நவீன தீண்டாமை

(ஒரு மணி நேரத்துக்கு முன்னால் இந்தக் கட்டுரையை தளத்திலிருந்து நீக்கியிருந்தேன். ஆனால் மீண்டும் மீண்டும் யோசித்த போது இதில் உள்ள எந்த விஷயமும் முடக்கப்பட வேண்டியதில்லை என்று தோன்றியதால் மீண்டும் இதைப் பதிவிடுகிறேன்.)

இப்போது எழுதப் போகும் விஷயத்தைப் படித்ததும், ஒரு நற்செயலைத் தொடங்கும்போது எதிர்மறையான ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமா என்று நண்பர்கள் பலருக்குத் தோன்றும்.  சிலருக்கு மனவருத்தமும் கோபமும் ஏற்படலாம்.  அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது.  பந்தை சுவரில் அடித்து விட்டீர்கள்.  பந்து திரும்பிதான் வரும்.  சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் என் சோற்றில் நஞ்சைக் கலந்தார்.  நஞ்சு என்னைக் கொல்லவில்லை.  தொண்டையிலேயே அடக்கி விட்டேன்.  அதை என் உடலிலிருந்து வெளியேற்றினால்தான் நான் செய்யப் போகும் நற்செயலை செய்ய முடியும்.  நஞ்சை வைத்துக்கொண்டே இயங்குவதற்கு நான் ஒன்றும் பரமேஸ்வரன் அல்ல.  இப்போது எழுதப் போவது அந்த நஞ்சு அகற்றும் வேலைதான். 

அவர் ஒரு இசை விமர்சகர்.  அருமையான இசைக் கட்டுரைகள் எழுதுபவர்.  இசை பற்றி எழுதுவதற்கு ஆட்களே இல்லாத நிலையில் அவர் எழுதும் கட்டுரைகள் மிகவும் தேவையானவை.  அவர் கட்டுரைகள் பற்றி நான் வெகுவாக சிலாகித்து எழுதியிருக்கிறேன்.  ஆனால் என் பாராட்டு அவரைப் பெரிதும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது என்று பின்னாளில்தான் தெரிந்து கொண்டேன்.  அதிலும் ஒரு முக்கியமான சம்பவத்திலிருந்து.    

அவரிடம் நான் அவ்வப்போது தியாகராஜா நாவலுக்காக கர்னாடக இசை குறித்து என் சந்தேகங்களைக் கேட்பதுண்டு.  ஒருநாள், “நன்றி என்று சொல்லி என் பெயரைப் போட்டு விடாதீர்கள், பெரிய பிரச்சினை ஆகி விடும்” என்றார்.  எனக்குப் புரிந்தது.  அவர் ஒரு பிராமணர்.  நான் ஒரு அபிராமணன்.  அதிலும் ஒரு செக்ஸ் ரைட்டர்.  அப்படி இருக்கும்போது ஊரில் பிரபலமான ஒரு குச்சுக்காரி அந்த ஊரில் வசிக்கும் ஒரு கனவானுக்கு நன்றி சொன்னால் கனவானின் கற்பு என்ன ஆவது?   ஆனால் என் வழக்கம் என்னவென்றால், இது போன்ற கோழை மடிசஞ்சிகளின் அனுமதி இல்லாமல் அவர்களின் பெயரை உச்சரிப்பது கூட இல்லை.

ஆனால் அந்தச் சம்பவத்துக்குப் பிறகும் அவரை நான் தொடர்பு கொண்டு சந்தேகங்கள் கேட்பதுண்டு.  காரியம் ஆக வேண்டுமே?  நான் என்ன சொந்த வேலையாகவா உதவி கேட்கிறேன்?  தியாகராஜருக்குச் செய்யும் சேவை.  அதில் பங்கெடுத்துக் கொள்ள அழைக்கிறேன்.  அது ஒரு திவ்ய காரியம் அல்லவா?

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  அந்த இசை விமர்சகர் என் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் “தியாகராஜரைப் பற்றித்தான் எல்லாவற்றையும் ஜாக்சன் எழுதி விட்டாரே?  இனிமேல் இவர் (சாரு) எழுதுவதற்கு என்ன இருக்கிறது?” என்று நக்கல் தொனியில் கேட்டிருக்கிறார். 

