ஒருமுறை சீனி எனக்குப் பிடித்த நூறு புத்தகங்களின் பெயர் கேட்டார். கொடுத்தேன். பார்த்து விட்டு அவர் ஒரு ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொண்டார். அதில் உள்ள தொண்ணூறு புத்தகங்கள் ஓஷோவின் நூறு நூல் பட்டியலில் இருந்ததாம். அதில் இரண்டு புத்தகங்கள் மிகெய்ல் நெய்மி எழுதிய தெ புக் ஆஃப் மிர்தால், கலீல் ஜிப்ரான் எழுதிய ப்ராஃபட். இருவரும் நண்பர்கள். இருவரும் லெபனானைச் சேர்ந்தவர்கள். இந்த இரண்டில் ப்ராஃபட் என்ற நூல் பைபிள் அளவுக்கு உலகம் முழுவதும் பிரபலமான புத்தகம். உலகம் முழுவதும் அறியப்பட்ட, வாசிக்கப்பட்ட புத்தகம்.
நான் எழுதி வரும் தியாகராஜா நாவலும் ப்ராஃபட் போன்ற புத்தகம்தான். லட்சக்கணக்கில் விற்க வேண்டிய புத்தகம். வெளிவந்தால் ஒரு ஐயாயிரம் பிரதிகளாவது விற்கும் என நம்புகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் ஒன்று. நான் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தேன். வீடு வந்ததும் பணம் கொடுத்த போது டிரைவர் பணம் வேண்டாம் என்று சொல்லி, என் கையில் ஒரு பைபிளைக் கொடுத்தார். என்னிடம் ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் அரை டஜன் பைபிள் இருக்கிறாது என்று சொல்லி அன்புடன் மறுத்து விட்டு, பணத்தைக் கொடுத்தேன்.
தியாகராஜா அப்படிப் பரவலாகச் செல்ல வேண்டிய நூல். மதம் சம்பந்தமான நூல் அல்ல. கலீல் ஜிப்ரானின் ப்ராஃபட் மத நூல் அல்ல. அற நூல். தியாகராஜா அதுவும் அல்ல. தியாகராஜாவின் நாடி என்னவென்றால், பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றண்டுகளில் தஞ்சாவூரில் மராட்டியரும், தெலுங்கரும், ஃப்ரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயரும், நவாபுகளும் மண்ணுக்காக சண்டையிட்டு, தஞ்சாவூரில் ரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த போது ஒரு மனிதர் தான் இயற்றிய கீர்த்தனைகளைப் பாடியபடி, உஞ்சவிருத்தி செய்து தான் வணங்கிய இஷ்ட தெய்வத்தை நேரிலேயே பார்த்தார் என்பதுதான். மனித வாழ்வின் மகா உன்னதமான அறத்தைப் பேசும் நூல் தியாகராஜா.
இந்த நூல் இதுவரை தமிழிலேயே வந்திராத அளவுக்கு தயாரிப்பில் ஒரு உச்சமாக வர இருக்கிறது. தயாரிப்புச் செலவே ஒரு பிரதிக்கு ஆயிரம் ரூபாயைத் தாண்டி விடும். அத்தனை விஷயங்களை நான் அச்சகத்தில் கேட்டிருக்கிறேன். அவர்களும் செய்து கொடுப்பதாக இசைந்திருக்கிறார்கள்.,
இப்படிப்பட்ட ஒரு பொக்கிஷயத்தில் உங்கள் பெயர் வர வேண்டாமா, வேண்டும் என்றால் எனக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் அனுப்புங்கள், இப்போது உடனேயே பணம் வேண்டாம், உங்கள் பெயரையாவது கொடுத்துப் பதிந்து கொள்ளுங்கள், பிற்பாடு பணம் கைக்கு வரும்போது கொடுத்தால் போதும் என்று சொன்னால், என் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த இரண்டே இரண்டு பேர்தான் பணம் அனுப்பியிருக்கிறார்கள். அதிலும் அவர்கள் இருவரும் நான் அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நொடியில் பணம் அனுப்பினார்கள்.
என் வாசகர் வட்டத்தில் முப்பது பேர் உண்டு. அந்த முப்பது பேரின் உதவியினால்தான் நான் உயிரோடு இருக்கிறேன். எழுதுகிறேன். அவர்களின் உதவி இல்லையேல் என் உயிர் என்னிடம் இல்லை. எழுத்தும் இல்லை. அந்த நன்றி எனக்கு உண்டு. அவர்கள் அத்தனை பேருக்கும் நான் தியாகராஜா நாவலை அன்பளிப்பாகவே கொடுப்பதுதான் நியாயம். ஆனால் அந்த நிலைமையில் நான் இல்லை. மொழிபெயர்ப்புக்காகவே லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கிறேன்.
