தி. ஜா. என்ற மகா கலைஞன்

பழுப்பு நிறப் பக்கங்கள் – பாகம் 2 இலிருந்து தி. ஜானகிராமன் (1921 – 1982) என் இளமைக் காலம் ‘தீண்டத்தகாதவர்கள்’ என சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த சேரிப் பகுதியில் கழிந்தது. அங்கே மக்களின் எண்ணிக்கையை விட நரகலைத் தின்று வாழும் பன்றிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. ஒருமுறை ஒரு ஆன்மிகப் பெரியவர் ஊருக்கு வந்து நகர்வலம் வந்தவர் – ஊரில் எல்லா தெருக்களுக்கும் சென்றவர் – எங்கள் தெருவுக்கு மட்டும் வரவில்லை. தெருப் … Read more

நிர்வாண சத்கமும் மோகமுள்ளும்…

2015-இல் எழுதிய பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியை பிழை திருத்தம் செய்து கொண்டிருந்த போது இப்பகுதியைக் காண நேர்ந்தது.  புத்தகம் வெளிவரும் முன் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.  நிர்வாண சத்கம் மொழிபெயர்ப்பு அடியேனுடையது. தி. ஜானகிராமனின் உலகையும் மனோதர்மத்தையும் புரிந்துகொள்ள ஒரு திறப்பாக இருப்பது, சேதுபதி அருணாசலத்தின் கட்டுரை. இயற்கையையும் இசையையும் ஒன்றாகவே பார்த்தார் தி.ஜா. இதுதான் அந்தத் திறப்பு. இதன் வழியே தி.ஜா.வின் உலகில் நுழைந்தால், இந்திய மண்ணில் உதித்த ஞானிகள் கண்ட … Read more

உலகின் மிகச் சிறந்த காதல் கதைகளில் ஒன்று

இன்று காலை நான்கு மணிக்கு எழுந்த கையோடு அராத்து அனுப்பியிருந்த ஒரு சிறுகதையைப் படித்தேன்.  ஒரு பத்திரிகையில் வெளிவரும் என்று சொல்லியிருந்தார்.  இப்படி ஒரு காதல் கதையை என் இலக்கிய அனுபவத்தில் படித்ததில்லை.  உலகின் மிகச் சிறந்த காதல் கதைகளில் இதுவும் ஒன்று எனத் திண்ணமாகச் சொல்வேன். அராத்து எழுத்தாளராகி விட்டார்.  முகநூல் இத்தனை பிரசித்தம் ஆவதற்கு முன்பு – ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும் – “நீங்கள் எந்தக் காலத்திலும் எழுத முடியாது” என்று அராத்துவிடம் சொன்னேன்.  … Read more

ஸோரோ – 4

முடிந்தால் துக்க வீட்டுக்கு நேரில் செல்லுங்கள்.  அது பெரும் ஆறுதலாகவும் உதவியாகவும் இருக்கும்.  ஸோரோவின் உடலோடு தோட்டத்தில் ஒரு மணி நேரம் தனிமையில் அமர்ந்திருந்தேன்.  உறங்கிக் கொண்டிருந்த அவந்திகாவை எழுப்பி விஷயத்தைச் சொல்ல எனக்கு மனம் இல்லை.  அதிர்ச்சியாகி விடுவாள்.  ஒரு மணி நேரம் கழித்து மாடியிலிருந்து எழுந்து வந்து பார்த்துத் தெரிந்து கொண்டாள்.  துக்கத்தை அவளால் வெளிப்படுத்தக் கூட முடியவில்லை.  காரணம், என் நிலை அப்படி இருந்தது. ஸோரோவின் உடலை என்ன செய்வது என்ற பிரச்சினை.  … Read more

பெருமாள் முருகனும் கவிப் பேரரஜுவும்…

சல்மான் ருஷ்டி இஸ்லாம் மீது கை வைத்தார். உலகப் புகழ். தஸ்லீமா நஸ்ரினும் இஸ்லாம் மீது கை வைத்தார். உலகப் புகழ். பெருமாள் முருகன் இந்துக்கள் மீது கை வைத்தார். உலகப் புகழ். இப்போது கவிப்பேரரஜுவும் பெருமாள் முருகன் டெக்னிக்கையே பின்பற்றி இந்துக்கள் மீது கை வைத்து விட்டார். இந்துக்கள் கிளர்ந்து எழுந்து விட்டார்கள். இனிமேல் கவிப்பேரரஜுவுக்கும் உலகப் புகழ்தான்.