இரு கரங்களில் வாளுடன் ஒரு சந்நதம்…

‘ஜோடிப்புறாவை எங்கே காணோம்?’ வாசித்தேன். வாசகர்கள் பொதுவாக உங்கள் எழுத்தைக் குறித்து குறிப்பிடுகையில், சந்நதம் வந்து ஆடியிருக்கிறீர்கள் என்பார்கள். அப்படி ஆடும் பொழுது இரண்டு கைகளிலும் வாளைக் கொடுத்தால் என்னவாகும்? அதுதான் இந்த நாவல். விஷயதானம் அளித்தவர்களை எல்லாம் குத்திக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறீர்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்களை. மாயமான் வேட்டைக்கு ஒரு விவேக் போல, ஜோடிப்புறாவுக்கு ஒரு திவ்யா. இரண்டு கதாப்பாத்திரங்களும் இன்றைய இளைஞர்களின் வறட்டுத்தனமான பிடிவாதம், சுரணையின்மை, கருணையின்மை போன்றவற்றைப் பிரதிபலிக்கும் இருவேறு வடிவங்கள். பிராணிகளின் … Read more

பிறந்த நாள் வாழ்த்தும் இன்ன பிறவும்…

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களில் ஆயிரத்தில் ஒருவருக்கோ அல்லது பத்தாயிரத்தில் ஒருவருக்கோதான் சமகாலத் தமிழ் இலக்கியப் பரிச்சயம் உண்டு என்று நினைக்கிறேன். அவர்களும் பெரும்பாலும் ஜெயமோகனோடு நிறுத்திக் கொள்வார்கள். என் பக்கம் திரும்புவதே இல்லை. என் எழுத்து அவர்களுக்கு ஒவ்வாது. ஏன் என்றும் எனக்குத் தெரியும். இந்த நிலையில் எனக்குத் தெரிந்த, என்னை வாசிக்கும் நண்பர்கள் ஒரு ஐம்பது பேர் உண்டு. அவர்கள் அனைவருக்கும் ஜோடிப்புறா நாவலின் பிடிஎஃப் பற்றி எழுதியிருந்தேன். அதில் இரண்டு பேர் தலா ஐயாயிரம் … Read more

ஒரு புகைப்படத்தின் கதை…

இரண்டு விஷயங்கள் இதற்குக் காரணமாக அமைந்தன. ஜனவரி புத்தக விழாவுக்கு முன்பு இப்படி ஒரு நாவல் எழுதுவேன் என்று கனவு கூட கண்டதில்லை. 120 பக்கம் கொண்ட இந்த நாவலை ஐந்து தினங்களில் எழுதி முடித்தேன். நான் தொடர்ந்து தட்டச்சு செய்துகொண்டே இருந்ததைப் பார்த்த அவந்திகா “எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போலிருக்கிறது” என்றாள். அந்த அளவுக்கு இடைவிடாமல் எழுதிக்கொண்டிருந்தேன். இதை எழுதக் காரணம் மேலே கேட்கப்பட்ட கேள்வி. இன்னொரு காரணம் கீழே காணும் புகைப்படம். புகைப்படத்தில் … Read more

ஜோடிப்புறாவை எங்கே காணோம்? – சில எதிர்வினைகள்

நாவலின் பிடிஎஃப் ஐ அனுப்பிய அரை மணிக்குள்ளாகவே புவனேஸ்வரியிடமிருந்து கீழ்க்காணும் செய்தி. “ஜோடிப்புறா” is absolutely a fascinating exploration of identity, relationships, and the complexities of modern life. Your narrative beautifully intertwines personal anecdotes with broader social observations, particularly regarding women’s experiences and societal expectations. The character of விநோதினி, who shows compassion towards a stray cat despite societal disapproval, … Read more

திரும்பத் திரும்ப விஷயதானம்…

ஜோடிப்புறாவை எங்கே காணோம்? என்ற என்னுடைய சமீபத்திய நாவலின் கடைசிப் பத்தியில் இதைச் சொல்லியிருக்கிறேன். என்னைச் சந்திக்கும் எல்லோருமே சொல்வது ஒன்றுதான். “என்னைப் பற்றி எழுதி விடாதீர்கள்.” அதற்கு என்னுடைய வேண்டுகோள்: எனக்கு விஷயதானம் கொடுக்காதீர்கள். கொடுத்தால் எழுதுவேன். நான் விஷயதானம் என்று சொல்வது எதெல்லாம் என்றும் அதில் எழுதியிருக்கிறேன். ஒரு இருபத்தைந்து வயது இளைஞன் என்னை சந்தித்தான். என் எழுத்தோடு சம்பந்தம் இல்லாதவன். என் வாசக நண்பர் ஒருவரின் மகன். பிரியும்போது “என்னைப் பற்றி எதுவும் … Read more

ஜோடிப்புறாவை எங்கே காணோம்?

இரவு பகலாக இந்த நாவலை எழுதினேன். இத்தனை தீவிரமாக, இத்தனை வேகமாக ஒரு நாவலை என் வாழ்வில் எழுதியதில்லை. ஐந்து தினங்களில் எழுதி முடித்தேன். மொத்தம் 20000 வார்த்தைகள். அன்பு நாவலின் அடுத்த பாகம் என்று கொள்ளலாம். இதன் பிடிஎஃப் வடிவம் தயாரானதும் யார் யாருக்கெல்லாம் தேவையோ அவர்களுக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன். என் நாவல்களின் மொழிபெயர்ப்புக்குப் பணம் தேவைப்படுகிறது. பெட்டியோ, அன்பு நாவல்களின் மொழிபெயர்ப்பு முடிந்து விட்டது. ராஸ லீலா பாகம் ஒன்று, பாகம் இரண்டு … Read more