காங்கோ: மனிதகுல வாதையின் நிலவியல்
அஞ்ஜன் சுந்தரம் எழுதிய காங்கோ: ஒரு செய்தியாளனின் சாகசப் பயணம் (மொழிபெயர்ப்பு: கருந்தேள் ராஜேஷ்) என்ற நூலுக்கு அடியேன் எழுதிய முன்னுரை: ஒரு வரைபடத்தை விரித்துப் பார்த்தால், அதில் மலைத்தொடர்கள் தெரியும். நதிகள் தெரியும். கடல்கள் தெரியும். தேசங்களின் எல்லைகள் தெரியும். ஆனால் அந்த வரைபடம் சொல்ல மறுக்கும் விஷயங்கள் அநேகம். எந்த நதி எத்தனைப் பிரேதங்களைச் சுமந்து கடலை அடைந்தது என்பதை எந்த அட்லஸும் பதிவு செய்வதில்லை. எந்தக் காட்டில் மனிதக் கைகள் வெட்டப்பட்டன, எந்த … Read more