ஆறு குறுங்கவிதைகளும் மற்றொரு கவிதையும்

1. முதல் முத்தம் முதல் முத்தம் தந்தபோதுஅச்சம் பரவசம் கொன்றதுமுதல் முத்தம் கிடைத்தபோதுஉணர்வு மரத்து நின்றது 2. பயணம் நீ, நான், நட்சத்திரம், மரம், மலை, கடல், பூமி, கருந்துளை, புழு, பூச்சி, நாய், பூனை, சிங்கம், புலி, கரடி, அரசியல்வாதி, கோடீஸ்வரன், பிச்சைக்காரன், ரேப்பிஸ்ட், ஞானி, அஞ்ஞானி – எல்லோரும் பூஜ்யத்தை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறோம் 3. சுழற்சி சாலை நடுவே பெருச்சாளிகொத்தித் தின்னும் காகம்பார்த்துச் செல்லும் மனிதர்கள் 4. இரு பூனைகள் ஒரு பூனை புறாவிடம்பேசிக்கொண்டிருக்கிறதுஒரு … Read more

நவீன ராம காதை

1.கடவுள் வாழ்த்து ஒருநாளும் ஒருபோதும்சுய இரக்கப் பிரதிகள்பாடியதில்லைஇன்றும் அப்படியே ஆகசீதையின் நாயகனேசிவதனுவை வளைத்தவனேஅயோத்தியின் அருள் வடிவேநீயே எனக்குத் துணை நிற்பாய்! 2. கழிப்பறை சுத்திகரிப்புப் பணி இருபத்தைந்து ஆண்டுகள்அரசனாய் மிதந்தேன்பின்னே புரிந்ததுபெண்ணின் வியர்வையில்உயிர் திளைக்கக் கூடாது பிரித்தேன் உழைப்பைஉனக்கு இருபத்தைந்துஎனக்கு எழுபத்தைந்துஆயினும்எழுபத்தைந்தில்கழிப்பறை சுத்தம் சேரவில்லைஉழைப்பில் ஏற்றத்தாழ்வாஎன ஆவேசம் கொள்ளாதீர் வறுமையின் நாட்களில்நாப்கினுக்குக் காசில்லாமல்மனையாளின் தூரத்துணியும்துவைத்திருக்கிறேன் ஒருநாள் மனையாள் ஊரிலில்லைகழிப்பறை வேலைதலையில் வீழ்ந்ததுஇவ்வூரில்இரட்டிப்பு ஊதியத்திலும்கழிப்பறை வேலைக்குஆட்கள் கிடையாது மோகினிக்குட்டி சொன்னாள்ஹார்ப்பிக் கொட்டு, ஊற விடு,தேய், கழுவு…முடிந்தது. ப்பூ, இவ்வளவுதானா? … Read more

நான், நிலா மற்றும் ஒரு பின்நவீனத்துவக் காதல் நாடகம்

எதேச்சையாய் சந்தித்த தோழி, என்ன செய்கிறாய் என்றாள். காதல் செய்கிறேன், காதல் கவிதைகள் எழுதுகிறேன் என்றேன் சற்றே நாடகத்தனமாக கண்களில் பளபளப்புடன். எப்போதும் நீ இப்படித்தான் இத்தனை வயதிலும், இன்னும் க்ளிஷேக்களில் விளையாடுகிறாய். ’எப்போதும் இப்படித்தான் நான் என்ன சொன்னாலும் நீ மட்டுமல்ல, யாரும் நம்புவதில்லை அதனாலே இப்போது சற்று தயக்கத்தோடே சொல்கிறேன்… கொஞ்ச காலம் நான் நிலவுடன் டேட்டிங் செய்தேன்.’ அவள் கண்கள் விரிந்தன ’நிலவு! இது என்ன உன் புதிய hipster கவிதையா?’ ’இல்லை, … Read more

சிப்கலி

குட்டிகளை சாகக் கொடுத்துஅழுது கொண்டிருந்ததாய்ப்பூனைக்கு ஆறுதல்தந்து விட்டுப் படியேறிவந்தாள்மோகினிக்குட்டி எதிர்வீட்டு வைணவன்என்றுமில்லாதபடிவாசல் சுவரில்பல்லி போல் ஒட்டிக்கொண்டிருந்தான்அவளைக் கண்டதும்சிப்கலீ என்று கத்தினான் மோகினியின் யோசனைபலவாறு சிதறியது குடியிருப்போர் கூட்டம் ஒன்றில்ஹிந்தியில் பேசாதீர்ஆங்கிலமும் தமிழும் மட்டுமேதெரியுமென்றவன் –இதுவரை அவளிடம் ஒரு வார்த்தைபேசியிராதவன் – இப்போதுசிப்கலி என்கிறானே?ஏனிந்தக் கூச்சல்?தரையைப் பார்த்தாள் ஒரு பல்லிஅசைவை நிறுத்திப்படுத்திருந்தது பல்லியென்றால் அவளுக்குநடுக்கம் அதை மிதித்து விடக்கூடாதென அபயக் குரல்எழுப்பியிருக்கிறான்நாலு பூனைக்குட்டிகளைடெட்டால் ஊற்றிக் கொன்றவன் மோகினிக்கு பாம்பு கூட பயமில்லைபல்லியென்றால்அலறி ஓடி ஊரையே கூட்டி விடுவாள் எதிர்வீட்டுக்காரனுக்கு … Read more

காமாக்னி

யோகா மாதிரி ஏதாவதுசெய்து காமநோய்மையிலிருந்துவிடுபடேன் என்றாள் மோகினிக்குட்டி துன்பம் தரும் எதுவோஅதைத் தூக்கியெறிவதுஎன் வழக்கம் எனத்தொடர்ந்தாள் பதினைந்து வயதில்தேகத்தின் காமம்ஆடைகளில் அடையாளமானபோதுஅம்மா சொல்வார்கள்உடம்புக்கு நல்லதில்லைதம்பி என்று மோகினிக்குட்டி, சில நேரம் என் தாயாக மாறுவாள் ஒரு காலத்தில்ரத்த அழுத்தம்என்னைப் பிடித்து ஆட்டியதுயோகா அதை அடக்கியதுபக்க விளைவாககோபம் ஓடி ஒளிந்ததுஇப்போது எது நடந்தாலும்கோபம் வருவதில்லை யோகா செய்து காமம்விலக்கினால்பக்க விளைவாகஎழுத்து அகன்று விட்டால்விபரீதமாயிற்றே? காமாக்னிதானேஎன் எழுத்துக்கு உயிரென்றேன்மோகினிக்குட்டியிடம் அக்கினியை அடக்குவதன்வழி தெரிந்தது போல்ஒரு சிரிப்புசிரித்தாள் மோகினிக்குட்டி