மகிழ்ச்சியின் மறுபெயர்

நான் பறவை இனத்தவன் போலதாமதமாக எழுந்ததே இல்லை.இன்று எழும்போதுசூரிய ஒளி கண்களைத் தாக்கியது நேற்று அவள் சொன்னாள்இன்று பேச முடியாதென்றுஅதனால் உறங்கினேன்நடைப்பயிற்சி இல்லை ஏழரை மணிவழக்கமாக சங்கீதா உணவகத்தில்காஃபி குடித்திருப்பேன்.இன்றுநானே காஃபி போட்டுக்கொண்டு வந்துஅமர்ந்தேன். வனத்தில் இருப்பது போல்பறவைகளின் குரல்கள் எங்கும்கிளி மைனா குயில்சிலவற்றை மட்டும் அறிவேன்மற்றவை பெயர் தெரியவில்லை காலை நேரம்கையில் காஃபிரேமண்ட் கார்வரின் ’மகிழ்ச்சி’நினைவுக்கு வந்ததுஎனக்கு மகிழ்ச்சி இல்லை மகிழ்ச்சி இருந்தால் கவிதை இல்லைஎன் கவிதைஎன் ஆத்மாவின் குமுறல். பறவைகளின் பாடல்கள்எத்தனை மகிழ்ச்சியானவைஆனாலும்என் துக்கத்தை … Read more

மேஜிக்

1. காலை நடையில்எதையெதையோயார் யாரையோபார்க்கிறோம் அப்படித்தான்அவளைமூன்று ஆண்டுகளாய்பார்த்துக்கொண்டிருந்தேன்புத்தகக் கடையில்மங்கலான திரையரங்கில்என் வாசகரில்அவளும் ஒருத்தி ஒரு மாலைகாஃபி குடித்தோம்ஒரு இரவுநண்பர்களுடன் பியர் பகிர்ந்தோம் தொலைபேசி எண்ணை அறிவேன்ஆனால் அழைத்ததில்லைஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்பதில் அனுப்ப நினைத்தேன்மறந்துவிட்டேன் நானோ சௌந்தர்யப் பிரியன்அவளோ பேரழகிஆனாலும்எதுவும் தோன்றவில்லை ஆறு மாதங்களுக்கு முன்என்ன நடந்தது?எப்படி நடந்தது?ஏன் நடந்தது? ஒரு தருணத்தில்பித்து பிடித்ததுநான்கு மணி நேரப் பேச்சுநூறு குறுஞ்செய்திகள்இன்ன பிற 2ஆரம்பமும் முடிவும்தெரியாதகாரணமும் புரியாதஒரு ஆட்டம்இந்த வாழ்வும்இந்தக் காதலும்

அற்றைத் திங்கள்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் அவளும் இருந்தாள் எல்லாமும் இருந்தது இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் நினைவின் நிழல்கள விடாமல் துரத்துகின்றன

வேட்டை

கவிதையைப் படித்தாள்கவிதைக்குரியவள்ஆனால்ஒரு சிறிய கூச்சம்சங்கடத்தின் மெல்லிய நிழல்அவள் இதயத்தில் தங்கி விட்டதுஏன் அடிமைத்தனம்சமமாக இருந்தாலென்னஎன்ற கேள்விகள் ஓடியது ஒன் நைட் ஸ்டாண்ட் என்றும்பத்துப் பன்னிரண்டு காதலிகளோடும்அலைந்து திரிந்துஆடிப் பாடியஅவனைஅடிமையாக்கியது யார்கேட்க நினைத்துக்கேட்கவில்லைகேள்விகள் துக்கத்தின் விதைகள் 2 நண்பன் ஒரு கதை சொன்னான்அவன் மனையாளின் ப்ளூ டிக்திடீரென்று மறைந்ததுஇவன் சிரித்துக்கொண்டேஎன்னவென்று கேட்டான்அவளும் சிரித்துக்கொண்டேம் என்றாள்இவனும் சிரித்துக்கொண்டேபோய் விட்டான் உனக்கு அரச லச்சினைபதித்த பத்திரமொன்று இருக்கிறதுமரணம் வரைஉனக்கு அவள்அவளுக்கு நீவெளியே போனால்காட்டு விலங்குகள் குதறித் தள்ளும் அவனோ வழிப்போக்கன்எந்தப் பத்திரமுமில்லைகாரணம் … Read more

விரும்புகிறேன்…

நீ என்னில் மூழ்க வேண்டுமென்றும்நான் உன்னுள் கரைய வேண்டுமென்றும்இன்னும் உன்னைக் காதலிக்கவே தொடங்காதநான் இனியும் தாமதிக்கக் கூடாதென்றும்நீ என் உயிர்த்தாதுவை உன் குருதிக்குள்ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும்நான் உன்னை உறிஞ்சி விடாய் தணிய வேண்டுமென்றும்உனக்காகக் கொலை செய்ய வேண்டுமென்றும்உனக்காகத் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்றும்உனக்காக நான் வெட்கம் மானம் துறக்க வேண்டுமென்றும்உனக்காக நான் மலையுச்சியிலிருந்து குதிக்க வேண்டுமென்றும்உனக்காக நான் சிறை செல்ல வேண்டுமென்றும்உனக்காக நான் கவிதை எழுத வேண்டுமென்றும்உனக்காக நான் கவிதையெழுதுவதை நிறுத்த வேண்டுமென்றும்உன் சுதந்திரத்தில் ஒருபோதும் குறுக்கிடக் கூடாதென்றும்ஏன் … Read more

தீராத அக்கப்போர்

நேற்று முன்னிரவு ஒரு கவிதைசில நிமிடங்களில் எழுதினேன்அத்தனை சடுதியில் இதுவரைவந்ததில்லைஉனக்கு அனுப்பினேன்இன்று பேசும்போதுகேட்க மறந்து போனேன்படித்தாயா இல்லையாதெரிந்தால் போதும்வேறெதுவும் வேண்டாம்எழுபத்திரண்டு மணி நேரம்சென்று கூட படிகவலையில்லைஆனால்ப்ளூ டிக் மறைக்கப்படாதிருந்தால்’உனக்கு நேரமில்லை, படிக்கவில்லை’என்றோ‘ஆ, படித்து விட்டாள்’என்றோதெரிந்து கொள்வேன்இப்போது முழு இருள்படித்தாயா இல்லையாதெரியாதுநீ படித்தால் நான் வாழ்வேன்.படிக்காவிட்டால்இன்னும் எழுதுவேன். ஒரு முடிவு செய்தேன்இந்த ப்ளூ டிக் அக்கப்போரெல்லாம்இனி எதற்குநம் ஃபோனைஅணைத்து வைப்போம்உன் ஃபோன்உன் சுதந்திரம்என் ஃபோன்என் சுதந்திரம்வெளியுலகத் தொடர்புக்குஇனி மின்னஞ்சல் மட்டும்தான் பாதிக்கப்படுவோர் பலர்என்கிறாயாதனியொருவனுக்கு ப்ளூ டிக்இல்லையெனில்ஜெகத்தினை அழித்திடுவோம்கபர்தார்