ecstasy

எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பும் என்னை மறந்த பரவசமும் ஒன்றுதான். பாக்ஹின் இந்த cantataக்களைக் கேட்கும்போது ஏற்படுவது பரவசமா, தாள முடியாத துக்கமா என்று தெரியவில்லை. ஒரு இரவு வேளையில் தனியாக மின்விசிறி சப்தம்கூட இல்லாமல் இந்த இசையைக் கேட்டுப் பாருங்கள். தியாகராஜா நாவல் இன்னும் இரண்டொரு தினங்களில் அச்சுக்குப் போய் விடும். இன்றே அனுப்பியிருக்கலாம். ஆனாலும் இன்னும் ஒரே ஒரு முறை வாசித்துப் பார்க்க இருக்கிறேன். புத்தகத்தில் பிழைகள் இருக்கக் கூடாது என்ற என் … Read more

தியாகராஜா நாவலுக்கு எழுதப்பட்ட முன்னுரை

கீழே வருவது தியாகராஜா நாவலுக்கு என் நண்பர் சுந்தர் சருக்கை எழுதிய முன்னுரை. அதற்குக் கீழே அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் உள்ளது. மொழியாக்கம் செய்தவர் சீனிவாச ராமாநுஜம். Foreword Sundar Sarukkai How does one write a story about a famous and almost mythical figure like Thyagaraja? How does one write his story? Fiction is not biography. It uses the tools of biography but … Read more

பிழை திருத்தம் செய்ய முடியவில்லை…

900 பக்கங்கள். இரண்டு பாகங்கள். என்னுடைய வேகத்துக்கு சில தினங்களிலேயே பிழை திருத்தம் முடிந்திருக்க வேண்டும். ஆனால் இந்த நாவலில் அப்படிச் செய்ய முடியவில்லை. மூன்றே மாதங்களில் எழுதியதுதான் என்றாலும் மூன்று ஜென்மங்களாக என்னோடு வாழ்ந்த மனிதர்களைப் போல் இருக்கிறார்கள் இந்த நாவலின் கதாபாத்திரங்கள். ஒருசில பத்திகளைப் படிக்கும்போது அடுத்த பத்திக்கே செல்ல முடியவில்லை. அங்கேயே நின்று விடுகிறது மனம். நாவல் வெளிவரும் வரை நாவலிலிருந்து ஒரு வாக்கியத்தைக்கூட வெளியே விடக் கூடாது என்று இருந்தேன். இன்று … Read more

தூது சென்றுப் பிழைத்தோமில்லை!

தியாகராஜா நாவலுக்கான முன்பதிவுத்ப் திட்டம் பற்றி நேற்று எழுதிவிட்டு, இன்று ராஸலீலா பதிப்பகத்தின் உரிமையாளரான வர்ஷா தேவியை அழைத்து ”என்ன, ஒரு பிரதிக்குக் கூட பணம் வரவில்லையா?” என்று கேட்டேன்.  ”இல்லை, பதினோரு பேர் பணம் அனுப்பியிருக்கிறார்கள்” என்று சொல்லி என் வயிற்றில் பாலை வார்த்தார் வர்ஷா. சில விஷயங்கள் எனக்கு ஞாபகம் வந்தன.  சமீபத்தில் ஹருகி முராகாமியின் ஒரு புத்தகம் ஒருநாள் நள்ளிரவில் கடைகளுக்கு விற்பனைக்கு வந்தன.  கடைகளில் ஒரே தள்ளுமுள்ளு கூட்டம்.  இங்கே பத்து … Read more

தியாகராஜா நாவல் : முன்பதிவுத் திட்டம்

முன்பே எழுதியபடி தியாகராஜா நாவல் இரண்டு தொகுதிகளாக வெளிவருகிறது. மொத்த பக்கங்கள் 900. இரண்டு புத்தகங்களுமே கெட்டி அட்டை, க்ளாத் பைண்டிங். இரண்டு புத்தகங்களுமே ஒரு அட்டைப்பெட்டியில் வைத்தே கொடுக்கப்படும். அந்த அட்டைப்பெட்டியின் விலையே இருநூறு ரூபாய் என்று தெரிய வந்தது. நாவலின் விலை 1800/- பதிப்பகத்துக்கு இந்த நாவலினால் ஒரு பைசா லாபம் இருக்காது. என் எழுத்து மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்பதே பதிப்பகத்தாரின் எண்ணம். இந்த நாவலை இலக்கியத்தில் பரிச்சயம் இல்லாதவர்களும் படிக்கலாம் … Read more