ந. முத்துசாமி அஞ்சலிக் கூட்டம் – அடியேனின் உரை

பழுப்பு நிறப் பக்கங்களைப் படித்தவர்களுக்குத் தெரியும், ந. முத்துசாமி என் இலக்கியத்தின் தகப்பன் என்று. அறிதலை (perception) எனக்குக் கற்பித்தவர் அசோகமித்திரன். அறிந்து கொண்டதைச் சொல்வது எப்படி என்று கற்பித்தவர் ந. முத்துசாமி. அவரது நினைவஞ்சலிக் கூட்டம் இன்று லயோலா கல்லூரியில் நடந்தது. மொத்தம் 50 பேர் பேசினார்கள். ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடம். அந்தக் குறைந்த கால அளவில் நான் என் தகப்பனைப் பற்றிப் பேசினேன். இன்று பூராவும் எனக்குச் சந்தேகமாகவே இருந்தது, பேச முடியுமா, அல்லது … Read more

மதுரையில் தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் தொடர் நிகழ்வு

மதுரையில் தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் தொடர் நிகழ்வு நாள் 1: சனிக்கிழமை ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை – ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் 24-11-2018, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தேடல்கள் அரங்கம், கலைடாஸ்கோப், மனோரஞ்சிதம் பூ தெரு, எழில் நகர், அய்யர் பங்களா, மதுரை அனுமதி இலவசம்… ஆனால் 40 நண்பர்கள் மட்டுமே பங்கேற்க இயலும். எனவே முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை. முன்பதிவு செய்ய: 9840644916, 044 … Read more

யார் அந்த ஏழு பேர்?

டாஸ்மாக் பாரில் பணியாளனாக வேலை செய்யும் 14 வயதுப் பொடியன் ஒருவனுக்கு ஏழு பேர் பற்றித் தெரியுமா? எந்த ஏழு பேர் என்றுதானே கேட்பான்? திரு ரஜினிகாந்த் அவர்களுக்கும் அந்த அளவுக்குத்தான் பொது அறிவும் அரசியல் அறிவும் உள்ளன. உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டதற்கே தலை சுத்துது என்று சொன்ன அரசியல் ஞானி அவர். அவர்ட்ட போய் ஏனய்யா இப்படியெல்லாம் கேட்டு மன உளைச்சல் பண்ணுகிறீர்கள்? விலங்கினங்களைத் துன்புறுத்தக் கூடாது என்று மேனகா காந்தி … Read more