வையமேழும் கண்டேன்

செவிச்சே உணவுக்காகவும்பிஸ்க்கோ மதுவுக்காகவும்லீமா சென்றவன் ராணுவ அதிகாரியால்கை வெட்டப்பட்ட போதும்கித்தார் வாசித்துவிடுதலையின் பாடலைப் பாடியகலைஞனின் குருதி தோய்ந்தநிலத்தைக் காணசாந்த்தியாகோ சென்றவன் என்றோ ஒருநாள் கனவில் வந்தமேக்காங் நதி காணதாய்லாந்து சென்றவன் அந்த ஊர்சுற்றியின் பட்டியலில்இப்படி ஓராயிரம்நிலங்களிருந்தன இன்றுகடல்கடந்து எங்கும்சென்றானில்லை எழுத்தை விடநாடும் நகரமும் மேலென்றுதிரிந்தலையும்நீ இன்றுஇருந்த இடத்தில்இருந்துகொண்டிருப்பதன்காரணம் யாதென்று கேட்டதுமைனா வையமேழும் கண்டேனென்வையத்து நாயகியின்பின்கழுத்துத் தோகையிலேமுத்தம் பதிக்கையிலேஎன்றானவன்

எரியும் சொற்கள்

1 இப்படியொரு பெருநகரில் நம் வீட்டு ஜன்னல் கம்பியில் வந்தமரும் மைனாவைக் காண்பதரிது வெகுகாலமாக வந்துகொண்டிருக்கிறது இந்த மைனா பறவை பூனைக்கு ஆகாரமாதலால் பறவைக்கும் பூனைக்கும் பகை ஆனால் எங்கள் வீட்டுப் பூனைகள் பூனை குணம் கொண்டவையல்ல ஜன்னலுக்கு வரும் மைனாவிடம் கொச்சு கொச்சென்று கொஞ்சியபடியே இருக்கும் பூனைகள் மைனாவின் பேச்சு சங்கீதம் சங்கீதம் அந்த உரையாடலைக் காண்பதிலும் கேட்பதிலும் எனக்கோர் இன்பம் 2 ஒருநாள் மைனா ’ஏன் சோர்வாய் இருக்கிறாய் இப்படி நீயிருந்து கண்டதில்லையே?’ என்றது … Read more

மூன்று கவிதைகள்

1.மௌனம் இதுவரை அறிந்த மௌனம் ரம்யம் நீ வந்த பிறகு அறியுமிந்த மௌனம் குருதி கொப்புளித்தோடும் ரணகளம் எத்தனையோ ஆயிரம் பேர் அறிந்த மௌனம் பாடிய மௌனம் துக்கித்த மௌனம் உடலைத் துறந்து உயிரை மாய்த்த மௌனம் ஏடுகளில் படித்ததுண்டு பாடல்களில் கேட்டதுண்டு வாதையாய் அறிந்ததில்லை சாட்சியாய் நகரும் நிலவே கூழாங்கற்களை அடித்து விளையாடி ஓடும் நதியே இலைகள் சலசலக்க சரசமாடிச் செல்லும் தென்றலே அவளிடம் இதை மறக்காமல் சொல்லி விடுங்கள் நானொரு சொல்லாகி சொல்லுக்குள் மறைந்து … Read more

(நீலம் இலக்கிய விழாவில் பேசியதை முன்வைத்து ஒரு கட்டுரைத் தொடர்) 1.சமூகப் போராளியும் எழுத்தாளனும்…

ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ஒரு காட்சி. ஜூலியஸ் சீஸர் கொல்லப்பட்டதால் ரோமானியர்கள் பதற்றமடைகிறார்கள்.  அந்தக் கொந்தளிப்பான சூழலில் மார்க் ஆண்டனி அவனது பிரசித்தி பெற்ற இரங்கல் உரையை ஆற்றுகிறான்.  அந்த உரையின் காரணமாகத் தூண்டப்பட்டு கடும் கோபத்துக்கு ஆளான கூட்டம் ப்ரூட்டஸையும் அவன் நண்பர்களையும் கொல்லத் துடிக்கிறது.  நகரம் முழுவதும் கூச்சல் குழப்பம். இங்கே சின்னா என்பவனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் இரண்டு சின்னா வருகிறார்கள்.  ஒரு சின்னா, சீஸரைக் … Read more

காற்று, இலை, நான்

காற்று  இலையை அசைக்கிறது அசைந்தாடும் இலையைப் பறித்து காற்றுக்குக்  காணிக்கையாக்குகிறேன் சமயங்களில் இலை என்னைப் பறித்து காற்றுக்குக் காணிக்கையாக்குகிறது காற்று இலை நான்