அம்ருதம்

தியாகராஜா நாவல் சீனிக்குப் (அராத்து) பிடிக்கவே பிடிக்காது என்று நினைத்திருந்தேன். அதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகம் இருக்கவில்லை. அவருக்கு அனுப்பிவிட்டுப் பேசாமல் இருந்தேன். ஒருநாள் அழைத்தார். என் நாவல்களில் ராஸ லீலாதான் உச்சம் என்பது அவர் கருத்து. பலரது கருத்தும் அதுதான். ஆனால் அதையும் தாண்டி விட்டது தியாகராஜா என்றார். இதில் உருவாகியிருக்கும் தமிழ் இதுவரை தமிழ் கண்டதில்லை; இதை எழுதுவதற்காகத்தான் இதுவரை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்றும் சொன்னார்.

நாவலை முடித்து விட்டேன். நாளை லே அவ்ட் ஆர்ட்டிஸ்டிடம் கொடுத்து விடுவேன். நவம்பர் பதினைந்து வாக்கில் உங்களுக்குக் கிடைக்கும். 96150 வார்த்தைகள். இன்னும் 60000 வார்த்தைகளுக்கு விஷயம் இருக்கிறது. இருந்தாலும் வாசகர்கள் மற்றும் என் பதிப்பாளரின் வசதி கருதி இதோடு நிறுத்தி விட்டேன். அடுத்த நாவலின் கதைத்திட்டத்தையும் எழுதி விட்டேன். ஒரு அத்தியாயமும் எழுதினேன். நாவலை முடித்துவிட்டுத்தான் அது பற்றி அறிவிப்பதாக முடிவு செய்திருக்கிறேன். முந்நூறு பக்கங்கள் எழுதி வைத்திருக்கும் அசோகா அல்ல. இது ஒரு புதிய நாவல். ஆனால் முடிப்பதற்கு ஏழெட்டு மாதங்கள் எடுக்கும்.

தியாகராஜா நாவலில் உங்கள் பெயர் குறிக்கப்பட்ட பிரதிக்காகப் பணம் அனுப்பியவர்கள் தயவுசெய்து உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நாவலில் என்ன பெயர் வர வேண்டும் என்ற விவரம் தேவை. அதோடு உங்கள் முகவரியும் தொலைபேசி எண்ணும்கூட வேண்டும். அது பிரதியை உங்களுக்கு அனுப்பி வைக்க. உடனடித் தேவை பிரதியில் அச்சடிக்கப்படும் உங்கள் பெயர். அதை இன்னும் ஒருசில தினங்களுக்குள் அச்சகத்துக்குக் கொடுத்தாக வேண்டும். என் மின்னஞ்சல் முகவரி

charu.nivedita.india@gmail.com

இதற்கு மேல் இது பற்றி எழுத மாட்டேன். உங்கள் பெயர் தியாகராஜா நாவலில் என் கையொப்பத்துடன் வர வேண்டும் என்று விரும்பினால் அதற்கான நன்கொடை 10,000 ரூ. அனுப்பி வையுங்கள்.

பணம் அனுப்புவதற்கான விவரம்:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai