PTSD

(ராஸ லீலா பதிப்பகத்தின் மூலம் விரைவில் வெளிவர இருக்கும் இப்போதெல்லாம் ஊரில் யாரும் வாழ்வதில்லை என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதை.) 1 நான் புகுமுக வகுப்பில் ஐந்து சப்ஜெக்டுகளிலும் தோல்வி அடைந்தேன். தமிழ், ஆங்கிலம், கணிதம், பௌதிகம், ரசாயனம். நான்கு சப்ஜெக்டுகளில்தோல்வி என்றால் புரிகிறது. பிற்காலத்தில் ஒரு பேர் பெற்ற தமிழ்எழுத்தாளனாக உருவான நான் ஏன் தமிழிலும் தோல்வி? மிக எளியகாரணம்தான். நான்கிலும் தோல்வி என்பது தேர்வுக்கு முன்னரே தெரிந்து விட்டதால் தமிழையும் சரியாக … Read more

முன்னறிவித்தல்

”எழுத்தாளர் சாரு நிவேதிதா (இப்ப தீர்க்கதரிசி சாரு நிவேதிதா என்று சொல்லலாம்) எப்பவும் படபடன்னு வெடிக்கிற மாதிரி கட்டுரை எழுதுவாப்டி. அதுல ஏதோ ஒரு உண்மை இருக்கிற மாதிரி தோணும். அதே சமயத்தில் இவர் ரொம்ப அதீதமா சொல்றாரோன்னு ஒரு சந்தேகமும் வரும். இப்போது அந்த சந்தேகத்தின் மேல எனக்கு சந்தேகம் வந்திருச்சு. வாழ்த்துகள் சார்.” மேற்கண்ட பதிவு ஃபேஸ்புக்கில் சந்திரா தங்கராஜ் எழுதியிருப்பது. என் மீது மதிப்பு வைத்திருக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய பெண் … Read more

மக்கள் சக்தி

மக்கள் வாக்கு அளித்த வேகத்தை வைத்தே இது ஒரு வித்தியாசமான தேர்தல் என்பதை கணித்திருக்கலாம். தேர்தலுக்கு ஒரு நாள் முன்னர்தான் நான் என் யூட்யூப் செய்தியை வெளியிட்டேன். அதில் மக்கள் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லி அதற்கான காரணத்தையும் விளக்கினேன். சினிமாவும் அரசியலும் கலப்பது விரும்பத் தக்கது அல்ல என்பதே என் நிலைப்பாடு. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது வேறு வழியே இல்லை என்று சொல்லியிருந்தேன். காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் ரவுடிகளின் கையே ஓங்கியிருந்தது. முன்பெல்லாம் … Read more

பேச்சு – 2

நேற்று இரண்டு கட்டுரைகள் எழுதினேன்.  அதில் ஒரு கட்டுரை மட்டும் ஐந்து மணி நேரத்தை எடுத்துக் கொண்டது.  இசை பற்றிய கட்டுரை.  கேட்ட பாடல்களாக இருந்தாலும் அது பற்றி எழுதும்போது மீண்டும் கேட்க வேண்டும் அல்லவ இன்னொரு கட்டுரை, ஆத்மாவின் குமுறல்.  இரண்டையும் பற்றி யாரிடம் பேசுவது?  பேச யாரும் இல்லை.  எழுதி முடித்து ஒன்றிரண்டு மணி நேரம் சென்ற பின் ஒரு நண்பரை அழைத்தேன். இன்னும் படிக்கவில்லை என்றார்.  இன்று காலை அழைத்தேன்.  வேறு ஏதோ … Read more

பேச்சு

தெரியாத மனிதர்களிடம் நான் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை.  ஒரு நண்பர் சமீபத்தில் சொன்னார்.  அவர் வீட்டுக்கு வந்த அண்டை வீட்டுக்காரர் ஒருவர் அரை மணி நேரம் இடைவெளியே இல்லாமல் பேசிக்கொண்டேயிருந்திருக்கிறார். ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே என் நண்பருக்கு அவர் என்ன பேசுகிறார் என்றே ஒரு வார்த்தை கூட மனதில் பதியவில்லை. வெறுமனே தலையைத் தலையை ஆட்டிக்கொண்டிருந்தாராம். ஜெயமோகன் ஒருமுறை தன் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த போது நண்பரின் அண்டை வீட்டுக்காரர் இவரிடம் வந்து பல மணி … Read more

தமிழ் எழுத்தாளன்

இப்போது என்னால் ஒரு அமெரிக்க, ப்ரிட்டிஷ் எழுத்தாளரைப் போலவே வெகு சரளமாக ஆங்கிலத்தில் நாவலோ சிறுகதையோ எழுத முடியும். சில பிழைகள் இருக்கும். அதை ஒரு எடிட்டரால் சரி செய்து விட முடியும். இதற்கு நான் செயற்கை நுண்ணறிவை நாடுவதில்லை. அந்த எந்திர மொழிபெயர்ப்பினால் இலக்கிய உலகில் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் நாலு வாக்கியத்தை எழுதி அதை செயற்கை நுண்ணறிவால் மொழிபெயர்த்து பதிப்பகத்திடம் கொடுத்தால் ஒரு நிமிடத்தில் அது செயற்கை நுண்ணறிவு என்று கண்டு பிடித்து … Read more