அகராதிகளின் சமீபத்திய பிற்சேர்க்கை

உறவு — பொய்களின் முகமூடி அண்டை வீட்டார் — கண்ணில் புழுதி தூவும் நிழல்கள் குழந்தைகள் — அறியாமையின் துளிர்கள் செல்லப் பிராணி — அபத்தத்தின் குறியீடு தெருப்பிராணிகள் — அவலத்தின் அடையாளம் பிச்சைக்காரர் — சமூகத்தின் சீழ் ஏழை — விதியின் பொம்மை உழைப்பாளி — எந்திரங்களின் அடிமை ஆசிரியர் — பிளாஸ்டிக் குவளைகளை உருவாக்குபவர் ரவுடி — கத்தியில் கட்டப்பட்ட மனிதத்தின் எச்சம் ஞானி — மௌனத்தின் புதிர் தீர்க்கதரிசி — கனவுகளின் விற்பனையாளன் … Read more

ஒரு காட்சி

பெங்களூர் ரயில் நிலையம்.வந்தே பாரத் ரயிலுக்காகநிற்கிறேன்.அப்போது ஒரு காட்சி: இளம்ஜோடி,நவீன உடைகளில். அவள் அழுது கொண்டே,முத்தங்களைப் பரிமாறி,ரயிலில் தனித்து ஏறுகிறாள்.ஏறிய பின்னும் கண்ணீர்அடங்கவில்லை என்பதைக்கண்டேன் சங்க காலப் பெண்டிருக்குத்தம் காதலனைப் பிரிந்துவளை கழன்று விழுந்தகதையெல்லாம் மனதில்தோன்றியது என் நண்பன் சொல்கிறான்,‘தற்கொலை செய்துகொள்ளலாம் போலிருக்கிறது,பைத்தியம் பிடித்துவிடும்போலிருக்கிறது’என்று. ’காதல் தோல்வியா?’ ’இல்லை. வெறும் பிரிவு,காதலி வெளியூரில்’ தாய்க்கு மகனையும் பேரர்களையும்,தந்தைக்கு மகளையும் பேரர்களையும்,காதலிக்குக் காதலனையும்காதலனுக்குக் காதலியையும்பிரிய முடியவில்லை. நண்பன் தற்கொலை என்றுபுலம்புகிறான். என் செல்லப் பிராணியைப்மரணத்திடம் தந்த போதுஎனக்கும் அப்படித்தான்இருந்தது. … Read more

இரண்டு திரைப்படங்கள்

நேற்று நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஈடி என்ற மலையாளப் படத்தைப் பார்க்க முயன்றேன். பத்து நிமிடம்கூட பார்க்க முடியவில்லை. சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. பத்தே நிமிடத்தில் (கக்கூஸில் ஒளிந்து கொள்ளும் காட்சி) ஓடி விட்டேன். இத்தனை சிறுபிள்ளைத்தனமாக தமிழ் சினிமாகூட இருப்பதில்லை. ப்ளூசட்டை மாறனின் பரிந்துரையில் இன்று டௌன்ரேஞ்ஜ் என்ற படம் பார்த்தேன். இப்படி ஒரு த்ரில்லரை இதுவரை பார்த்ததில்லை. மை நேம் இஸ் டெவில் அளவுக்கு இருந்தது. மை நேம் இஸ் டெவிலில் கதை இருந்தது. … Read more

