அம்ருதம்

தியாகராஜா: கடவுளைக் கண்ட ஓர் ஞானியின் கதை நாவல் முடிந்து விட்டது. ஒரு லட்சம் வார்த்தைகள். மூன்று தினங்களுக்கு முன் முடித்து நாலைந்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். இப்போது அதைச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே பலமுறை செய்ததுதான். ஒவ்வொரு அத்தியாயத்தையுமே பதினைந்து தடவைகளுக்கு மேல் சரி செய்திருப்பேன். இது இறுதியாக. இதில் இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்துகொண்டிருக்கிறது. கடைசி அத்தியாயங்களில் கை வைக்கவில்லை. அது finale. சேர்த்துக்கொண்டிருப்பது நடுவில். இன்னும் பத்து தினங்களில் லேஅவ்ட் ஆர்ட்டிஸ்டிடம் கொடுத்து விடுவேன். அநேகமாக நவம்பர் மத்தியில் புத்தகம் உங்களுக்குக் கிடைக்கும். இப்போது ஒரு லட்சம் வார்த்தைகளா? இன்னும் இரண்டு லட்சம் வார்த்தைகள் எழுதலாம். ஆனால் புத்தகம் படிக்கப்படாமல் அலமாரிகளுக்குப் போய் விடும். அதனால் இதோடு முடித்துக்கொண்டேன். புத்தகத்தின் அட்டையை நிர்குண் ஒரு முந்நூறு விதமாகப் போட்டிருப்பார். ஐநூறும் இருக்கலாம். இப்போது வந்திருப்பதே அச்சில் வரும். புத்தகத் தயாரிப்பு அமர்க்களமாக இருக்கும். க்ளாத் பைண்டிங்.

அம்ருதம் என்ற தலைப்பு ஏன் என்றால், நாவலின் கடைசி அத்தியாயத்தின் தலைப்பு அது.