தக் லைஃப் படத்தில் த்ரிஷா கதாபாத்திரம் பற்றி நான் எழுதியதை ஏதோ ஒழுக்கக் கேடு என்று நான் எழுதி விட்டதாக சில எழுத்தாளக் குஞ்சுகள் ஃபேஸ்புக்கில் நூல் விட்டுக்கொண்டு கிடக்கிறார்கள்.
சினிமாக்காரர்களுக்கு ப்ளோஜாப் செய்து விட வரிசையில் நிற்கும் அந்த எழுத்தாளக் குஞ்சுகளுக்கு நான் சொன்னது எதுவுமே புரியவில்லை. ஒழுக்கம் அல்ல நான் குறிப்பிட்டது. ஒரு கதாபாத்திரம் அப்பனுக்கும் ஆசைப்படுகிறது, மகன் மீதும் ஆசைப்படுகிறது என்றால் அதற்கான characterization இருக்க வேண்டும் என்பது மட்டுமே நான் சொன்னது. உதாரணமாக, புதுப்பேட்டை படத்தில் வரும் தனுஷ் பாத்திரம் போல் இருக்க வேண்டும். அந்தப் பாத்திரம் எது வேண்டுமானாலும் செய்வான். அப்படியில்லாமல் போனால் தக் லைஃப் மாதிரிதான் அரைவேக்காடாக இருக்கும்.
உங்களுக்கு ட்ரான்ஸ்கிரஸிவ் சினிமா கொடுக்க வேண்டும் என்றால், 2004இல் வெளிவந்த Ma Mère என்ற படத்தைப் பாருங்கள்.
Christophe Honoré இயக்கியது. தன் கணவன் இறந்ததும் ஒரு தாய் தன் மகனை (சொந்த மகன்) காதலனாக ஆக்கி, அவனோடு உறவு கொள்ளும் கதை. இது ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille) எழுதிய என் அம்மா என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அம்மாவாக நடித்திருப்பவர் உலகப் புகழ் பெற்ற நடிகை Isabelle Huppert. இப்படிப் படம் எடுக்க தைரியம் இல்லாதவர்கள் முப்பது வயதுக்கு மேற்பட்ட சக்திவேல் (கமல்) ஏழு வயதான சிறுவனின் அண்ணன் என்று காதில் பூ சுற்றுகிறார்கள். தந்தை – மகன் என்று சொல்ல வேண்டியதுதானே? படம் தடை செய்யப்படும் என்ற பயம். அதனால் அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி என்ற பழமொழியை நம்பி 32 வயது ஆசாமிக்கு ஏழு வயது பையன் தம்பி என்று கதை விட்டிருக்கிறார்கள். அதற்கு சில எழுத்தாளக் குஞ்சுகள் உன்னத சங்கீதம் கதை எழுதிய எழுத்தாளர் ஒழுக்கம் பேசுகிறார் என்று சினிமாக்காரர்களுக்கு ப்ளோஜாப் செய்ய வரிசையில் நிற்கிறார்கள்.
Ma Mère படத்தை திருவாளர்கள் கமல் ஹாசனும் மணி ரத்னமும் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. பார்க்காதிருந்தால் பார்க்கலாம்.
மேலும், தக் லைஃப் சிகாமணிகளுக்கு எதார்த்த உலகமே தெரியவில்லை என்பதற்கு இன்னொரு உதாரணம், ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண் எவனோ ஒருத்தன் தன்னை கர்ப்பமாக்கி விட்டான் என்பதற்காகத் தற்கொலை செய்து கொள்வாளா? ஐயன்மீர், நீங்களெல்லாம் எந்தக் காலத்தில் வாழ்கிறீர்கள்? கொஞ்சம் 2025க்கு வாருங்கள். ரீல்ஸ் எல்லாம் பாருங்கள். பிறகு படம் எடுங்கள்.