ஏன்டா முட்டாள், என்னுடைய நெருங்கிய நண்பர் இந்த விஷயத்தை என்னிடம் சொல்லுவார், அதனால் உனக்கு ஓத்தாம் பாட்டு கிடைக்கும் என்பது கூடவாடா தெரியாமல் போயிற்று உனக்கு?  ஏன்டா இன்னமும் இப்படி ஜாதி வெறி பிடித்து அலைகிறீர்கள்?  ஒரு பக்கம் பார்த்தால் அபிராமணர்கள் என்னை பிராமண அடிவருடி என்று திட்டுகிறார்கள்.  இன்னொரு பக்கம் பார்த்தால் உன்னைப் போன்ற பிராமணர்கள் என்னை ”கிட்டே வராதே, தீட்டு ஒட்டிக்கும்” என்கிறீர்கள்.  என்னதான்டா செய்வது நான்?

உங்களுடைய பழைய எஜமானனான ஜாக்ஸன் துரை – ஒரு வெள்ளைக்காரன் – தியாகராஜா பற்றி எழுதலாம், நான் எழுதக்கூடாதா?  என்னடா லாஜிக் இது?  ஓகே, ஜாக்ஸன் எல்லாவற்றையும் எழுதி விட்டார்,  இனிமேல் தியாகராஜா பற்றி எழுத எதுவும் இல்லை.  நம் பெரியவாள் முடிவு செய்து விட்டார்!  ஏன்டா மூடா, சிருஷ்டியில் உள்ள ஒரு சின்ன விஷயம் கூடவா உனக்குத் தெரியாமல் போயிற்று?  வால்மீகிதான் ராமரைப் பற்றி எழுதி முடித்து விட்டாரே?  அப்புறம் ஏன் தியாகராஜர் எழுதினார்?  இப்படி ஒருத்தன் கேட்க முடியுமா?  அது ஏன்டா சங்கீதத்தில் ரசனையாக இருக்கும் ஒரு மனம் இன்னொரு விஷயத்தில் பீயைத் தின்கிறது?   

ஒரு விஷயம் சொல்கிறேன்.  Lewis Lockwood பீத்தோவன் பற்றி ஒரு வாழ்க்கை வரலாறு எழுத நினைத்தார்.  ஆனால் அதற்கு முன்பே பீத்தோவன் பற்றி ஒரு இருபத்தைந்து வாழ்க்கை வரலாற்று நூல்கள் இருந்தன.  அவற்றில் ஒரு பத்து மாஸ்டர்பீஸ் என்று சொல்லத் தக்கவை.  அவற்றை மீறி, அவற்றை மிஞ்சி பீத்தோவன் பற்றி எழுத ஒன்றுமே இல்லை.  ஆனாலும் லாக்வுட் பீத்தோவனின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.  முன்னுரையில் அவர் சொல்கிறார்:

A question any reader will ask is how this book fits into the current spectrum of works on Beethoven, including those of Solomon, William Kinderman, David Wyn Jones, Barry Cooper, and others. The best analogy I can give is that of several painters making portraits of the same subject.

Despite certain obvious resemblances, the differences will outweigh the similarities. For no matter how faithfully painters work to present their subjects, they also present themselves. Each has an individual point of view, a vision of the subject that determines what the essential proportions, colors, and textures will be, what features will be thrust into the foreground and what will remain in the shadows or be omitted altogether. Since this book springs primarily from my experience of the music, it inevitably reflects my own viewpoint and interests. It also illustrates my preference for making a portrait of the composer in which the music looms larger than the life, the composer dominates the man, but in which both have a place.

அதாவது அம்பி, நீ பார்க்கும் தியாகராஜர் வேறு.  நான் பார்க்கும் தியாகராஜர் வேறு.  நான் உன்னிடம் ஒருமுறை கேட்டேன், ”ராமரை நேரில் கண்டதாக தியாகராஜர் எழுதியிருக்கிறார்.  அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” 

எகத்தாளமாக பதில் சொன்னாய்.  “அதையெல்லாம் நாம் அவரது ஹலூஸினேஷன் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.”

அப்படி எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று திரும்பத் திரும்ப தனது கீர்த்தனைகளில் நம்மைப் பார்த்து இறைஞ்சுகிறார் தியாகராஜர்.  நான் நேரிலேயே ராமனைக் கண்டேன், தொட்டுப் பார்த்தேன், என்னை நம்புங்கள் என்கிறார்.  ஒருமுறை தியாகராஜர் தன் அண்ணனிடம் அடி வாங்கி மயங்கி விழுந்த போது அவரை அவரது வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு போனவன் ராமன்.  இன்னொரு முறை, தம்பதி சகிதம் தனது பாகரோடு (சமையல்காரர்) தியாகராஜர் வீட்டுக்கு வந்து பாகரை சமைக்கச் சொல்லி நால்வரும் சாப்பிட்டிருக்கின்றனர்.  “உன்னை நான் ராமனாகவே பார்க்க வேண்டும், மாறுவேஷத்தில் அல்ல” என்று தியாகராஜர் கேட்டுக் கொண்டதால் மீண்டும் தனது சீதையுடனும், அனுமனுடனும் வந்து காட்சி கொடுத்தார் ராமன். 

டேய் அம்பி, இதையெல்லாம் நீ தியாகராஜரின் கல்பனை, மாயத்தோற்றம் என்கிறாய்.

நானோ தியாகராஜரைப் போலவே இதை நம்புகிறேன்.

இந்த நம்பிக்கையினால்தான் நான் இந்த நாவலை எழுதத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.  மேலும், இன்னொரு தகுதி, என்னால் தியாகராஜரையும் ரசிக்க முடியும்.  க்ரேடில் ஆஃப் ஃபில்த் என்ற மெட்டல் ராக் குழுவையும் ரசிக்க முடியும்.  இப்படி உலகளாவிய இசையை ரசிக்கக் கூடியவர்களாக நான் யாரையும் கண்டதில்லை.  (ரஹ்மான் மட்டுமே விதிவிலக்காக எனக்குத் தெரிகிறார்). 

யோசித்துப் பார், நான் மாமிசம் உண்பவன்.  மது அருந்துபவன்.  அபிராமணன்.  செக்ஸ் ரைட்டர் என்று பெயர் எடுத்தவன்.  என்னை ஏன் தன் வாழ்வை எழுத தியாகராஜர் தேர்ந்தெடுத்தார்?  உன் மூளையில் ஏதாவது கொஞ்சநஞ்சம் சிந்திக்கும் திறன் இருந்தால் இதற்கு நீ பதில் சொல்லலாம். 

ஏனென்றால், நீங்கள் படித்த பிரித்தானிய மெக்காலே கல்வி முறையில் தியாகராஜரின் அனுபவத்தை மாயத்தோற்றம் என்றே கருதுவதற்கு நீங்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்.   அதனால் தியாகராஜரை நீங்கள் அனைவரும் அவமதிக்கிறீர்கள்.  ஆனால் மாமிசம் சாப்பிட்டு, மது அருந்தும் நானோ தியாகராஜரின் அனுபவத்தை நம்புகிறேன்.  அதனால்தான் நான் தியாகராஜரின் வாழ்வை எழுதுகிறேன்.

கவனி, நான் எழுதுவது தியாகராஜரின் வாழ்க்கை வரலாறு அல்ல.  நாவல்.  அதில் பல கற்பனையான சம்பவங்கள் கலந்திருக்கும்.  நான் எழுதும் தியாகராஜர் நான் கண்ட, நான் அனுபவித்த, நான் உணர்ந்த தியாகராஜர்.  அதனால்தான் சொல்கிறேன், தியாகராஜர் பற்றி நூறு எழுத்தாளர்கள் நூறு நாவல் எழுதலாம். 

மேலும், என் தியாகராஜர் நாவலுக்கு அதிகம் வாசகர்கள் இருக்க மாட்டார்கள்.  என் வாசகர்களுக்கும் பொதுவான இலக்கிய வாசகர்களுக்கும் அந்த நாவல் பிடிக்காது.  ஏனென்றால், முன்னால் சொன்னது போல் தியாகராஜர் ராமரைப் பார்த்தார் என்று நம்புகிறவர்கள் மட்டுமே நாவலை ரசிக்க முடியும்.  இலக்கியத்துக்கும் அந்த நம்பிக்கைக்கும் வெகுதூரம்.  சாரு ஹிந்துத்துவா நாவல் எழுதியிருப்பதாக அவர்கள் நினைப்பார்கள்.  அப்படியானால் ஔரங்ஸேப் எழுதியவன் தாலிபானா என்று நான் கேட்பேன். 

துரதிர்ஷ்டம் என்னவென்றால், தியாகராஜா நாவலை சிலாகிக்கக் கூடிய சங்கீதக் கலைஞர்களுக்கு இலக்கியம் தெரியாது.  அதனால் அவர்கள் இதைப் படித்து ரசிக்கும் வாய்ப்பு இல்லை.  இலக்கிய வாசகர்களோ முற்போக்காளர்கள்.  நாவலில் உள்ளதெல்லாம் புருடா என்பார்கள்.  என் வாசகர் வட்ட நண்பர்கள்தான் முதலில் நாவலை எதிர்ப்பார்கள்.  யாரேனும் ஒரு நண்பர் தியாகராஜரின் வப்பாட்டி என்று கூட ஒரு பின்நவீனத்துவ எதிர்நாவல் எழுதலாம்!

