உலக சினிமா குறித்த ஒரு பயிற்சிப் பட்டறை

மனுஷ்யபுத்திரனின் முன்னெடுப்பில் சமீபத்தில் அண்ணா நூலகத்தில் நடந்த மாணவர் பயிலரங்கில் நான் உலக சினிமா குறித்துப் பேசியதற்கு மாணவர்களும், பிறகு ஷ்ருதி டிவி கபிலனின் முயற்சியில் அதன் காணொலியைப் பார்த்த நீங்களும் காட்டிய ஆர்வத்தினால் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. நான் அண்ணா நூலகத்தில் பேசிய ஒன்றரை மணி நேர உரை உலக சினிமாவில் ஒரு துளிதான். அதை நான் குறைந்த பட்சமாக ஆறு மணி நேரம் பேசி உங்களுக்குப் பயிற்சி அளிக்க முடியும். ஒரு நாற்பது ஆண்டுகள் நான் பார்த்த உலக சினிமாவின் சாரத்தை ஆறு மணி நேரத்தில் உங்களுக்குக் கடத்தும் பணி அது. அதன் பொருட்டு அடுத்த மாதம் ஜூன் மாதம் முப்பதாம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) திருவண்ணாமலையில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை உலக சினிமா குறித்து நான் ஒரு பயிற்சிப் பட்டறையை நண்பர்களின் உதவியுடன் நடத்தலாம் என்று நினைக்கிறேன். கலந்து கொள்பவர்கள் குறைந்த பட்ச நன்கொடை எவ்வளவு அளிக்கலாம் என்பதையும், திருவண்ணாமலையில் பயிற்சிப் பட்டறை நடக்க இருக்கும் இடத்தையும் நாளை அறிவிக்கிறேன். கலந்து கொள்ள விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

charu.nivedita.india@gmail.com