ஒரு சிறிய பயணம் (4) : அராத்துவின் எதிர்வினை

அந்த டெபிட் கார்ட் பு வை உடல் உறுப்பு போல கூடவே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதும் சாட்சாத் இந்த அராத்துதான். இப்போது சொன்னால் சாருவுக்கு கடுப்பு பு வரும் என தெரியும் . ஏனென்றால் அவரே பிரச்சனை பு வில் இருக்கிறார். இது சாதா பிரச்சனை போல நமக்கு தோன்றும் , ஆனால் சாரு பதட்டமாகி விடுவார். அவருக்கு ஸ்க்ரிப்ட்டில் இருப்பது ஒரு சீன் தவறாமல் ஒழுங்குடன் நடக்க வேண்டும் , இல்லையெனில் பதட்டமாகி விடுவார். … Read more

ஒரு சிறிய பயணம் (3)

அந்த நதியில் என்ன நடந்தது என்பதற்கு முன்னால் வேறு சில சம்பவங்களையும் இங்கே எழுதிவிட்டு மேலே செல்லலாம். நேற்று எக்ஸைலில் ஒரு பகுதியில் திருத்தம் செய்து கொண்டிருந்த போது தமிழர்கள் எத்தனை விதமாக பு…  வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் என்று எழுதினேன்.  மு.பு., கே.பு., அறிவுகெட்டப் பு. என்பதெல்லாம் நாம் சாதாரணமாக அறிந்தவை.  எப்போதாவது பயன்படுத்தப்படும் பு…க்களும் உள்ளன.  ஒருவர் தனக்கு நியாயம் என்று நினைப்பதைச் சொல்கிறார்.  அது அடுத்தவருக்கு அநியாயமாகப் படுகிறது.  உடனே ”போய்யா, பெரிய நியாயப் … Read more

பிரியமானவர்களுக்கு மட்டும்…

சமீபத்தில் ஒரு வாரம் சுற்றுப் பயணம் செய்த போது காலையில் 7 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை எந்தக் குறுக்கீடும் இல்லாமல் நேரம் கிடைத்தது.  எக்ஸைல் வேலை தலைக்கு மேல் இருந்தும் லேப்டாப் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  ஒரு நண்பர் ஓசியில் கொடுத்திருந்த பழைய லேப்டாப்பின் ஆயுட்காலம் முடிந்து சில மாதங்கள் ஆகின்றன.    உடனடியாக சல்லிசாக ஒரு லேப்டாப் வாங்க வேண்டும்.  என் வங்கிக் கணக்கில் ரூ. 560/- தான் உள்ளது.  முடிந்தவர்கள் பணம் … Read more

(2)

விருந்தோம்பலில் கொங்கு நாட்டு மக்களுக்கு நிகராக யாருமே வர முடியாது என்பது என் அனுபவம்.  அதனால்தான் அடிக்கடி அங்கே சென்று கொண்டிருக்கிறேன். முதலில் ஈரோடு ஆடிட்டர் ரமேஷ்.  ஒரு குழந்தையைப் போல் பழகுவார். அராத்துவுக்குப் பிறகு, அன்பை செயலிலும் காட்டுபவர்.  பொள்ளாச்சிக்கு அருகில் கேரளா எல்லையில் ஆம்பராம்பாளையம் என்ற ஊர் உள்ளது.  இங்கே உள்ள Ambrra River Resort-இல் ஒரு நாள் தங்கினோம்.  ஒரு மாபெரும் தென்னை வனத்தின் நடுவே கட்டப்பட்டுள்ளது இந்த விடுதி.  அதைத் தோப்பு … Read more

ஒரு சிறிய பயணம் (1)

பயணம் முடிந்து சென்னை வந்து சேர்ந்து விட்டேன்.  ராமனாதபுரத்தில் டிமிட்ரியின் திருமணம் இனிதே முடிந்தது. தம்பதியர் தேன் நிலவுக்குக் கிளம்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  மதுரையில் என்னை கவனித்துக் கொண்டவர் பூர்ணசந்திரன்.  ராணி மங்கம்மாள் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.  நல்ல வசதியான இடம்.  பல நண்பர்கள் வந்து பார்த்தனர்.  இரவு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  மதுரையில் எனக்கு சபரீஸை விட கௌரி கங்கா உணவகம் தான் பிடித்திருந்தது.  முந்தின இரவு வெறும் பழங்கள்தான் சாப்பிட்டிருந்தேன்; அதுவும் ரொம்பக் கொஞ்சமாக என்பதால் … Read more

கடவுளின் முன்னே மனிதனின் கீழ்மை

’உத்தமத் தமிழ் எழுத்தாளர்’ சொல்லும் பொய்களுக்கும் செய்யும் ஏமாற்று வேலைகளுக்கும் அளவே இல்லாமல் போய் விட்டது.  இமயமலையைப் பார்த்த போது எங்கள் குழுவில் இருந்த அத்தனை பேரும் சொல்லையும் செயலையும் இழந்து கடவுளின் முன்னே நிற்பது போல் உணர்ந்தோம்.  நானோ அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து விழுந்து கும்பிட்டேன். ஜிஸ்பா என்ற இடத்தில் சுமார் முப்பது குடும்பங்கள் இருந்தன.  அங்கேயும் மூச்சு விட சிரமம்தான்.  ஒரு பெண் என்னைப் பார்த்து எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்.  உடனே பக்கத்திலிருந்த  … Read more