தியாகராஜா: ஸ்பெஷல் எடிஷன்: மாணவர்களுக்கு

அரசுத் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவியிடமிருந்து இன்று ஒரு மின்னஞ்சல். மாதம் ஐநூறு ரூபாய் அனுப்புகிறேன்; இருபது மாதத்தில் பத்தாயிரம் வந்து விடும். எனக்கு ஸ்பெஷல் எடிஷன் ஒரு பிரதி வேண்டும்.

நான் சொன்னேன், நீங்கள் நிச்சயம் அரசுத் தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள். அதிகார இருக்கையில் அமர்வீர்கள். அப்போது மறக்காமல் இருபதாயிரம் கொடுத்து விடுங்கள்; இப்போது உங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்கிறேன்.

இது போல் யாரேனும் மாணவர்களுக்கு ஸ்பெஷல் எடிஷன் தேவைப்பட்டு, இப்போதைக்குப் பணம் இல்லை என்றால், மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள். பத்து மாதத்தில் முடித்து விடலாம். அப்படிப் போடாதீர்கள், பாதியிலேயே போய் விடுவார்கள் என்றார் ஒரு நண்பர். அப்படி என் வாழ்வில் நடந்ததே இல்லை. என்னை யாரும் ஏமாற்றியதே இல்லை. ஒரு விஷயம் நடந்திருக்கிறது. மாணவப் பருவத்தில் தன் கைச்செலவுக்காக பெற்றோர் அனுப்பும் ஐநூறு ரூபாயில் நூறு ரூபாயை வலுக்கட்டாயமாகத் திணித்து விட்டுச் செல்லும் மாணவ மணிகள் பலர், இரண்டு லட்சம் ஊதியத்தில் வேலைக்குப் போனதும் என்னை மறந்து விடுகிறார்கள். அப்படிப் பலரைப் பார்த்திருக்கிறேன்.

போகட்டும். நான் மேலே குறிப்பிட்டபடி, கைவசம் பணம் இல்லாதவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்ப முடிவு செய்தால் அதை வரவேற்கிறேன். உங்கள் பெயர் ஸ்பெஷல் எடிஷன் பட்டியலில் சேர்க்கப்படும்.

நிர்குண் இப்படி நூறு அட்டை ஓவியங்களை உருவாக்கியிருக்கிறார். அதில் ஒன்று இது.

ஸ்பெஷல் எடிஷன் பற்றிய அறிவிப்பைப் படிக்காதவர்கள் படித்து விடுங்கள். ஐம்பது பேராவது தேறினால்தான் இந்த முயற்சிக்கு அர்த்தம் ஆகும்.

நீங்கள் யாருக்கேனும் தியாகராஜா நாவலை பரிசளிக்க விரும்பினாலும் இந்த ஸ்பெஷல் எடிஷன் திட்டத்தில் சேருங்கள். புத்தகத் தயாரிப்பு ஒரு பொக்கிஷத்தைப் போல் இருக்கும் என்பதை உறுதியளிக்கிறேன்.

பணம் அனுப்புவதற்கான விவரம் கீழே கொடுத்திருக்கிறேன்.

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai