லயம்
அதிகாலைப் பறவைகள்உத்தரவின்றிப் பாடுகின்றன,காற்றில் இலைகள் அசைகின்றனசூரியன் உதிக்கிறது, மறைகிறது,நிலவு தேய்கிறது, வளர்கிறது,இயற்கை தன் தாளத்தில் ஆடுகிறது.பெண்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்,அல்லதுஹெலிகாப்டரில் திருமணம் செய்யலாமா என்கின்றனர்உயிர்கள் இனப்பெருக்கம் செய்கின்றனமனிதர்கள் பணத்தைத் துரத்துகிறார்கள்,அதிகாரத்தைத் தேடி ஓடுகிறார்கள்புகழின் மீது மயங்குகிறார்கள். ஆண்கள் பெண்களைத் தேடுகிறார்கள்ஆண்களும் பெண்களும் பால்பேதமில்லாமல்காதல் தோல்வியில் மனம் உடைகிறார்கள்உறக்கமின்மையில் உயிர் துவள்கிறதுவெறுப்பில் கொலைகள் பிறக்கின்றன.காமம் வெறியாகி வன்கலவியில் முடிகிறதுமற்றவர் துன்பத்தில் இன்பம் காண்கிறார்கள்நோயில் வாடுகிறார்கள்நோய் முற்றிச் சாகிறார்கள்மகிழ்ச்சியில் நடனம் பிறக்கிறதுஇன்பத்திலும் துன்பத்திலும் பாடல் ஒலிக்கிறது. நாய் நன்றி நவில்கிறதுபூனை துயரத்தில் … Read more