ஒரு குப்பி வைன்

தாய்ப்பூனையின் கதறல்ஆக்ரோஷமாய் அலையுறுகிறதுஇழந்த குட்டிகளின் நிழல்என்னை இருளில் துரத்துகிறது. மறதியின் மந்திரத்தைத் தேடிஅலைகிறேன்வைனின் மயக்கத்தில்வலியை மறக்கலாம் எனப்பார்த்தால் எனக்கு முன்னேவெறும் காலிக் குப்பிகள் கைகளில் கனவைத் தவிர வேறில்லைஇரு குப்பிகளில் மிச்சமிருந்தசொற்பத் துளிகளைகோப்பையில் ஊற்றினேன்அரைக் கிண்ணமே தேறியது. அப்போதே சொன்னான் கொக்கரக்கோபத்துப் பதினைந்து போத்தல்வாங்கி வை என்று. இந்த விஷயத்தில் நானொருசராசரி இந்தியன் ’இன்று குடிப்போமா?” என்பான் அவன். நண்பன் மறுப்பான்,“என்னை விட்டுவிடு.” ஆனால், இரவின் எட்டாம் மணியில்,போத்தல் திறந்தவுடன்,’எனக்கும் கொஞ்சம்,” என்பான்அதே நண்பன் அன்றைய இரவுநண்பனுக்குக்குடியே … Read more

கல்லறையிலே உறங்கும் பிரேதம்

நான் துயரக் கதை சொன்னால்சிரிக்கிறது கூட்டம்கண்ணீரில் கட்டப்பட்டசார்லியின் மௌனக் காமெடி போல ஆனால்பிராணிகளின் கதை கேட்டுரணமாகிறது மனம்மோகினிக்குட்டி என் உயிரின் துடிப்புஅவள் கூறினாலும்அந்தக் கதைகளைக்கேட்க முடியவில்லைதாங்க முடியவில்லை இனிய கதைகளும் வேதனையே…பூனைகளுக்கு மனித மொழி புரிகிறதாம்நாயின் அறிவோடு கேட்கிறதாம்காணொலி அனுப்பியிருந்தாள் மோகினி,பார்க்காமலே நீக்கி விட்டேன்பிராணிக் கதை கேட்டாலேஇதயம் உறைந்து போகிறது குறிப்பாக பெண்பூனைக்கதைகள் வாழ்நாள் பூராவும்கர்ப்பம் சுமந்தே திரிகின்றனகுட்டிகளை ஈன்றதும் அதைப்பாதுகாக்க வேண்டும்மழையிலிருந்தும்மனிதனிடமிருந்தும்பிற மிருகங்களிலிருந்தும்கொசுக்களிடமிருந்துகூடகுட்டிகள் உறங்கும் நேரமெல்லாம்விழித்தபடிஅமர்ந்திருக்கும் தாய்ப்பூனை குட்டிகள், தத்தித் தவழ்ந்து,தத்தக்கா பித்தக்கா நடையில்ஊர் திரியும்.குடியிருப்பின் … Read more

புருஷன் -1 நாவல் மதிப்புரை: நிர்மல்

இந்த நாவலுக்கு விமர்சனம் எழுதுவதே இதற்கு செய்யும் துரோகம்தான். ஏனென்றால் விமர்சனம் என்பது வாசித்த படைப்பைப் பற்றிக் கருத்து சொல்வதுதானே? இப்படி கருத்து சொல்வதையும், கருத்து சொல்கிறவரின் நோக்கத்தையும், கருத்தைக் கட்டமைக்கும் மொழியின் ஆற்றல்களையும், அதைப் பயன்படுத்துகிறவரின் மொழிப் புலமையையும் புலமையின்மையையும் சந்தேகிக்க வைப்பது இந்த நாவலில் இழையோடும் உணர்வாக நான் கருதுவதால், விமர்சனத்தை அபத்தமாகவே இந்த நாவல் கருதும். கருதினால் கருதிவிட்டுப் போகட்டும், வேறு வழியில்லை. ஆகையால் விமர்சனம் என்கிற பெயரில் எழுதியதே கீழ்க்காணும் கட்டுரை!    … Read more

கவிதை தெரியாத மட்டி மடையர்களுக்கு ஒரு விளக்கம்

இண்டர்டெக்ஸ்சுவாலிட்டி என்பார்கள். இதை ஆண்டாளிடமும் மற்ற பக்தி இலக்கியக் கவிகளிடமும் காணலாம். திருப்பாவையில் கிருஷ்ணனின் லீலைகள், கோவர்த்தன கிரி, கம்ஸ வதம் போன்ற புராணக் கதைகள் எல்லாம் பாகவதம், விஷ்ணு புராணம் போன்றவற்றிலிருந்து எடுத்துக் கொண்டவை. அதை விட முக்கியமாக ஆழ்வார்களின் பாசுரங்களில் காணப்படும் பக்தி மரபையும் ஆண்டாள் பின்பற்றுகிறாள். திருமால் மீதான தனது பக்தியை வெளிப்படுத்தும் விதமாக, மற்ற ஆழ்வார்களைப் போலவே, தமிழ் பக்தி இலக்கியத்தின் பொதுவான உருவகங்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்துகிறாள். அதேபோல் ஆண்டாளின் பாசுரங்களில் … Read more

இலவசம்

என் தாய்வழித் தாத்தாவின் பெயர் ராமசாமி. ராமசாமியின் பாட்டனார் செட்டிநாடு பகுதியிலிருந்து பர்மாவுக்குப் பெட்டியடியாகப் போய் பெரும் பணம் சம்பாதித்து வட்டிக்கு விட்டு செல்வந்தரானார். பெட்டியடி என்றால் என்ன என்று புயலிலே ஒரு தோணியில் வரும். எல்லாம் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகம். ராமசாமி இந்தியாவையே பார்த்ததில்லை. ரங்கூனிலேயே இன்னொரு பணக்காரக் குடும்பத்தில் ராமசாமிக்குப் பெண் பார்த்துக் கட்டினார்கள். இரண்டாம் உலக யுத்தம் வந்த போது ராமசாமி தன் பணத்தையெல்லாம் தங்கமாக மாற்றிக்கொண்டு தன் மனைவி பாப்பாத்தியை அழைத்துக்கொண்டு … Read more

ஒரு குறுங்காவியம்

குமுதம் ஆசிரியராக இருந்து இளம் வயதில் இறந்து போன ப்ரியா கல்யாண ராமன் என் நெருங்கிய நண்பர். என் மேல் அன்பைப் பொழிந்தவர். இப்படி என் மேல் அன்பைப் பொழிந்த இன்னும் இரண்டு பேர் சார்வாகன், வாலி. என்ன துரதிர்ஷ்டம் என்றால் இந்த மூன்று பேருமே வெகு சீக்கிரத்தில் என்னை விட்டுப் பிரிந்து போனார்கள். அதில் ப்ரியா கல்யாண ராமனின் பிரிவு சற்றும் எதிர்பாராதது. சார்வாகன் சொல்லி விட்டார், அடுத்த தீபாவளிக்கு நான் இருக்க மாட்டேன் என்று. … Read more