தூத்துக்குடி கொத்தனாரு…

தூத்துக்குடி கொத்தனாரு பாடல் கேட்டேன். இசைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை பாடல் வரிகளுக்குக் கொடுக்கவில்லை. பொதுவாகவே சினிமா பாடல் வரிகள் காலியான இடங்களை வார்த்தைகளால் நிரப்பும் வேலையாகத்தான் இருக்கின்றன என்பதால் இதில் எதுவும் ஆச்சரியம் இல்லை. ஆனால் தூத்துக்குடி கொத்தனாரு பாடல் இசையால் பிரபலம் ஆகவில்லை. அதன் பாடல் வரிகளால் பிரபலம் ஆகியிருக்கிறது. அநேகமாக பெண்ணின் ஜனன உறுப்புக்கான லோக்கல் வார்த்தையைப் போட்டு எழுதப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் இதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் … Read more

தில்லையின் விடாய் மற்றும் தாயைத்தின்னி: இன்றைய விழா

இன்று சென்னை மைலாப்பூர் கவிக்கோ அரங்கில் மாலை ஐந்து மணி அளவில் நடக்க இருக்கும் தில்லையின் நூல்கள் குறித்த விழாவில் சில தவிர்க்க இயலாத காரணங்களால் கலந்து கொள்ள இயலாத நிலையில் இருக்கிறேன். தாயைத்தின்னி வெளியான அன்றே அதை ஒரு பிரதி வாங்கியிருந்தேன். வாங்கி ஐந்தே நிமிடத்தில் ஜா. தீபாவிடம் கொடுத்து விட்டு நான் இன்னொரு பிரதி வாங்கிக்கொண்டேன். இந்த நாவலை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும் என்று ஜா. தீபாவிடம் கேட்டுக்கொண்டதும் ஞாபகம் இருக்கிறது. இன்றைய … Read more

சிவராத்திரியும் விரால் மீன் குழம்பும்…

சில ஆண்டுகள் நான் சென்னை மௌண்ட் ரோடிலுள்ள தலைமைத் தபால்துறை அதிகாரி (Chief Postmaster General) அலுவலகத்தில் ஸ்டெனோவாக வேலை செய்தேன். அப்போது என்னோடு சக ஸ்டெனோவாகப் பணிபுரிந்தவர் சீனிவாசன். அக்கால கட்டத்தில் எனக்கு எத்தனையோ உதவிகள் செய்தவர். அந்த உதவியை நான் ஒருபோதும் மறக்க இயலாது. அதற்குப் பிரதியாக நான் நல்ல நிலைக்கு வந்ததும் அவருக்கு எதுவும் செய்யவில்லை. செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர் பெயரையே என் கைத்தொலைபேசியில் block பண்ணி வைத்து விட்டேன். காரணம் பின்னால் … Read more

நான் ஒரு ஊழியக்காரன்

சமீபத்தில் ஒரு வாசகர் டியர் ஜிந்தகி என்ற படத்தின் கடைசிக் காட்சியின் காணொலியை அனுப்பி, அது தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், இன்றைய சமூக எதார்த்தத்தை கண்ணாடி போல் பிரதிபலிப்பதாக இருப்பதாகவும், படம் முழுக்கவும் பார்க்காவிட்டாலும் இந்தக் காட்சியை மட்டுமாவது பார்க்குமாறும் எழுதியிருந்தார்.  குறிப்பிட்ட காட்சியைப் பார்த்த போது இரண்டு மனநோயாளிகள் பேசிக் கொள்வது போல் இருந்ததால், படத்தையும் முழுசாகப் பார்த்துத் தொலைத்து விடுவோம் என்று பார்த்தேன்.  வாசக நண்பர் சொன்னது உண்மைதான்.  மற்ற ஹிந்தி ஃபார்முலா கதைகளிலிருந்து … Read more

பெட்டியோ வாசிப்பு அனுபவம்: வளன் அரசு

சாருவின் பெட்டியோ நாவலை மிகத் தாமதமாக வாசித்தேன். இப்படி ஒரு நாவல் வெளிவந்த பிறகு எப்படி பேசுபொருள் ஆகாமல் போனது என்று வியப்பாக இருந்தது. ஆனால் அப்படி பேசுபொருள் ஆகியிருந்தால் தமிழர்கள் வாழ்வியலில் அடுத்தகட்ட நகர்வு வந்துவிட்டார்கள் என்றாகிவிடும். ஆகவே பெட்டியோ இப்படி தண்ணீரில் கிடக்கும் கல்லாக இருப்பதில் ஆச்சரியமில்லை. பெட்டியோ வாசித்தபோது சாருவின் நாவல்களில் இதுதான் சிறந்தது என்று சொல்லத் தோன்றுகிறது. ஸீரோ டிகிரி படித்த போது ஏற்பட்ட பரவசம் அப்படியே இந்த நாவல் வாசிக்கும் … Read more