மயன் மாளிகை கட்டுரைத் தொகுப்பு வெளி வந்து விட்டது. அமேஸானிலும் கிடைக்கிறது.
ஜோடிப்புறாவை எங்கே காணோம்? என்ற நாவல் இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடும். ஏப்ரல் முதல் தேதியிலிருந்து முன்பதிவு செய்யப்படும். அடுத்து, கல்ச்சர் வல்ச்சர் என்ற அரசியல் கட்டுரைகளின் தொகுப்பை செப்பனிட்டுக் கொடுத்து விட்டேன். அது இன்னும் இரண்டு வாரத்தில் வரலாம். அடுத்து, தற்சமயம் நாகூர் தம்ரூட்டும் ஆட்டையாம்பட்டி முறுக்கும் என்ற சிறுகதைத் தொகுதியை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். கூடவே, கோடம்பாக்கம் என்ற சினிமா கட்டுரைகளின் தொகுப்பில் முக்கால்வாசி செப்பனிட்டு விட்டேன். எல்லாமே மிகவும் விரைவில் உங்களுக்குக் கிடைக்கும். எழுதுவதை விட செப்பனிடும் பணி மிகவும் கடினமானதாகவும் மிகுந்த உழைப்பைக் கோருவதாகவும் உள்ளது. உதாரணமாக, ஒரு வாக்கியத்தில், ”அங்கே பூலோகத்திலே ஃபாரஸ்ட் எஸென்ஷியல்ஸ்னு ஒரு முக அலங்கார பிராண்ட் ஒண்ணு இருக்கு” என எழுதியிருக்கிறேன். இந்தத் தவறைச் செய்யாத தமிழ் எழுத்தாளரே இல்லை என்ற அளவுக்கு எல்லோருடைய உரைநடையிலும் இதை நான் பார்த்து வருகிறேன். இதை சரி செய்ய வேண்டிய பணி பதிப்பகத்தினுடையது. ஆனால் பதிப்பகத்தினர் செய்ய மாட்டார்கள். காரணம், இருநூறு பிரதிகள் விற்பதற்கே தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்க வேண்டிய நிலையில் அவர்கள் எங்கே எடிட்டர் எல்லாம் வைத்து இந்தக் காரியத்தைச் செய்ய முடியும்? சமீபத்தில் ஒரு நண்பர் அர்பணிப்பு என்று எழுதியிருந்ததைக் கண்டு ரத்த வாந்தி எடுத்தேன். சீக்கிரம் தமிழைக் குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள். சந்தேகமே இல்லை. நண்பரிடம் நான் இது குறித்து இரண்டாயிரம் தடவை புகார் செய்து விட்டேன். என்னை எவனும் இங்கே எழுத்தாளன் என்றே கருதுவதில்லை, நான் என்ன மயிருக்கு இது பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று அவர் நினைக்கலாம். தெரியவில்லை.
என்னுடைய உரைநடையில் ஒரு பிழை கூட இருக்கக் கூடாது என்பதில் நான் மிக கவனமாக இருக்கிறேன்.
என்னுடைய ஒவ்வொரு புத்தகத்தின் பின்னட்டையிலும் என்னுடைய அழகான கையெழுத்தில் புத்தகம் பற்றிய குறிப்பு இருக்க வேண்டும் என்று ராஸலீலா பதிப்பகத்தின் வர்ஷா விரும்பினார். கல்ச்சர் வல்ச்சர் புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பை இங்கே தருகிறேன். கணினி வருவதற்கு முன்பு நான் காகிதத்தில்தான் எழுதிக்கொண்டிருந்தேன். மேற்கத்திய எழுத்தாளர்களைப் போல் டைப்ரைட்டரில் அல்ல. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பக்கங்களை இதே அச்சுக் கோர்த்த மாதிரியான அழகு எழுத்தில்தான் எழுதி வந்தேன். இப்படி நான் எழுதிய ஸீரோ டிகிரி நாவலின் கையெழுத்துப் பிரதி இயக்குனர் ராஜேஷ்வரிடம் உள்ளது. இருபத்தேழு ஆண்டுகளாக அதை அவர் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். அவரைப் பார்க்கும்போது அதைக் கேட்டு வாங்க வேண்டும். விலை மதிக்க முடியாத பொக்கிஷம் அது.
ராஸ லீலா பதிப்பகத்தின் செய்தி:
ராஸலீலா பதிப்பகத்தின் புத்தகங்களை பெற விரும்பும் நண்பர்கள்…
Whatsapp மூலமாக 73396 80708 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புத்தகங்களை நேரடியாக ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
மற்றும் Amazon மூலமாகவும் புத்தகங்களை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்….தற்பொழுது மயன் மாளிகை புத்தகம் விற்பனையில் உள்ளது.
மற்றும் ஜோடிப் புறாவை எங்கே காணோம் ?என்கிற புதிய புத்தகம் தற்பொழுது அச்சில் உள்ளது.
இந்தப் புதிய புத்தகத்தைப் பெற விரும்பும் நண்பர்கள் ஏப்ரல் 1 முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
*குறிப்பு:* புத்தகத்தின் விலை அல்லது Amazon லிங்க் போன்ற கூடுதல் விபரங்கள் தேவைப்பட்டால், மேலே உள்ள WhatsApp எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம்.
கல்ச்சர் வல்ச்சர் என்ற அரசியல் கட்டுரைத் தொகுப்புக்கு நான் எழுதிய குறிப்பு:
