இன்றைய புத்தக விழா (2)

இன்று மாலை நான் மிகவும் சோர்வுடன் தான் தெரிவேன். இரவு முழுவதும் ஒரு நிமிடமும் உறங்கவில்லை. தொடர்ந்து பெற்றுக்கொண்டிருக்கும் அவமதிப்பு காரணம் அல்ல. அந்த அவமதிப்பை என் நண்பர்கள் பொருட்படுத்தவில்லை என்ற வருத்தமும் துக்கமும்தான். பிரச்சினை என்னவென்றால், நான் மஹாத்மாக்களால் சூழப்பட்டிருக்கிறேன். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாணும்படி நன்னயம் செய்து விடுங்கள் என்கிறார்கள். அவர்களும் அப்படியே வாழ்கிறார்கள். அறச்சீற்றம் என்பது கொஞ்சமும் இல்லை. ஜெய்ப்பூரில் ஒரு பிரிட்டிஷ்காரன் சீனியின் மீது இனவாத துவேஷத்தை வீசிய போது அங்கே நான் ஒரு கலகத்தில் ஈடுபட்டேன். நடுக்காட்டில் அவன் வேனை விட்டு இறங்கி ஓடினான். இப்படியெல்லாம் என் நண்பர்கள் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அவ்வளவுதான். வெறும் சொற்கள்தானே, பொருட்படுத்தாதீர்கள் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொண்டு கடந்து போக இயலவில்லை.

அதனால் இன்று நான் டல்லாகத் தெரிந்தால் அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்.