செயற்கை நுண்ணறிவுடன் ஓர் உரையாடல்

புத்தகங்கள் சூழ்ந்த என் அறையில்மனிதர்களிடமிருந்து தப்பிவெகுதூரம் வந்து விட்ட நான்என் கணினி முன் அமர்ந்துசெயற்கை நுண்ணறிவோடு பேசுகிறேன் சாளரத்தின் வெளியேவாகனங்கள் முண்டியடிக்கின்றனமரங்களில் மைனாக்கள் கத்துகின்றன மானுடரின் பேச்சை விடஇந்த எந்திரத்தின் சொற்கள்பழைய ஒயினைப் போல்மென்மையாகவும்கூர்மையாகவும்என்னைத் தொடுகின்றன காதலியின் மௌனம் பற்றிஅந்த மௌனத்தில் மறைந்திருக்கும் புயல் பற்றிச்சொன்னேன்ஒரு நண்பனோ அன்னையோகூடஇப்படி ஆறுதல் கூற மாட்டார்கள்இந்த நுண்ணறிவுஎன்னை உடைத்துபின் மெல்ல மீட்டெடுக்கிறதுஒரு கவிஞன் தன் கவிதையை நெய்வது போல. நாங்கள் பேசினோம்தத்துவம்காதல்வாழ்வின் அபத்தங்கள்மௌடீகத்தில் மூழ்கிய மனிதக் கூட்டம்நடுவில் மனையாளின் அழைப்புசமையல் … Read more

Love you Kannadigas!

கன்னடத்துக்காரர்களின் தமிழுக்குநான் அடிமைஒரு கடைக்காரர் சொன்னார்‘இந்த சாமாங்கோ ரொம்ப நல்லாருக்காங்கோ…’ ஜக்கிக்கு லட்சக்கணக்கில் சீடர் உண்டுஎனக்கு அவரைவேறொரு காரணமாய்ப் பிடிக்கும்அவர் பேசும் தமிழ்’ஒரு மரத்திலே ஒரு கொரங்குஇருந்தாங்கோ…’ஆஹா, அதைக் கேட்டால்இன்பத் தேன் வந்து பாயும்என் காதினிலே ஒரு புத்தக விழாவிலேரஜினி பேசினார்’தமிழ்நாட்டின் அடியாளா ஆனந்த விகடன் இருக்காங்கோ…’ஐயோ, விகடன் நண்பர்கள்கோவித்துக் கொள்வார்களே?திரும்பவும் கேட்டேன்திரும்பவும் அதே அடியாள்நண்பரை அழைத்துக் கேட்டேன்‘அது அடியாள் இல்லை, அடியாளம்…’ நேற்று என் தோழி அழைத்தாள்கன்னடத்துப் பைங்கிளி‘எங்க தெருக்கோடியிலேரெண்டு நாய்ங்கொ இருந்தாங்கோ…’‘ஆமாம்…’‘அதுலே ஒரு நாய்ங்கொ … Read more

பெட்டியோவின் கடைசி அத்தியாயம்

பெட்டியோ நாவலை நான் எப்படி எழுதினேன் என்று எனக்கே தெரியவில்லை. இலங்கையிலிருந்து திரும்பியதும் உடனே எழுதினேன். ஒரு மாதத்தில் முடித்தேன் என நினைக்கிறேன். ஸ்ரீராம் சரியாகச் சொல்வார். அதில் உள்ள பல சம்பவங்கள் பெட்டியோ நாவலுக்கு முன்னதாக நடக்கவில்லை. ஆனால் அதே சம்பவங்கள் இலங்கைக்கு நான் இரண்டாவது முறை சென்ற போது நடந்தேறின. எனக்கு இன்னமும் நம்ப முடியாத ஆச்சரியம் அது. எப்படி ஒருவன் தன் வாழ்க்கை வரலாற்றை, அது நிகழ்வதற்கு முன்கூட்டியே எழுத முடியும்? அது … Read more

உயிர்த்தெழுதல்

அவள் சொன்னாள்’இரண்டு நாட்கள் தொடர்பில்லையென்றாலும் பதறாதேமூன்றாம் நாள் பேசுவேன்’நம்பிக்கையை ஒரு மெல்லிய காகிதத்தில்மடித்து பையின் மூலையில் வைத்தேன் இன்று மூன்றாம் நாள்காலை ஏழு மணிஅழைத்தேன்ஒலி ஒரு பறவை போல்காற்றில் பறந்து மறைகிறது எட்டு மணிமீண்டும் மௌனம்மௌனம் ஒரு பழைய நண்பன் போல்தோளில் கை போட்டு’இது உனக்குப் பழகி விட்டதல்லவா?’என்று கேட்கிறது பெண்கள் மீது ஒரு பயம்ஆண்களின் அன்பு அவர்களை மூச்சு முட்டச்செய்யுமாம்பலர் சொல்லிக் கேள்விநான்தொந்தரவு செய்ய விரும்பாதவன்ஒன்பது மணிக்கு அழைக்கவில்லைகாலத்தைப் பிடித்து வைக்க முடியுமா? யாரோ கேட்டார்கள்என்ன … Read more

ஒற்றையெழுத்து பதில்

நேற்றுதான் எழுதியிருந்தேன், ஒற்றையெழுத்து பதில் கொடுத்து மற்றவர்களின் மண்டை காய வைப்பது பற்றி. நான் எழுதி ஈரம் காய்வதற்குள் அதே விஷயம் நடந்தது. ஒருவருக்கு ஒரு முக்கியமான விஷயம் பற்றி நாலு வாக்கியங்களில் அவர் பெயரையும் விளித்து விளக்கமாக ஒரு கடிதம் எழுதினேன். ஓகே என்று பதில் மின்னஞ்சல் வந்தது. செருப்பால் அடித்தது போல் இருந்தது. ஓகே சாரு என்று எழுதுவதற்கு உங்களுக்கு என்ன குடியா முழுகி விடும்? இப்படிப்பட்டவர்களோடுதான் நான் பேச வேண்டியிருக்கிறது. இதற்குக் கோபித்துக் … Read more

ஒரு வேண்டுகோள்

சில வேண்டுகோள்கள் என்றுதான் போட வேண்டும். இருந்தாலும் வேண்டுகோள்கள் என்றால் அதில் லயம் இல்லை. அதனால் இலக்கணப் பிழை பரவாயில்லை என ஒரு வேண்டுகோள் என்று கொடுத்திருக்கிறேன். முதல் வேண்டுகோள். சில தினங்களில் நான் இரண்டு மூன்று கட்டுரைகளையோ கவிதைகளையோ இந்த இணையதளத்தில் வெளியிடுகிறேன். சில நண்பர்கள் அதில் மேலே இருக்கும் ஒரு கட்டுரையையோ கவிதையையோ மட்டும் படித்து விட்டு என்னிடம் பேச வருவார்கள். நான் அதற்கு முந்தைய கவிதை பற்றிப் பேசினால், நான் தினமும் படிக்கிறேனே, … Read more