ஏற்கனவே எழுதியிருக்கிறேன். நான் வெளியிடும் ஒவ்வொரு கவிதையும் ஏழெட்டு முறை திருத்தப்பட்டது. இறுதிப் பிரதியைப் பார்த்தால் அதற்கும் முதல் பிரதிக்கும் சம்பந்தமே இருக்காது. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கூக்குரலுக்கும் அந்தக் கவிதையின் முதல் பிரதிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பாருங்கள். ரேமண்ட் கார்வரின் பாணி இப்படித்தான் இருக்கும். படிமங்கள் இல்லாமல் நேரடியாக எழுதப்படுவது அவர் கவிதை. நீங்கள் எதை அதிகம் ரசித்தீர்கள் என்று எனக்கு எழுதுங்கள். இதையா? கூக்குரலையா?
என் குமுறலை
என் தனிமையை
என் வாதையை
என் மன உளைச்சலை
என் கண்ணீரை
என் அடிமைத்தனத்தை
நான் முதுகில் குத்தப்பட்டதை
நான் முதுகில் குத்தியதை
என் மூர்க்கத்தை
என் கீழ்மையை
என் பசியை
என் தீராத காமத்தை
என் கோழைத்தனத்தை
என் இயலாமையை
என் அறியாமையை
என் சுயநலத்தை
என் சுயமோகத்தை
என் பொய்மையை
என் நயவஞ்சகத்தை
என் ரத்தவெறியை
என் அஹங்காரத்தை
என் பொறாமையை
என் ஆற்றாமையை
என் துவேஷத்தை
என் குரூரத்தை
என் மனப்பிறழ்வை
என் நோய்மையை
என் மீது விழுந்த அவமானத்தை
என் நபும்ஸகத்தை
என் தற்கொலை உணர்வை
இதுவரை சொல்லாத என் ரகசியங்களை
அவமானகரமான என் கடந்த காலத்தை
இன்னும் எல்லாவற்றையும்
கவிதையாக எழுதினேன்
இறைவரே!
இத்தனைப் பாடும் என் வாழ்க்கையையே தின்று முடித்து ஏப்பமிடும்
வெறும் கவிதைக்காகத்தானா?