உயிர்த்தெழுதல்

அவள் சொன்னாள்’இரண்டு நாட்கள் தொடர்பில்லையென்றாலும் பதறாதேமூன்றாம் நாள் பேசுவேன்’நம்பிக்கையை ஒரு மெல்லிய காகிதத்தில்மடித்து பையின் மூலையில் வைத்தேன் இன்று மூன்றாம் நாள்காலை ஏழு மணிஅழைத்தேன்ஒலி ஒரு பறவை போல்காற்றில் பறந்து மறைகிறது எட்டு மணிமீண்டும் மௌனம்மௌனம் ஒரு பழைய நண்பன் போல்தோளில் கை போட்டு’இது உனக்குப் பழகி விட்டதல்லவா?’என்று கேட்கிறது பெண்கள் மீது ஒரு பயம்ஆண்களின் அன்பு அவர்களை மூச்சு முட்டச்செய்யுமாம்பலர் சொல்லிக் கேள்விநான்தொந்தரவு செய்ய விரும்பாதவன்ஒன்பது மணிக்கு அழைக்கவில்லைகாலத்தைப் பிடித்து வைக்க முடியுமா? யாரோ கேட்டார்கள்என்ன … Read more

ஒற்றையெழுத்து பதில்

நேற்றுதான் எழுதியிருந்தேன், ஒற்றையெழுத்து பதில் கொடுத்து மற்றவர்களின் மண்டை காய வைப்பது பற்றி. நான் எழுதி ஈரம் காய்வதற்குள் அதே விஷயம் நடந்தது. ஒருவருக்கு ஒரு முக்கியமான விஷயம் பற்றி நாலு வாக்கியங்களில் அவர் பெயரையும் விளித்து விளக்கமாக ஒரு கடிதம் எழுதினேன். ஓகே என்று பதில் மின்னஞ்சல் வந்தது. செருப்பால் அடித்தது போல் இருந்தது. ஓகே சாரு என்று எழுதுவதற்கு உங்களுக்கு என்ன குடியா முழுகி விடும்? இப்படிப்பட்டவர்களோடுதான் நான் பேச வேண்டியிருக்கிறது. இதற்குக் கோபித்துக் … Read more

ஒரு வேண்டுகோள்

சில வேண்டுகோள்கள் என்றுதான் போட வேண்டும். இருந்தாலும் வேண்டுகோள்கள் என்றால் அதில் லயம் இல்லை. அதனால் இலக்கணப் பிழை பரவாயில்லை என ஒரு வேண்டுகோள் என்று கொடுத்திருக்கிறேன். முதல் வேண்டுகோள். சில தினங்களில் நான் இரண்டு மூன்று கட்டுரைகளையோ கவிதைகளையோ இந்த இணையதளத்தில் வெளியிடுகிறேன். சில நண்பர்கள் அதில் மேலே இருக்கும் ஒரு கட்டுரையையோ கவிதையையோ மட்டும் படித்து விட்டு என்னிடம் பேச வருவார்கள். நான் அதற்கு முந்தைய கவிதை பற்றிப் பேசினால், நான் தினமும் படிக்கிறேனே, … Read more

Finale of a Symphony

1.அறிமுகம் தேவி!இதை ஒரு மனநோய் விடுதியிலிருந்துஎழுதுகிறேன்இங்கு நானாவித பைத்தியங்கள் வசிக்கிறோம் சிலர் மௌனத்தின் ஆழத்தில் மூழ்கியவர்கள்வார்த்தைகள் தொலைத்து விழிகளால் பேசுவர்சிலர் நெஞ்சில் புயல் கொண்டு நடுங்குவர்கிட்டத்தில் போனால் கோபத்தின் கூச்சலோடு தாக்குவர் சிலர் கண்ணுக்குப் புலனாகா உலகில் வாழ்பவர்மாயக் குரல்களோடு உரையாடுவர்நவரசமும் அவர் நாவில் நடனமிடும்சிலர் உடைந்த கண்ணாடியாய் உள்ளனர்கண்ணீரில் கரைந்து வலியில் தவிப்பர் சிலர் ஒளி மறந்து இருளில் மூழ்குவர்படுக்கையில் புதைந்து மௌனத்தில் தவிப்பர்சிலர் மாயப் புயலில் தொலைந்தவர்கள்கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிடுவர் சிலர் எரியும் … Read more

பிரபு காளிதாஸுடன் ஒரு காலைப் பொழுது

காலை ஐந்தேகால் மணிக்கு என் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருந்தார் பிரபு காளிதாஸ். நான் படுத்தவுடனேயே சவத்தைப் போல் தூங்கி விடுவேன். ஆனால் நேற்று இரவு இரண்டு மணி வரை தூக்கம் வரவில்லை. இது என் வாழ்வில் புதிய அனுபவம். எனக்கு வந்த ஒரு வாட்ஸப் மெஸேஜ் காரணம். என்னைச் சேர்ந்த எல்லோருமே என்னிடம் மூர்க்கமாகப் பழகத் தொடங்கி விடுவதால் அது எனக்கு ஆச்சரியமில்லை எனினும் அந்த மெஸேஜ் என்னை வெகுவாக பாதித்து விட்டதால் உறக்கம் வரவில்லை. காலையில் … Read more

புகைப்படக் கலை

புகைப்படக் கலையின் சில அடிப்படைகளை பாண்டிச்சேரியில் கற்றுக் கொண்டேன். அதாவது, என்னென்ன செய்யக் கூடாது என்ற விஷயங்களை. புகைப்படக் கலை பற்றி எதுவுமே தெரியாத நான் சில ஆண்டுகளுக்கு முன்பு லெபனானில் என் ஐஃபோன் மூலம் எடுத்த சில புகைப்படங்களைப் பார்த்து விட்டு மிஷ்கின் “இது ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டவை போல் இருக்கிறது” என்று சொன்னார். பொதுவாக என் நூல்களில் என் புகைப்படம் இடம் பெறுவதை நான் விரும்புவதில்லை. இருநூறு பிரதிகள் விற்கும் ஒரு … Read more