என் கேள்வி இதுதான். இப்படி ஒரு முக்கியமான புத்தகத்தில் உங்கள் பெயர் வர வேண்டாமா? நான் சொல்வதன் முக்கியத்துவம் உங்களுக்குப் புரிகிறதா? யாரைக் கேட்டாலும், புத்தகம் வரட்டும், வாங்கிக் கொள்கிறேன் என்கிறார்கள். ஒரு நண்பர் ஒரு படி மேலே போய் புத்தகம் வந்த பிறகு நான் எனக்குத் தெரிந்த நாலைந்து நண்பர்களிடம் பரிந்துரை செய்கிறேன் என்றார்.
ஐயா, தியாகராஜருக்கு யாருடைய பரிந்துரையும் வேண்டாம். அது பாட்டுக்கு ஆயிரக்கணக்கில் விற்கும். எனக்குத் தேவை மொழிபெயர்ப்புக்குப் பணம். முடிந்தால் இதில் இணைந்து கொள்ளுங்கள். இல்லையேல் புத்தகம் வந்த பிறகு பரிந்துரை எதுவும் வேண்டாம்.
நண்பர்கள் என்னென்னவோ சந்தேகங்களை எழுப்புகிறார்கள். இந்த நாவலை ஸ்பான்ஸர் செய்பவர்கள்தான் பிரசுரிக்கப் போகிறார்களா என்று ஒரு சந்தேகம். இனிமேல் வரும் என்னுடைய எல்லா புத்தகங்களையும் ராஸ லீலா பதிப்பகம்தான் வெளியிடும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் என்னுடைய அறுபத்தொன்பது நூல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. அவை அனைத்தும் எப்போதும் ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்தே வெளிவரும். இதிலும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
சில ஆண்டுகளுக்கு முன் ராஸ லீலா ஸ்பெஷல் எடிஷன் ஸீரோ டிகிரி பதிப்பகத்தால் கொண்டு வரப் பட்டது. ஒரு பிரதி பத்தாயிரம் ரூபாய். ஆயிரம் பக்கம். பத்தாயிரம் கொடுப்பவர்களின் புகைப்படம் நூலின் பின்னட்டையில் வெளிவந்தது. இதன் தயாரிப்புச் செலவு முழுவதையும் ஸீரோ டிகிரி பதிப்பகமே ஏற்றுக்கொண்டது.
ஆனால் ராஸ லீலா பதிப்பகத்தில் நிலைமை வேறு. இப்போதைய சூழல் முன்னைப் போல் இல்லை. அதனால் இப்போதைய ஸ்பெஷல் எடிஷன் பிரதிகளின் தயாரிப்புச் செலவை நானேதான் ஏற்றுக்கொள்ள இருக்கிறேன். ஒரு பிரதியின் தயாரிப்புச் செலவு ஆயிரம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். ஸ்பெஷல் எடிஷனுக்காக நீங்கள் ஒன்பது பேர் பணம் அனுப்பியிருந்தால் ஒன்பதாயிரம் ரூபாயை நான் ராஸ லீலா பதிப்பகத்தில் கொடுத்து விடுவேன். என்னால் யாரும் லாபம் அடையாவிட்டாலும் பரவாயில்லை; நஷ்டம் அடையக் கூடாது என்ற கொள்கையுடையவன் நான். ராஸ லீலா ஸ்பெஷல் எடிஷனுக்கு எழுபத்தைந்து பேர் பணம் அனுப்பியிருந்தார்கள். எழுபத்தைந்து பிரதிகள். ஆயிரம் பக்கம். கெட்டி அட்டை. அத்தனை செலவையும் ஸீரோ டிகிரி பதிப்பகம்தான் ஏற்றது.
இப்போதைய நிலைமை வேறு என்று சொன்னேன் இல்லையா? ஆம், ஜோடிப்புறா நாவல் நூறு பிரதி விற்றிருக்கிறது. இரண்டாயிரம் பிரதிகளாவது விற்றிருக்க வேண்டும் இல்லையா? நூறு பிரதிகளுக்கு எனக்கு என்ன ராயல்டி வரும்? 6000 ரூபாய். விளங்குமா? அதனால்தான் இந்த ஸ்பெஷல் எடிஷன், பத்தாயிரம் ரூபாய் எல்லாம்.
வாசகர் வட்டத்தைச் சேர்ந்த முப்பது பேரில் இரண்டே இரண்டு பேரைத் தவிர வேறு ஒருத்தர் கூட இந்த ஸ்பெஷல் எடிஷன் திட்டத்தில் சேர முன் வரவில்லை என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. காலம் உள்ளளவும் நிற்கக்கூடிய ஒரு பொக்கிஷத்தில் உங்கள் பெயர் வருவது பற்றி உங்களுக்கு அக்கறையே இல்லையா? வருந்துகிறேன்.
பணம் அனுப்புவதற்கான விவரம்:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai