நிலவின் மொழி

1 1.வார்த்தைகளின் மோதல் (Allegro) ’கல்லின் மொழி பேசுகிறாய்புல் உன் கனவைப் புரிந்து கொள்கிறதுகாற்றின் கதைகளைக் கேட்கிறாய்பாறைக்குள்ளிருக்கும் தேரையின்சுவாசத்தை எழுதுகிறாய்ஆனால்என்னுடைய சாதாரண வாக்கியம்ஒரு உடைந்த பாலமாகநடுவில் நிற்கிறதுஎன்ன மனிதன் நீ?’என்கிறாள்வெறுமனே அசைகிறேன்ஒரு சொல்என் மார்பில் உருள்கிறது 2 ஏரியின் மௌனம் (Adagio) வானைத் தொடும் தேவதாருநிலவு ஒரு வெள்ளித் தட்டாகஏரியில் மிதக்கிறதுவிறகு எரியும் மணம்கையில் வைன் கோப்பைஇரண்டாவது போத்தல்ஏரி சலனமற்றிருக்கிறது நிலவு பேசுகிறதுநான் பதிலளிக்கிறேன்அது எதையும் மறுப்பதில்லைமாட்டேன் முடியாதுஎன்ற சொற்களேவந்ததில்லைஎன்ன வேண்டுமானாலும்பேசலாம்தணிக்கையில்லைதடையில்லைகட்டற்ற சொல்வெளியில்நிலவோடுஎப்படி வேண்டுமானாலும்ஆடலாம் 3 நிலவின் … Read more

மலர்வனமானது மனம்

அவள்சொல்வது செய்வதுஎல்லாமேமன உளைச்சல்மன அழுத்தம்தந்துமனதை ரணகளமாக்கியது எல்லாம் புதிதுஇதுவரை கண்டதில்லைகேட்டதில்லை ஓடவும் முடியாதுமுதல்முதலாய்க் கண்ட தெய்வம் ஒருநாள் ஞாபகம் வந்ததுஅவள் சொன்னது’நீ என்னைக் குழந்தையாய்நடத்து’ நடத்தினேன்மலர்வனமாயிற்றுமனம்

La petite mort

அந்த மலையடிவாரத்தில்நாம்முத்தமிட்டுக்கொண்டிருந்த போதுநாமிருவரும்உயிருடனிருந்தோமென்றாநினைக்கிறாய்?

மொழி வழி

நினைப்பதைச் சொல்ல மொழி நானும் சொல்லி வந்தேன் நினைப்பதையே எழுதி வந்தேன் அப்படித்தான் நம்பி வந்தேன் எல்லோரும் என்னை நிர்வாண மனிதன் என்றார்கள் ஆனால் உன்னிடம் வார்த்தைகள் உறைந்த பனியாய் நிற்கின்றன எல்லோரிடமும்தான்