பச்சை மிளகாயை முன்வைத்து ஒரு erotic கவிதை

1 எல்லாம் ஒரு திட்டத்தில் நடக்கிறதுஎன்கிறான் பெருங்கவிஞன்’ஒரு பறவை வீழ்ந்தாலும்அதில் திட்டமுண்டுஇப்போது நடக்கும் என்றால் நடக்காதுஇப்போது நடக்காது என்றால் நடக்கும் 2 அப்படித்தான்நடந்தது அந்தச் சந்திப்புஈருடல் ஓருயிர் ஆனதுரோமியோவுக்கு முன்பே ஒரு காதலி இருந்தாள்ஜூலியட்டைக் கண்டதும் காணாமல் போனதுபழைய காதல்இதுவும் அப்படியே நடந்தது 3 ஒவ்வொருவருக்கும்ஒரு பழக்கம்எனக்குப் பச்சை மிளகாய்ஒன்றுக்கு இரண்டுகடித்து உண்டால்தான்உணவு இறங்கும் 4 அவளைக் கண்டதும்பச்சை மிளகாயைத் துறந்தேன்காரணமா?உடையவர் சொன்னார்’பிறர் வலியைத்தன் வலியாய் உணர்பவனேவைணவன்’

கவிதையின் பசி

ஏற்கனவே எழுதியிருக்கிறேன். நான் வெளியிடும் ஒவ்வொரு கவிதையும் ஏழெட்டு முறை திருத்தப்பட்டது. இறுதிப் பிரதியைப் பார்த்தால் அதற்கும் முதல் பிரதிக்கும் சம்பந்தமே இருக்காது. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கூக்குரலுக்கும் அந்தக் கவிதையின் முதல் பிரதிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பாருங்கள். ரேமண்ட் கார்வரின் பாணி இப்படித்தான் இருக்கும். படிமங்கள் இல்லாமல் நேரடியாக எழுதப்படுவது அவர் கவிதை. நீங்கள் எதை அதிகம் ரசித்தீர்கள் என்று எனக்கு எழுதுங்கள். இதையா? கூக்குரலையா? என் குமுறலைஎன் தனிமையைஎன் வாதையைஎன் மன உளைச்சலைஎன் … Read more

கூக்குரல்

முதலாம் கூக்குரல்: வாதையின் நிழல்கள் என் குமுறல், முடிவற்ற கடலின் அலைகள்என் தனிமை, பாலைவன இரவின் குளிர்ந்த மௌனம்என் வாதை, பறவையின் முறிந்த சிறகுஎன் மன உளைச்சல், கற்களால் நிரம்பிய பாதை என் கண்ணீர், ஊழியில் மறைந்து போன கடலின் கதை இரண்டாம் கூக்குரல்: பாவங்களின் சுமை என் அடிமைத்தனம், இரும்புச் சங்கிலிஎன் துரோகம், நம்பிக்கையை உடைத்த கூர்வாள்என் மூர்க்கம், காட்டுத்தீயின் வெறிஎன் கீழ்மை, புழுதியில் மறைந்த புனிதம்என் பசி, தீராத பாலைவனத்தின் தாகம்என் மனப்பிறழ்வு, நிலைகுலைந்த … Read more

மகிழ்ச்சியின் மறுபெயர்

நான் பறவை இனத்தவன் போலதாமதமாக எழுந்ததே இல்லை.இன்று எழும்போதுசூரிய ஒளி கண்களைத் தாக்கியது நேற்று அவள் சொன்னாள்இன்று பேச முடியாதென்றுஅதனால் உறங்கினேன்நடைப்பயிற்சி இல்லை ஏழரை மணிவழக்கமாக சங்கீதா உணவகத்தில்காஃபி குடித்திருப்பேன்.இன்றுநானே காஃபி போட்டுக்கொண்டு வந்துஅமர்ந்தேன். வனத்தில் இருப்பது போல்பறவைகளின் குரல்கள் எங்கும்கிளி மைனா குயில்சிலவற்றை மட்டும் அறிவேன்மற்றவை பெயர் தெரியவில்லை காலை நேரம்கையில் காஃபிரேமண்ட் கார்வரின் ’மகிழ்ச்சி’நினைவுக்கு வந்ததுஎனக்கு மகிழ்ச்சி இல்லை மகிழ்ச்சி இருந்தால் கவிதை இல்லைஎன் கவிதைஎன் ஆத்மாவின் குமுறல். பறவைகளின் பாடல்கள்எத்தனை மகிழ்ச்சியானவைஆனாலும்என் துக்கத்தை … Read more