நாய் படும் பாடு (எதிர்க் கலாச்சாரம் – 2)

தோழி, இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்து போனேன். நீ பேசும் போது நான் எழுதிய – அதாவது, இடுப்புக்குக் கீழே அடித்துக் கொன்ற நவீன தீண்டாமை என்ற கட்டுரையில் அந்த இசை விமர்சகரை நாய் என்று குறிப்பிட்டு எழுதியதெல்லாம் அநியாயத்திலும் அநியாயம் என்றாய். எனக்கு நாய் என்றால் உயிர். யாரையுமே நான் நாய் என்று திட்ட மாட்டேன். ஆனாலும் நீ சொன்னதால் மௌனமாகவும், அதே சமயம், நாய் என்று சொல்ல மாட்டேனே என்று முணகியும் மருகினேன். … Read more

எதிர்க் கலாச்சாரம் ரவுடித்தனம் இல்லை!

இன்று ஒரு தோழி ஃபோனில் அழைத்தார். சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். மாதாமாதம் எனக்குத் தேவையான அலோபதி மருந்துகளை பல ஆண்டுகளாக அனுப்பிக்கொண்டிருப்பவர். அவர் சொன்ன விஷயங்களுக்கு நான் அவருக்கு ஒரு மின்னஞ்சல் போடலாம். ஆனால் அவர் சொன்னது எல்லாமே ”நான் கொடுத்த பணத்தை நீ திருப்பவில்லை” என்பது போன்ற தனிப்பட்ட விஷயங்கள் அல்ல. எல்லாமே என் இயக்கம் சம்பந்தப்பட்டவை. எல்லாமே என் எழுத்து சம்பந்தப்பட்டவை. மேலும், இதையேதான் அவர் … Read more

ஒரு முடிவு: எல்லோரும் இன்புற்றிருக்க…

நவீன தீண்டாமை என்ற கட்டுரையை நீக்கி விட்டேன். அது அதில் சம்பந்தப்பட்ட நபரை மட்டுமல்லாமல் மற்ற பலரையும் புண்படுத்தி, அவர்களுக்கு வேறு பல சங்கடங்களையும் விளைவித்திருக்கிறது என்று அறிகிறேன். முட்டாள்களே ஒரு சாதாரண ஆளை அறிஞர் என்றும், படுமுட்டாள்களே அவரை பேரறிஞர் என்றும் சொல்வார்கள் என்று அண்ணாதுரை இறந்த போது சொன்னவர் ஜெயகாந்தன். அதேபோல் சிவாஜி கணேசனின் பாராட்டு விழாவில் சென்று கலந்து கொண்டு, சிவாஜியின் நடிப்பு பற்றி மிக மோசமாகப் பேசி உயிராபத்துடன் தப்பி வந்தவர் … Read more

நவீன தீண்டாமை

(ஒரு மணி நேரத்துக்கு முன்னால் இந்தக் கட்டுரையை தளத்திலிருந்து நீக்கியிருந்தேன். ஆனால் மீண்டும் மீண்டும் யோசித்த போது இதில் உள்ள எந்த விஷயமும் முடக்கப்பட வேண்டியதில்லை என்று தோன்றியதால் மீண்டும் இதைப் பதிவிடுகிறேன்.) இப்போது எழுதப் போகும் விஷயத்தைப் படித்ததும், ஒரு நற்செயலைத் தொடங்கும்போது எதிர்மறையான ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமா என்று நண்பர்கள் பலருக்குத் தோன்றும்.  சிலருக்கு மனவருத்தமும் கோபமும் ஏற்படலாம்.  அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது.  பந்தை சுவரில் அடித்து விட்டீர்கள்.  பந்து … Read more

இன்றைய இந்தியா

Hello sir good evening ..trust you are doing well..just saw the video in Shruthi tv on sisu chellappa.where can I get the குறு நாவல் ஜீவனாம்சம் ஒரு வாசகரிடமிருந்து எனக்கு வாட்ஸப்பில் வந்த செய்தி மேலே உள்ளது. பெயரையும் ஊரையும் வெளியிடாமல் வைக்கிறேன். சீனி, உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும்போது எனக்கு நீங்கள் ஒரு கோல்ட் மெடலோ அல்லது அதை விட பெரிய பரிசாகவோ கொடுக்க வேண்டும். டிஜி … Read more

இறைவிக்கு அளிக்கப்பட்ட அப்பம்

இறைவி!காற்றின் றெக்கைகளில் பறந்துமலர்களின் ரகசியங்களைச் சொன்னஎன் கவிதைகள்: இந்தப் பூமியின் களமாகமழைத் துளிகளால் நனைந்து,காற்றின் ஸ்பர்ஸத்தினால் நடுங்கும்என் உடல் அடர்ந்த இரவின்நட்சத்திரங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகமௌனத்தின் ஆழத்தில் மூழ்கிஒளியின் தேடலில் தவிக்கும்என் ஆத்துமா பூமியின் இருமுனையில் ஓடும்சிவந்த நதியாக,உன் உதடுகளில் தவழ்ந்து,புனிதமான பனியாக உருகி,பூமியின் இதயத்தில் தூங்குகிறது.என் குருதி பாறையில் செதுக்கப்பட்ட புராணம்உன் விரல்களின் தொடுதலில்பறவையாக மாறிஅனந்தத்தின் வானில் பறக்கிறதுஎன் எலும்பு நெருப்பின் மையத்தில் மறைந்த விதைஉன் மௌனத்தில் முளைவிட்டுஒரு மலராகஎல்லையற்ற இரவில் பூக்கிறதுஎன் எலும்பின் மஜ்ஜை என் … Read more