என்ன மேட்டர்?
தோழர்க்கெல்லாம்மணவாழ்வில் நுழையாதீரெனஅனுபவ அட்வைஸ் கொடுப்பதுவழக்கம்இப்போது இன்னொன்றையும்சேர்க்கலாம்யாரும் காதல் செய்யாதீர்!தேவையெனில்இருக்கவே இருக்கிறதுஒன் நைட் ஸ்டேண்ட் காரணம்? நீண்ட இடைவெளிக்குப் பின்அவளுக்கு ஃபோன் செய்தேன்காரணமெதுவுமில்லையாழினும் குழலினுமினியஅவள் குரலைக் கேட்கலாமே என்றுதான்மேலும்காரணம் வைத்துக்கொண்டாகாதலியை அழைக்கிறோம்? எடுத்த எடுப்பில்என்ன மேட்டர் என்றாள் உன்னைக் கொல்ல வேண்டும்அதுதான் மேட்டர் என்று வந்ததுவந்ததையெல்லாம் வேற்றுக்கிரகவாசிகளிடம்சொன்னால் லோகம் அழிந்து விடும்நிம்மதியும் கெட்டு விடும் அதனால்ஒரு மேட்டருமில்லைஎன்று உண்மை சொன்னேன்