அனாகதம்

2 ஆள் நடமாட்டமில்லாத தெருவில்நடைபயிலும் பொழுது ஹலோ வணக்கம் என்றொரு குரல் சுற்றுமுற்றும் நோக்கினேன் யாருமே இல்லை பயந்து போனேன் பேய்கள் அதிகமிருக்கும் ஊரில் தான் நான் வளர்ந்தேன். பேய் அடித்துச் செத்தவர் பலர் அங்குண்டு. எனதொரு சகோதரிக்கே பேய் பிடித்திருக்கிறது மலையாளத்தில் கத்தினாள். மலையாளப் பேய் என்ற றிந்தோம் ஒரு புள்ளி விபரம்இந்த மகா நகரத்தில் பேய்களில்லைஎன்கிறது நகர மாந்தர் குறித்து பேய்களுக்குப் பேரச்சம் போலும்.என்றபோதும்யாருமற்ற  தெருவில் ஹலோ வணக்கம் கேட்டு வியர்த்துப் போனேன் மீண்டும் கேட்டது குரல் ஹலோ வணக்கம் அஞ்ச வேண்டாம் குனிந்து பாருங்கள் என்றது குரல் 3 ஒரு கூழாங்கல்லிலிருந்துதான் அந்தக் குரல் என்றறிந்து கொண்டேன் என்னை அறிந்தோரோ, வாசகரோவணக்கம் சொன்னால் காதில் விழாததுபோல் சென்றுவிடும் நான் அந்தக் கூழாங்கல்லுக்கு பதில் வணக்கம் சொன்னேன் கூழாங்கல்லோடு  பேசுவதுபுதியதோர் அனுபவமென்பதால் … Read more

விடுதலைப் பாடல்

திணிக்கப்பட்ட மௌனத்தின் இருண்ட குழிகளிலிருந்து இப்போதுதான் வெளிவந்திருக்கிறாய் சுற்றுப்புறம் கண்டு சிலகாலம் திகைத்த நீ இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறாய் இப்போதுதான் மறுக்கவும் ஆரம்பித்திருக்கிறாய் காலமறியாத் தனிமையில் அஃறிணையாய்க் கிடந்த நீ இப்போதுதான் சிரிக்க ஆரம்பித்திருக்கிறாய் உன்னைப் பைத்தியமென்று சொன்ன நோய்மைக் கூட்டத்தை இப்போதுதான் நீ புறக்கணிக்க ஆரம்பித்திருக்கிறாய் இப்படியாக இந்தக் கல்மலைகளில் எதிரொலிக்கும் உனது விடுதலைப் பாடலை எனது வார்த்தைகளில் எழுத முயன்று கொண்டிருக்கிறேன்

எதுயெது முதல்முதல் (தொடர்ச்சி)

புள்ளிமானைப் போல்துள்ளிக் குதித்தபடியேநடக்கிறாய்இது முதல் எப்போதும்வெண்கல மணியாகக்கலகலத்துச் சிரிக்கிறாய்இது முதல் கலவி முடிந்துஒருநாள்குலுங்கிக் குலுங்கிஅழுதாய்பதறிய நான்நீ அடங்கியதும்கேட்டேன்‘பரவசத்தின் உச்சத்தைஇப்படித்தான்வெளிப்படுத்த முடிந்தது’என்றாய்அது முதல் ஒருநாள் முழுதினமும்என்னோடு இருந்தாய்நள்ளிரவில் விழிப்புக் கண்டுபார்த்த போது நீ இல்லைகுலுங்கிக் குலுங்கிஅழுதேன்அது முதல் தேனினும் இனிதுநின்நிதம்பச் சுவைஅது முதல் மோகமுள் யமுனாஇசையின்பரவசத் தருணமொன்றில்சொல்கிறாள் எனக்குசெத்துவிடத் தோன்றுகிறதென்றுஉன்னை நினைக்கும்போதெல்லாம் எனக்கும்அப்படியே தோன்றுகிறதுஇன்பத்தின் உச்சம் நீஇன்பத்தின் உச்சம் நீஇன்பத்தின் உச்சம் நீஇது முதல்இது முதல்இது முதல்

லிட்ரரி சூப்பர் ஸ்டாரின் இரண்டு புதிய புத்தகங்கள்

ல சென்ற ஆண்டு ஹிந்து பத்திரிகையின் இலக்கிய விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.  ஆங்கில வாசகர்கள்.  ஆங்கிலத்தில் உரையாடல்.  நந்தினியும் நானும்.  அந்தப் பார்வையாளர்களுக்கு என் பெயர் தெரியாது என்பதால் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.  இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டேன்.  தமிழில் நான் நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன்.  நான் தமிழ் இலக்கியத்தின் சூப்பர் ஸ்டார். பேசி முடித்ததும் என் நண்பர் வந்தார்.  “நீங்கள் உங்களைப் பற்றி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொண்டது மிகவும் ரசக்குறைவாக இருந்தது, அப்படிச் சொன்னது எனக்குப் … Read more

எது எது முதல் முதல்

என்னிடம் உனக்கு எதுயெது முதல்முதல் எனக் கேட்கிறாய் குறைவாய் அணியும் உனது ஆடைகளை சமரசமாய் ஏற்றது முதல் ஸ்பர்ஸம் கொண்டாலே உனக்கு கலவிக்கான மனநிலை வந்து விடுகிறதென்பதால் இன்று உன்னைத் தொடாமலிருந்தது முதல் என்னை நீ அடித்து விளையாடுவது முதல் அக்கார அடிசில் கேட்டேன் கருவாட்டுக் குழம்பு கேட்டேன் விரால்மீன் தலைக்குழம்பு கேட்டேன் மிக நீண்ட காலமாகக் கிடைக்காமலிருந்த ஃபுல்க்காவும் கருப்புக் கொண்டைக்கடலைக் கறியும் கேட்டேன் நானெழுதும் நாவலை என்னோடு சேர்ந்தெழுது என்றேன் கேட்டதெல்லாம் கிடைக்கத் தந்தாய் … Read more