எங்கோ மிச்சமிருக்கும் காதல்

1 சில மொழிகளைப் போலசில இசைக்கருவிகளைப் போலசில நாகரீங்களைப் போலசில தேசங்களைப் போலசில பேரரசுகளைப் போலசில நதிகளைப் போலசில வீடுகளைப் போலசில நட்சத்திரங்களைப் போலசில வனங்களைப் போலசில அருவிகளைப் போலசில மலைகளைப் போச்சில உயிரினங்களைப் போலசில உணவு வகைகளைப் போலசில தாவர வகைகளைப் போலசில ஆடை அலங்காரங்களைப் போலசில பழக்கவழக்கங்களைப் போலசில தத்துவங்களைப் போலசில கடவுள்களைப் போலசில நம்பிக்கைகளைப் போலசில ஞாபகங்களைப் போலகடந்த காலத்தைப் போலகாதலும் அழிந்து விட்டதுஇலக்கியத்தில் மட்டும்மங்கிய சுவடுகளை விட்டு விட்டு 2 ஏன் … Read more

காதல்: ஒரு உரையாடல்

உன்மத்த நிலையில் எழுதுகிறாய்இப்படி ஒரு காதல் வாய்க்குமாஎனக்கு என்றான் நண்பன் காதலாவது கத்தரிக்காயாவதுபச்சை சுயநலம்சூறையில் அகப்பட்ட சருகாய்அலைவுற்ற எனக்குஇவளைப் போல் தந்தவர்யாருமிலர்அதனாலே இத்தனைப் பிரியம்என்றேன்

இதயக்குறி அல்லது பிக்ஸல் வாக்குறுதிகளின் வாசிக்கப்படாத நிழல்

என்னை ஒரு பெண் நேசித்தாள்காதல் என்று சொல்லத்தான் ஆசைஆனாலும்காதல் என்றால் கொஞ்சம் கம்மியெனத்தோன்றுகிறதுபேய் நேசம்பெரிய பாரதக் கதைஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன் விடுமுறை தினங்களில்கைபேசியையே கையில் தொடாதவள்ஒரு கட்டத்தில் கைபேசிஅவள் உடலுறுப்புகளில் ஒன்றாக மாறியதுநான் அழைத்தால் எடுக்க வேண்டுமே? காலமெல்லாம் காசுப் பஞ்சத்தில்இருப்பவன் நான் பார்த்தாள்’ஏய் குட்டிநானொரு வேலையை ஒப்புக் கொள்கிறேன்இப்போது எட்டு மணி நேர வேலைஅதில் பதினாறு மணி நேரம்இரட்டிப்புச் சம்பளம்உனக்காகத்தான்மாதம் இன்ன தொகைஉன்னைத் தேடி வரும்இனிமேல் நீ காசு பற்றிப் பேசினால்கழுத்தை நெறித்து விடுவேன்’என்றாள்சொன்னது … Read more

வாட்ச்

ஏன் நீ வாட்ச் அணிவதில்லைஎன்றாள்குரலில்காலையில் நான் கேட்கும்மைனாவின் பாடல் முப்பது ஆண்டுகளுக்கு முன்ஒரு செல்வந்தர் வீட்டு சீமாட்டிஎன்னுடன் பழகிக்கொண்டிருந்தாள்அவள் வாட்ச் அணிவதில்லைகையிலொரு கயிறுகயிற்றிலொரு பல்புலிப்பல் என்றாள்புலிப்பல்லுக்குத் தடையுண்டுஆனால்சீமாட்டிகளை சட்டம் எட்டுவதில்லைஅப்போது விட்டதுதான்பிறகுயோசித்ததேயில்லைஎன்றேன். நான் அணிகிறேனேஎன்றாள்இளமையின் துள்ளலுடன்மணிக்கட்டைத் திருப்பி காட்டி நானும் அணிகிறேன்என்றேன்ஆனால்என் வாழ்வில்காலம்ஒரு செல்லாக்காசு

அமைதியின் நிழல்

ஏழரை ஆண்டுகள்வீட்டின் சுவர்கள்சிறையென மூடியபோதுஅமைதியேஅவளின் நிழலாயிருந்ததுகாற்றற்ற நீரின் வதனமாகஎதையும் பிரதிபலிக்காமல்எல்லாவற்றையும் தாங்கிஅமைதியே அவளதுஅடையாளமாயிற்று சிறை மீண்டு வந்த பிறகுஅவளுக்குஅமைதியை உடைத்து வரக்கற்பித்தேன்ஆனால்காற்றில் மிதக்கும் மலரின் நிழலெனஅமைதி என்னில்குடி பெயர்ந்தது