தியாகராஜா

இருபது அத்தியாயங்கள் எழுதி விட்டேன். இன்னும் ஒரு முப்பது அத்தியாயங்கள் எழுத வேண்டும். ஏற்கனவே எழுதி வைத்ததுதான். செப்பனிடும் வேலைதான் செய்து கொண்டிருக்கிறேன். அந்த வேலை எழுதும் வேலையை விட அதிக நேரம் எடுக்கிறது. ஆயிரம் பக்கம் ராஸ லீலாவுக்கு செலவிட்ட நேரத்தை விட மூன்று மடங்கு அதிக நேரம் எடுக்கிறது இந்த நாவலுக்கு. ஏனென்றால், ஒவ்வொரு வார்த்தையையும் வாக்கியத்தையும் எழுதுவதற்கு ஏராளமான ஆய்வுகள் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நாவலை நீங்கள் ஒரே அமர்வில் இரண்டு மூன்று தினங்களில் படித்து விடலாம். ஆனால் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களில் சற்றே ஆழமாகப் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் இந்த நாவலைப் படித்து முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகும்.

மிகுந்த உடல் உழைப்பைக் கோருகின்ற நாவல் இது. பன்னிரண்டு மணிக்குப் படுத்து ஐந்து மணிக்கு எழுந்து கொள்கிறேன். காலை ஐந்தரையிலிருந்து ஏழரை வரை எழுதி விட்டு அதற்குப் பிறகுதான் நடைப்பயிற்சிக்குச் செல்கிறேன். இது தவிர, மூளைக்கும் அதிக வேலை தர வேண்டியிருக்கிறது. ஒரு விஞ்ஞானப் பரிசோதனைக் கூடத்தில் இரவு பகலாக ஆய்வுகளில் ஈடுபடுவதைப் போல் இருக்கிறது இந்தப் பணி.

இந்த நாவலில் உங்களுடைய வழக்கமான ஸ்டைல் இல்லையே என்றார் ஒரு தோழி. இதற்கான காரணத்தை நாவலைத் திறந்தவுடனேயே கண்டு கொள்வீர்கள். நாவல் வெளிவரும் வரை நாவல் பற்றி எந்தத் தகவலும் தர வேண்டாம் என்று இருக்கிறேன். ஆனாலும் ஒன்றை உறுதியாக நிச்சயமளிப்பேன். எடுத்தால் கீழே வைக்க முடியாது. அந்த ஒரு விஷயத்தில் என் ஸ்டைல் கட்டாயம் இருக்கும்.

நாவலில் முதல் நான்கு ஐந்து அத்தியாயங்களைப் படித்து விட்டு ஒரு தோழி இப்படி ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

Hi Charu ..I am barely halfway through the novel and I already FEEL like TOUCHING your FEET

I never imagined I would say this to you, but I mean it with absolute sincerity. I am staggered by the fecundity of your imagination and the dexterity with which you have brought this entire world into being. There is something almost alchemical about the writing…the atmosphere, the characters, and those seemingly inconsequential details that suddenly acquire such resonance. I keep wondering where this profusion of imagination comes from.. have only read half of it  and I am already enthralled, a little bewildered, and moved by what you have created.

I hardly feel qualified to say this to you but you are truly remarkable and inimitable which I suspect you already know. I admire you. Sitting here at Iron Hill enjoying my evening and raising a glass to you Cheers Charu.

நாவலின் ஸ்பெஷல் எடிஷனைப் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள் உடனடியாக 10000- ரூபாய் அனுப்ப முடியாவிட்டால் கவலை வேண்டாம். உங்களால் முடிந்த அளவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பலாம். பிரச்சினை இல்லை. உங்கள் பெயர் நாவலின் பிரதியில் அச்சில் வந்தால் அது பிற்காலத்தில் மிகச் சிறந்த ஒரு அடையாளமாக இருக்கும். சுமார் இருபது ஆண்டுகள் சென்று அது உருவாக்கும் ஞாபக அலைகளை நினைத்துப் பாருங்கள்.

மேலே உள்ள கடிதத்தில் உள்ள பாராட்டு வார்த்தைகள் அனைத்தும் தியாகராஜருக்கு மட்டுமே உரித்தானவை. அவர் எழுதுகிறார். நான் ஒரு கருவிதான். ஏனென்றால், பல சம்பவங்கள், பல வாக்கியங்கள் என் கனவிலே வந்து தானே எழுதிக்கொள்கின்றன. உடனே எழுந்து அவற்றை எழுத ஆரம்பிக்கிறேன். இது எல்லாம் பொய் என யாரேனும் நினைத்தால் அவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.

நிர்குண் இந்த நாவலுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட அட்டை ஓவியங்களை உருவாக்கியிருக்கிறார். அவற்றில் இரண்டு கீழே. அவர் உருவாக்கிய தியாகராஜர் சிற்பம் படத்தில் உள்ளது.

ஸ்பெஷல் எடிஷனுக்கான பணம் அனுப்புவதற்கான விவரமும் கீழே வருகிறது.

பணம் அனுப்புவதற்கான விவரம்:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai