. இது சுமார் தொண்ணூறு லட்சம் ரூபாய் மதிப்பு கொண்டது. இப்போது இம்ப்பாக் நிறுவனம் இதில் இல்லை என்பதால் டப்ளின் இலக்கிய விருது என்றே இது அழைக்கப்படுகிறது. அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரசபைதான் இந்த … Read more

இந்தியாவின் மிகப் பெரிய இலக்கிய விருது…

ஜெயமோகனின் இந்தப் பதிவை அவசியம் படித்துப் பாருங்கள். இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய விருது இனி நம்மிடமிருந்து! | எழுத்தாளர் ஜெயமோகன்

சூகர ராஜ்ஜியம்

க்ளாடியேட்டர் 2-இல் அந்தக் காட்சி மறக்க முடியாதது. வட ஆஃப்ரிக்காவிலிருந்து அடிமையாகப் பிடிக்கப்பட்டு வந்த லூசியஸ் (ஹன்னோ என்ற பெயரில்), அரசர்களின் விருந்தின்போது அவர்களின் பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் வாள் சண்டையில் வென்ற பிறகு, பேரரசர் கேட்டா அவனிடம் “நீ எந்த ஊரைச் சேர்ந்தவன்?” என்று கேட்கிறான். லூசியஸ் நேரடியாகப் பதில் சொல்லாமல், வர்ஜிலின் Aeneid காவியத்திலிருந்து அந்தப் புகழ்பெற்ற வரிகளைச் சொல்கிறான்: “The gates of hell are open night and day; Smooth is … Read more