சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018

வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது. அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். * சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2018. * வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 4ம் வாரம் அறிவிக்கப்படும். * … Read more

பெரிய கலகம் வரப்போகிறது : மனுஷ்ய புத்திரன்

பெரிய கலகம் வரப்போகிறது ……….. மனுஷ்ய புத்திரன் …………. பொம்மை அரசனின் படைகளுக்கு வீரம் இப்போது அதிகரித்துவிட்டது கடமை இப்போது அதிகரித்துவிட்டது அவர்கள் இப்போது சோளக்காட்டு காவல் பொம்மைகளையும் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள் எனது ஒரு துண்டு நிலத்தை தரமாட்டேன் என்று சொன்ன மூதாட்டியை இருபது காவலர்கள் புடைசூழ இழுத்துச் செல்லும் புகைப்படங்கள் இன்று காணகிடைக்கின்றன எங்கள் காற்றை நஞ்சாக்காதே என்று சொன்ன ஒரு சிறுவனின் முதுகை சில நாட்களுக்கு முன்னர்தான் அவர்கள் உரித்திருந்தார்கள். அவர்களுக்கு … Read more

460 புத்தகங்களில் கையெழுத்திட்டேன்…

நேற்று ஒரு வித்தியாசமான நாள்.  மொத்தம் 460 புத்தகங்களில் கையெழுத்திட்டேன்.  பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 2.  அப்போது அதன் பதிப்பாளர் ராம்ஜியும் நானும் சிலவற்றைக் கதைத்தோம்.  காயத்ரி உட்பட எல்லோருக்கும் மகிழ்ச்சி.  ஆனால் எனக்கு ஆசை அதிகம்.  ஆசை அதிகம் இருப்பவரைத் திருப்தி செய்ய முடியாது.  இந்தப் புத்தகம் தயாரிப்பில் தமிழ்ப் புத்தக உலகைப் பொறுத்த வரை முதல் தரம்.  ஆனாலும் தில்லி தாம்ஸன் பிரஸ் மாதிரி யாராலும் செய்ய இயலாது.  அங்கே அச்சடித்தால் விலை … Read more

நண்பர்கள் – 1

எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் மிகப் பெரிய உயரத்திலிருந்து விழுந்த போது அந்த அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.  அல்லது, பைத்தியம் பிடித்திருக்கும்.  இந்த இரண்டும் நிகழாமல் என்னைக் காப்பாற்றியவர் காயத்ரி.  அதுவும் அப்போது அவர் என்னைச் சந்தித்து ஒரு வாரம்தான் இருக்கும்.  சே, நீ இப்படிப்பட்ட ஆளா என்று என்னை விட்டு அகன்று விடாமல் என்னை நம்பினார். நான் இருக்கிறேன் என்று மகத்தான தார்மீக ஆதரவைக் கொடுத்தார். நான் இப்போது உலக அளவில் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – 2 வெளியீட்டு விழா

பழுப்பு நிறப் பக்கங்கள் – 2 வெளியீட்டு விழா எப்போது என்று கேட்டிருக்கிறார் ஒரு நண்பர். இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் எழுதியிருந்தாலும் இன்னொரு முறை எழுதுகிறேன்.  மரியோ பர்கஸ் யோசாவுக்கு நோபல் பரிசு கிடைத்த போது சுமார் நூறு பேர் எனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்கள்.  அது நடந்தது 2010-இல்.  காரணம், நான் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக யோசா பற்றி எழுதி வருகிறேன். சமீபத்தில் விக்தோர் ஹாரா பற்றி குறிப்பிட்டிருந்தேன்.  அவரைப் பற்றி … Read more