வாட்ச்

ஏன் நீ வாட்ச் அணிவதில்லைஎன்றாள்குரலில்காலையில் நான் கேட்கும்மைனாவின் பாடல் முப்பது ஆண்டுகளுக்கு முன்ஒரு செல்வந்தர் வீட்டு சீமாட்டிஎன்னுடன் பழகிக்கொண்டிருந்தாள்அவள் வாட்ச் அணிவதில்லைகையிலொரு கயிறுகயிற்றிலொரு பல்புலிப்பல் என்றாள்புலிப்பல்லுக்குத் தடையுண்டுஆனால்சீமாட்டிகளை சட்டம் எட்டுவதில்லைஅப்போது விட்டதுதான்பிறகுயோசித்ததேயில்லைஎன்றேன். நான் அணிகிறேனேஎன்றாள்இளமையின் துள்ளலுடன்மணிக்கட்டைத் திருப்பி காட்டி நானும் அணிகிறேன்என்றேன்ஆனால்என் வாழ்வில்காலம்ஒரு செல்லாக்காசு

அமைதியின் நிழல்

ஏழரை ஆண்டுகள்வீட்டின் சுவர்கள்சிறையென மூடியபோதுஅமைதியேஅவளின் நிழலாயிருந்ததுகாற்றற்ற நீரின் வதனமாகஎதையும் பிரதிபலிக்காமல்எல்லாவற்றையும் தாங்கிஅமைதியே அவளதுஅடையாளமாயிற்று சிறை மீண்டு வந்த பிறகுஅவளுக்குஅமைதியை உடைத்து வரக்கற்பித்தேன்ஆனால்காற்றில் மிதக்கும் மலரின் நிழலெனஅமைதி என்னில்குடி பெயர்ந்தது

சார்பியல் கோட்பாடு

‘உன் மீது கொலைவெறி’’சொல் இறைவி’’ஒன்றரை நாள் பேசாததுநீண்ட இடைவெளியா?வாசகர் என்னைப் பற்றிஎன்ன நினைப்பார்?’’ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடுதெரியும்தானே?’’ம்…’’அவர் தன் காரோட்டியிடம்சொன்னது தெரியுமா?ஒரு யுகம் உன்னருகேஒரு நொடிஒரு நொடி உனைப் பிரிந்தால்ஒரு யுகம்’’ம்…’’அப்புறமேன் கொலைவெறி?’

ஒரு அசாதாரணமான காதல் கதை

அந்த எழுத்தாளன் போல்வேறெந்த எழுத்தாளனும்வாழ்ந்ததில்லைஅவனது உற்ற நண்பனென்பதால்உள்கதையெல்லாம் தெரியும் அவனுக்கு ஐம்பது தோழிகள்பல சாதி பல இனம் பல பிராயம்பதினாறில் ஒருத்திஅறுபதிலும் ஒருத்திசிலவேளை மகளும் தோழிதாயும் தோழி சரீரமின்றி உறவு இல்லைவற்புறுத்துவதில்லைகேட்பான்மறுத்தால் விடை கொடுப்பான் ஐம்பதும் நிரந்தரமில்லைவரும் போகும் புனல் போல் ஒழுகும்சில பெண்கள் நிரந்தரம்தோழிகள் மட்டுமல்லமனைவிகளே அரை டஜன்நம்ப மாட்டீர்அரை டஜனும் ஒரே வீட்டில்! அவன் பேச்சைக் கேட்கபெண்கள் கூட்டம் அலைமோதும்பேச்சு முடிந்ததும்சபையிலேயே’ஏடீ ஷ்யாம்ளாஇன்னிக்கு நீ எங்கூட பட்றீ…’என்பான்இத்தனைக்கும்பதினேழு வயது ஷ்யாம்ளாவின் தாயாரும்பக்கத்திலேயே இருப்பாள்மறுநாள்எழுத்தாளன் ஷ்யாம்ளாவின் … Read more

என்ன மேட்டர்?

தோழர்க்கெல்லாம்மணவாழ்வில் நுழையாதீரெனஅனுபவ அட்வைஸ் கொடுப்பதுவழக்கம்இப்போது இன்னொன்றையும்சேர்க்கலாம்யாரும் காதல் செய்யாதீர்!தேவையெனில்இருக்கவே இருக்கிறதுஒன் நைட் ஸ்டேண்ட் காரணம்? நீண்ட இடைவெளிக்குப் பின்அவளுக்கு ஃபோன் செய்தேன்காரணமெதுவுமில்லையாழினும் குழலினுமினியஅவள் குரலைக் கேட்கலாமே என்றுதான்மேலும்காரணம் வைத்துக்கொண்டாகாதலியை அழைக்கிறோம்? எடுத்த எடுப்பில்என்ன மேட்டர் என்றாள் உன்னைக் கொல்ல வேண்டும்அதுதான் மேட்டர் என்று வந்ததுவந்ததையெல்லாம் வேற்றுக்கிரகவாசிகளிடம்சொன்னால் லோகம் அழிந்து விடும்நிம்மதியும் கெட்டு விடும் அதனால்ஒரு மேட்டருமில்லைஎன்று உண்மை சொன்னேன்