ஆனால் ஒன்று, அந்தக் காலத்திலேயே இந்தியாவில் விமானம் ஓட்டினார்கள் என்று சொல்லும் ஹிந்துத்துவா மூடன் அல்ல நான்.  அதே சமயம், அந்தக் காலத்திலேயே ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்குத் தன் உயிரை மாற்றிக்கொள்ளும் விஞ்ஞானத்தை அறிந்திருக்கிறார்கள். இரும்பைத் தங்கமாக்கியிருக்கிறார்கள்.  தொல்காப்பியர் டார்வின் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டு பிடித்த பரிணாம வளர்ச்சி பற்றி விளக்கமாக எழுதியிருக்கிறார்.  சம்ஸ்கிருத மொழியின் இலக்கணம் மனித அறிதல் முறைக்கே சவாலாக இருக்கிறது.  அதேபோல் சித்தர்களின் மெய்ஞானம் இன்றைய விஞ்ஞானத்தினால் புரிந்து கொள்ளப்படவே முடியாதது.    (இன்றைய பொருளில் சொன்னால் அது விஞ்ஞானம் என்றே அழைக்கப்பட வேண்டும்.)

பாருங்கள், தியாகராஜர் பிராமண குலம் என்பதால் அவரது ஆசாரப்படி பொங்கல், அடை, வில்வ இலை, துளசி, தர்ப்பை, மஞ்சள், தேன், விபூதி எல்லாம் வைத்து நைவேத்தியம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால், சேரியை விடவும் மோசமான பகுதியிலிருந்து வந்ததால் எங்கள் ஏரியா முனீஸ்வரனுக்குப் படைப்பது போலவே – அல்லது, என் மரபு அணுவின் தொடர்ச்சியான வேட்டுவர் குல வழக்கப்படி கெடா வெட்டி, சாராயம் வைத்து தியாகராஜ ஆராதனை செய்ய வேண்டி வந்து விட்டது.  இதற்கு அந்த இசை விமர்சக அம்பிதான் காரணம்.

இதற்காக என் குரு என்னை மன்னிக்க வேண்டும்.  என் தொண்டையில் மாட்டிக் கொண்டு விட்ட நஞ்சை எடுத்தால்தான் என்னால் தொடர்ந்து இந்த நாவலை எழுத முடியும் என்பதாலேயே இந்தக் குருதி பலி!

இந்த விஷயத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் தெரிவித்த நண்பருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.  இல்லாவிட்டால் அந்த இசை விமர்சகர் பற்றி நான் ஒரு அசடனைப் போல் இன்னமும் பாராட்டி எழுதிக்கொண்டிருந்திருப்பேன்.  அவரும் ஆசன வாயில் கட்டி வந்தது போல் என் பாராட்டைப் பார்த்து நெளிந்து கொண்டிருந்திருப்பார்.  இரண்டு விபத்துகளும் நண்பரின் உதவியால் தவிர்க்கப்பட்டது. 

இந்த முறை என் அம்மாச்சி களத்தில் இறங்கத் தேவையில்லாமல் நானே இறங்கி விட்டேன்.  காரணம், தியாகராஜர் பற்றி எழுதுவது ஆகாசத்தில் கோட்டை கட்டும் வேலை.  தியாகராஜர் பற்றி எந்தத் தரவுகளும் இல்லை.  அவரது சீடர் ஒரு நாலு பக்கம் எழுதி வைத்திருக்கிறார்.  மற்றபடி தியாகராஜவே அவரது கீர்த்தனைகளில் அவர் வாழ்க்கை பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.  இப்படிப்பட்ட நிலையில் எடுத்த எடுப்பில் ஒரு அம்பி எனக்கு சாபம் விட்டிருப்பதால்தான் இதை எழுத வேண்டி நேர்ந்தது.  கல்லால் அடித்து விட்டு குரைக்கிறது என்று சொல்லாதீர்கள்.

(இந்தப் பதிவைப் படித்து விட்டு, இதை நீக்கச் சொல்லி என்னிடம் யாரும் சொல்லாதீர்கள். ’பாவம், அந்த அப்புரானியைப் போட்டு ஏன் இப்படித் திட்டியிருக்கிறீர்கள், அவர் எவ்வளவு வருத்தப்படுவார்?’ என்று சொல்லாதீர்கள். எனக்கு அவர் விட்ட சாபத்தினால் நான் மூன்று ஆண்டுகள் வேதனையுற்றுக்கொண்டிருக்கிறேன்.)