கோடம்பாக்கம்
விரைவில் வெளிவர இருக்கும் சினிமா பற்றிய எனது நூலின் முகப்பு அட்டை.
விரைவில் வெளிவர இருக்கும் சினிமா பற்றிய எனது நூலின் முகப்பு அட்டை.
ராஸலீலா பதிப்பகத்தினால் மிக விரைவில் வெளிவர இருக்கும் கோடம்பாக்கம் என்ற என்னுடைய கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு சிறிய குறிப்பு. எழுதிய தேதியை கவனியுங்கள். *** மலையாளத்தின் ஓ.என்.வி. விருது வைரமுத்துவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் வேறு கவிஞர்கள் இல்லையா? வைரமுத்துவை யார் கவிஞர் என்று சொன்னது? அவர் பாடலாசிரியர். இப்போதைய பாடலாசிரியர்களிலேயே அதிகத் திறமையானவர். அதற்குத்தான் அவர் இந்திய அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை வருடா வருடம் வாங்கிக் கொண்டிருக்கிறாரே? அது போதாதா? தமிழில் இப்போது தேவதேவன், … Read more
இன்று ராஸலீலா பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டு ஜோடிப்புறா எத்தனை பிரதிகள் விற்றன என்று கேட்டேன். 33 என்ற பதில் வந்தது. என் வாட்ஸப் தொடர்பில் சுமார் நானூறு பேர் உள்ளனர். அவர்களில் ஒரு நூறு பேர் வாங்கினால் கூட போதும், பதிப்பகத்திலிருந்து என்னுடைய மற்ற நூல்களைப் பிரசுரித்து விடலாம். இப்படி பத்தும் இருபதும் விற்றால் எப்படி எழுதுவது? எதற்காக எழுதுவது? ஒரு யோசனை சொல்கிறேன். எனக்கு சில நண்பர்கள் பணம் அனுப்புகிறார்கள். சில தினங்கள் முன்பு கூட … Read more
Dear charu பெரும்பாலும் காலைகளை ஏதேனும் கவிதையோடுதான் துவங்குவேன். இன்றைய காலை உங்களின் நெருப்புத் தேர் கவிதையோடு துவங்கியது. கடலூர் பாடலீஸ்வரர் கோயில் சைவ பண்பாட்டில் முக்கியமானதொரு கோயில். நாவுக்கரசர் உழவாரப்பணி செய்த களம். அந்தக் கோயிலில் நூறு வருடம் முன்னர் பிரும்மாண்டமான தேர் ஒன்று இருந்ததாகவும், ஒரு தேரோட்ட விழாவின்போது சித்தன் ஒருவன் அதை எரித்து விட்டதாகவும், பக்தர்கள் அந்த சித்தனை தூக்கி அதே எரியும் தேர் தீயில் வீசி கொன்று விட்டதாகவும், அதன் பிறகு … Read more
பித்தனைப் போல் நானும் நெருப்புத் தேரில்தான் பயணிக்கிறேன் ஐம்பது ஆண்டுகளாக என் விரல்களிலிருந்து சுடர்விட்ட எழுத்துக்களைப் பற்றியபடி அதன் சக்கரங்கள் சுழல்கின்றன. மதியத்துக்குள் ஒரு முக்கியக் கட்டுரை அச்சுக்குப் போக வேண்டும் அப்போது தந்தை இறந்த செய்தி வந்தது. நான் போகவில்லை. தம்பியிடம் சடங்குகளை ஒப்படைத்துவிட்டு நான் தொடர்ந்து எழுதினேன். வார்த்தைகள் என்னை எரித்தன நான் அவற்றை எரித்தேன். கட்டுரையை அனுப்பிய பின் எடிட்டர் கேட்டார், “நீ மனிதனா?” நான் சொன்னேன்: “இல்லை. நானொரு நெருப்புத் தேர்.” … Read more
சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் ஸீரோ டிகிரி பார்ட்னர் காயத்ரி “சாரு நிவேதிதாவுக்கும் ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று எழுதியிருந்தார். அந்த வாக்கியமே ராஸ லீலா பதிப்பகம் தொடங்கக் காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டில் எத்தனையோ பதிப்பகங்கள் உள்ளன. ஆனால் முளைத்த ரெண்டே நாளில் தமிழ்நாடு முழுவதும், சில தினங்களில் இந்திய அளவிலும் பிரபலம் ஆன பதிப்பகம் ஸீரோ டிகிரி பதிப்பகம். காரணம் யார் என்பதை ஊரே அறியும். அந்தப் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகத்துக்கே … Read more