அணில் என்னும் சிநேகம்

மானுடரோடு பேசுவதில் மனம் களைத்துஅந்தக் கானகத்தின் மௌனத்தில்ஒரு பாறையின் குளிர்ந்த தோளில்என் தனிமையை சாய்த்திருந்தேன். அப்போது ஒரு அணில் குஞ்சுஇலைகளினூடாக நடனமாடியபடிஎன்னருகே வந்துஅங்கே இறைந்து கிடந்த சொற்களைஒளிரும் முத்துக்களெனஒவ்வொன்றாய்ப் பொறுக்கியெடுத்துஅதன் மென்மையான வாலால் துடைத்து,என் முன்னே அடுக்கியது. நான் கேட்டேன், “எதற்கு இந்த முயற்சி,என் சொற்களை நீ ஏன் தேடுகிறாய்?” அது சிரித்து, “உன் மௌனம் பேச,இது எனது சிறிய காணிக்கை” என்றது நான் நன்றி சொல்லும் முன்நிழலென உருண்டு வந்தவொருகாட்டுப்பூனை அந்த அணிலைக்கவ்விக்கொண்டு கானகத்தின்இருளில் மறைந்தது … Read more

மாயத்திரை

ஊருக்குப் போயிருந்தாள் மனையாள்ஒரு மாதம்உன் நண்பர் யாரும் இங்கேவரலாகாது, இதுயென் உத்தரவென்றாள் சரியென்றேன்வேறென்ன சொல்ல? மனையாள் சொல்வதெதையும்கேட்டதில்லை நண்பர்கள் வந்தார்கள்இருவர்இரண்டு நாள் தங்கி விட்டுச்சென்றார்கள் பிறகுதான் கண்டேன்படுக்கையறைத் திரைச்சீலைமுன்பக்கம் பின்பக்கமாகியிருந்ததுகவனமாகக் கேளுங்கள்திரைச்சீலை ஒன்றல்லஇரண்டுஒரு திரைச்சீலை மட்டும்மாறியிருந்ததுஇடப்பக்கத் திரைச்சீலைஒரு வண்ணம்வலப்பக்கத் திரைச்சீலைஇன்னொரு வண்ணம்புரளாமல் இருந்திருந்தால்இரண்டும் ஒரு வண்ணம் மனையாள் வந்தால்இது என்னவென்று கேட்பாளாமாட்டாளா இது என்னடா சங்கடமென்றுநண்பர்களிடம் கேட்டேன் தெரியாதே என்றனர் இந்தச் சிக்கலைவிடுவிப்பதெப்படியெனசாளரத்தில் வந்தமர்ந்தமைனாவிடம் கேட்டேன் இதெல்லாம் ஒரு பிரச்சினையாஒரு தச்சனையழைத்துசரி செய்யென்றது மைனா சொன்னபடிசெய்தேன் மறுநாள் … Read more

பராரி

1 காந்தியைக் கண்டதில்லைஞானிகளின் முகமறியேன்சூஃபிகளின் சொல்லறியேன்அதிசயங்கள் பற்றிப் படித்ததோடுசரி மனையாள் சொன்னாள்:“ஒரு ஞானியைக் கண்டேன்எல்லோரையும் கட்டியணைத்தார்கட்டியணைத்தவரெல்லாம்மயங்கி விழுந்தார்”என்னையும் கட்டிணைத்தார்மயக்கமில்லைஅவர் அடித்திருந்த Brutநறுமணம் மட்டும் மனதில்தங்கியது ‘நீவிர் அடிக்கடிதொலைக்காட்சியில் தோன்றுவீர்’என்றார் ஆசி வழங்கும் வேளையில்இன்று அவர்பணமோசடியில் கம்பி எண்ணுகிறார்அதிசயங்களில் என் அனுபவம்இத்தோடு முடிந்தது ஆனாலும் எனக்கு அதிசயங்கள் மீதானஆர்வம் குறையவில்லைததாகதர் முதல் ரமணர் வரை 2 சத்திய லோகத்தில்தான் அதிசயங்கள்உண்டு என்றொரு நாள்கனவு கண்டுசத்திய லோகம் புறப்பட்டேன் நம்ப முடியாததொரு பாழ்வெளிசெவிகள் கிழிபடும் மௌனம்பஞ்சத்தில் மாண்டஎலும்புக்கூடுகளின் குவியல்உயிர் பிழைத்திருந்தோர்முனகியதைக் … Read more