சொல்

ஒரு பெண் என்னை அவமதித்தாள் அதை என்னிடம் நீ சொன்னாய் புகாரொன்றுமில்லை ஆனால் அதைச் சொன்னபோது நீ சிரித்தாய் அதனால்தான் காயமுற்றேன் பிறகு எல்லாம் மறந்தும் போனேன் ஆனால் அன்று மாலை என் கைகால்கள் நடுங்கத் தொடங்கின நா உலர்ந்து போனது கண்களிலிருந்து கொட்டிய நீரை அடக்கவும் திறனற்றேன் செய்து முடிக்கக் காத்துக் கிடந்த பணிகள் ஏராளம் எதுவும் நடக்கவில்லை அசைவற்றுக் கிடந்தேன் உன்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன் வார்த்தை எழவில்லை ஆனால் உன் குரல் கொஞ்சம் … Read more

தாயே!

இதுவரை இப்படி நின்றதில்லை எப்போதும் என் உடலை பொய்மேகங்களால் மறைத்துக்கொண்டே இருந்திருக்கிறேன் சமயங்களில் மேகம் கலைந்து என் மேனியின் சில துளிகள் தெரிந்ததுண்டு அதைக் கண்டு பரிகசித்தோர், அவமதித்தோர் பலருண்டு இப்போது மோகினிக்குட்டீ உன் முன்னே மேகம் கலைத்து நிர்வாணம் கொண்டு நிற்கின்றேன் ஏன் இதுவரை பொய்மேகம் அணிந்தாய் என்கிறாய் தெரியவில்லையே தாயே யோசி யோசி யோசி ’என் நிர்வாணம் கண்டு அவர்கள் பார்வை பறிபோகுமென்று அஞ்சினேன்.’ ’அப்புறம் என்னிடம் மட்டும் ஏன் மேகம் கலைத்தாய்?’ ‘நீயும் … Read more

நிழல்களின் கூட்டம்

மனைவியின் குடும்ப சுபவிழா ஒன்றிற்கு அவனும் சென்றிருந்தான் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறி எல்லோரும் முதல் மாடியிலிருந்த மண்டபத்துக்குச் செல்வதைக் கண்டான் மத்திம வயதுக்காரர்களால்கூட இளைஞர் துணையின்றி ஏற முடியவில்லை எழுபத்து மூன்று வயதான அவனால் அந்தப் படிக்கட்டுகளில் லகுவாகவே ஏற முடிந்தது ஆண்களில் பலர் நெற்றியில் குலச்சின்னம் தரித்து மெல்லிய வேட்டியணிந்து அதனொரு பாகத்தை இடுப்பில் செருகியிருந்தார்கள் மேலே சட்டையில்லை இதைத்தான் அக்காலத்து ஐரோப்பியர் அரைநிர்வாணப் பக்கிரிகளென்றார்கள் போலும் இந்த வெய்யிலுக்கு இதுதான் உகந்த உடை தடையேதுமில்லை … Read more

சும்மா இருந்தவனின் காலம்

முதல் மாடியிலிருந்த என் நண்பனின் வீடு மேஜையோ நாற்காலிகளோ இல்லை தரையில் அமர்ந்தபடி காலை பத்து மணியிலிருந்து வைத்த இடத்தில் வைத்தபடி எழுதிக்கொண்டிருக்கிறாள் மோகினிக்குட்டி தட்டச்சு செய்துகொண்டே இடையிடையே பேசுகிறாள் சும்மா இருக்கும்போது இன்னொன்றில் ஈடுபட இயலாது என்கிறேன் மாலை மங்கி இரவு சூழ்கிறது எட்டு மணி நேரமாக உன் அருகே வைத்த இடத்தில் வைத்தபடி அமர்ந்திருக்கும் என்னைப் பார்த்து ஏன் சும்மா இருக்கிறாய் ஏதாவது பேசு என்கிறாய் சும்மா இருக்கும்போது எப்படிப் பேசுவது என்கிறேன் நீ … Read more

காலன்

காலத்தைக்கால்பந்தாக்கி விளையாடிஇறுமாந்து கிடந்திருந்தேன் இப்போதுஉன் வருகைக்குப் பிறகுஉனக்கும் எனக்குமானகால இடைவெளியின்பூதாகாரம் கண்டு,எந்தக் கவலையுமில்லாமல்காலத்தை அளந்துகொண்டிருந்தமணற்கடிகையைஉடைத்து விட்டேன்இப்போதுஎண்ணிறந்த மணற்துகள்கள்முள்ளில்லாத கடிகாரமென எரிந்துகொண்டிருக்கிறதுசூரியன்

மூன்று கவிதைகள்

1.இளம் கவிஞர்களுக்கான ஆலோசனை இளம்கவிஞர்களுக்கான ஆலோசனையில் எதிர்கவிதை எழுதிய நிகானோர் பார்ரா சொன்னது என்ன? கவிதையில் எல்லாமே அனுமதிக்கப்பட்டதுதான் ஒரே நிபந்தனை, பக்கங்கள் நிரப்பப்பட வேண்டும். பார்ராவின் ஆலோசனைக்கு ஓர் பின்குறிப்பு: பக்கங்கள் நிரப்பப்பட வேண்டும், குருதியினாலும் ஆன்மாவினாலும்; குசுவினால் அல்ல. 2. பால்பிடேஷன் 1பாவமன்னிப்பு வழங்குகின்றபணியில்யாருமே சேர்வதில்லை.எத்தனையோ சலுகைகளைஅள்ளித் தருவதாகஅறிவித்தும்பொருட்படுத்த யாருமில்லைஒரு கட்டத்தில்அந்தப் பணியையும்தானே செய்யத் தொடங்கினார் கடவுள்.துவக்க விழாச் சலுகைகள்எக்கச்சக்கம் எனவிளம்பரங்கள் கண்ணைப் பறித்தனஊரே திரண்டுகடவுள் முன் நின்றது{நீண்டு கிடந்த வரிசையில்கவிஞர்களையும் சிறார்களையும் தவிரமற்றெல்லோரும் … Read more