இனி வேண்டாம்…

நீங்கள் ஒரு நாவலை எழுதி முடிக்கிறீர்கள்.  அதற்கு ஒரு வெளியீட்டு விழா நடத்த விரும்புகிறீர்கள்.  தப்பே இல்லை.  நான் பாட்டுக்கு என் எழுத்து உண்டு, நான் உண்டு என்று யார் வம்புக்கும் போகாமல் இருந்து கொண்டிருக்கிறேன்.  உங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைக்கிறீர்கள். அது முதல் தப்பு.  ஏனென்றால், உங்கள் புத்தகத்துக்காக நான் மூன்று தினங்களை இழக்க வேண்டியிருக்கிறது.  அந்த தினங்களில் நான் என்னுடைய புத்தக வேலையைச் செய்திருப்பேன்.  செய்திருந்தால் புத்தக விழாவில் என்னுடைய ஒன்றிரண்டு புத்தகங்கள் கூடுதலாக வெளிவந்திருக்கும்.  அதையெல்லாம் விட்டு விட்டு உங்கள் புத்தகத்தைப் படிக்கிறேன்.  படித்து விட்டு ஒரு முழு நாளும் அமர்ந்து குறிப்புகள் எடுக்கிறேன்.  அதையே பேசுகிறேன்.  நான் பேசுவதே உண்மை, அதற்கு மாற்றுக் கருத்தே இல்லை என்றெல்லாம் நான் பேசவில்லை.  இது ஒரு உரையாடல் என்று வலியுறுத்துகிறேன்.  இதற்கு நூலாசிரியர் பதில் சொல்லி, என்னைத் தன் தரப்புக்கு இழுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று சொல்லி என் வாதங்களை முன் வைக்கிறேன். 

ஆனால் நீங்களோ அந்த மேடையில் நான் உங்களுக்கு ப்ளோ ஜாப் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறீர்கள்.  அது நடக்கவில்லை.  என் எழுத்து அனுபவமே ஐம்பது ஆண்டுகள்.  ஆனால் உங்கள் வயதே இன்னும் ஐம்பதை எட்டவில்லை. 

நீங்கள் எழுதியது ஒரு ஆனந்த விகடன் தொடர்கதை. ஸ்டெல்லா ப்ரூஸ் விகடனில் எழுதும் கதைகளில் கூட கொஞ்சம் ’நுவான்ஸ்’ இருக்கும்.  உங்கள் நாவலில் ஒரு இடத்தில் கூட அந்த ’நுவான்ஸ்’ இல்லை. நீங்கள் எழுதியிருப்பது ஒரு பக்கா ஜனரஞ்சக நாவல்.  வெப்சீரீஸாக எடுத்தால் சக்கை போடு போடும். 

நான் பேசியதற்கு பதிலாக நீங்கள் பேசியது எனக்குக் கிடைத்த செருப்படி போல் இருந்தது.  “இப்படித் திரும்பத் திரும்பப் போய் எவனிடமாவது எவளிடமாவது செருப்படி வாங்க உனக்கு வெட்கமாக இல்லையா?” என்று அவந்திகா கேட்டாள்.

இல்லை என்று நினைத்துக்கொண்டேன்.  எனக்குக் கிடைக்கும் செருப்படிகளை நான் மலர்மாலைகளாகக் கருதுகிறேன்.  என்னை அவமதிப்பவர்களே என்னை அவமதிப்பதன் மூலம் அவமானமடைகிறார்கள். நான் அல்ல.  எந்த அவமதிப்பும் எனக்கு அவமதிப்பு அல்ல.  நான் இது போன்ற சில்லறைகளையெல்லாம் தாண்டியவன். 

இனிமேல் என்னை யாரும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைக்காதீர்கள்.  ஏனென்றால், நிகழ்ச்சியை அறிவித்த பிறகுதான் எனக்கு புத்தகமே கிடைக்கிறது.  புத்தகம் என் விருப்பத்துக்கு உரியதாக இல்லாவிட்டால், நிகழ்ச்சியில் வந்து என்னால் பொய் சொல்ல முடியாது.  புத்தகம் நிகழ்ச்சி அறிவிப்புக்கு முன்பே கிடைத்தால் இதில் நான் கலந்து கொள்ள முடியும், முடியாது என்று சொல்லி விடுவேன்.

மேலும், இது போன்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் பேச எனக்குக் கட்டணம் ஐம்பதாயிரம் ரூபாய் என்று சொல்லியிருக்கிறேன்.  ஒருவரும் அது பற்றிக் கவலைப்படுவதில்லை.

நான் பேசிய பிறகு இறுதி உரையாக நூலாசிரியர் பேசுகிறார்.  இறுதி உரை என்பதால் சூப்பராக என்னை assfuck பண்ண முடியும்.  அந்த அவதூறுகளுக்குப் பதில் சொல்ல எனக்கு வாய்ப்பு இல்லை.  இனிமேல் இது போன்ற விழாக்களில் எனக்கும் பதில் சொல்வதற்கு வாய்ப்பு வேண்டும்.  இந்த எழவெல்லாம் எதற்கு?  இனி என்னை எந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் அழைக்காதீர்கள்.