வரமும் சாபமும்

அந்த வீட்டில் ஆறு குழந்தைகள்மூணு பெண் மூணு ஆண்அன்றாடங்காய்ச்சிஅப்பன் உழைப்பாளிஅம்மையும் உழைப்பாளிஇருந்தும் ஒரு வேளைதான்வயிறார முடிந்ததுமறு வேளை பசித்தால்கிடைத்தது தண்ணீர்காலை நீராகாரத்தில்கைவிட்டு அளைந்தால்பருக்கைகள் ரெண்டு கிடைக்கும் ஆனாலும் அம்மையின் நம்பிக்கை மங்கவில்லைபாலும் தேனும் இந்த வீட்டில் பொங்குமென்பாள்மாதாமாதம் அதிகாலை நாலு மணிக்கேவாசலில் வந்து நின்று குடுகுடுப்பை அடித்துஎல்லோரையும் எழுப்பிநல்ல காலம் பாடும்குடுகுடுப்பைக்காரனின் குரல்தான்அம்மையின் நம்பிக்கை ஒளி மூத்தவன் தில்லி செல்வான்அடுத்தவளுக்கு அரசாங்க உத்தியோகம்மூன்றாமவனுக்குப் பட்டாளத்துப் பணிநான்காமவள் செல்வந்தர் மருமகள்ஐந்தாமவன் வணிகத்தில் கொழிப்பான்ஆறாமவள் மருத்துவப் பணி பக்கத்தில் பெருமாள் … Read more

நிச்சலனத்தின் நிகழ்வெளி: புதுவை இளவேனில்

இந்த அரிய பொக்கிஷம் பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். இன்றுதான் நேரம் கிடைத்தது. ‘ தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் குறித்த அரிய புகைப்படங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் புதுவை இளவேனில் எடுத்தவை. எல்லாமே கலைப் பொக்கிஷங்கள். ஒருவரின் தோற்றம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அவரை இந்த உலகின் அதியற்புத மனிதராக தன் புகைப்படக் கலையின் மூலம் மாற்ற வல்ல ஒளிக்கலைஞர் புதுவை இளவேனில். இதுவரை என்னைப் புகைப்படம் எடுத்தவர்களில் ஆகச் … Read more

மேல்கூரை மின்விசிறி

யுவதிகள்நாய்களையும் பூனைகளையும்தம் காதலரையும்தொட்டுகொஞ்சி விளையாடுவதைஅடிக்கடி காண்கிறேன்மோகினியிடம் கொஞ்சம்தன்னிரக்க பாவனையுடன் சொன்னேன்என்னை இதுவரை யாரும்தொட்டு கொஞ்சி விளையாடியதில்லையென அவள்,நீதான் தொட்டவுடன் என்னைமேல்கூரை மின்விசிறியைப் பார்க்கவைத்து விடுகிறாயேஎங்கே விளையாடுவதுஎங்கே கொஞ்சுவதுபோடா இடியட்என்று சொல்லியென்கன்னத்தைக் கிள்ளினாள் சே, அரிய வாய்ப்பை இழந்து போனேன்அன்றைய தினமும் அவள்மேல்கூரை மின்விசிறியையேபார்க்க நேர்ந்தது

தேனுகந்து பாடும் உன் அமுது

அவள் ஒரு பாடல் அனுப்பினாள்கேட்டேன்.நெஞ்சில் வந்து குடிகொண்ட நிலவுபரவசம் பரவசம் என்றதுஐயோ, இது சோகப்பாட்டு என்றாள்நான் சிரித்தேன் சோகமா? எங்கே இருக்கிறது?இசையில் சோகம் உண்டா?அது ஒரு பறவையின் றெக்கை,காற்றைத் தழுவி எல்லைகளைத் தாண்டுவதுகாதல் இசையின் நிழல்எப்போதும் தொடரும்எப்போதும் மாறும் இசை பிரபஞ்சத்தின் முதல் சொல்அதற்கு முன் மௌனம் கூட இல்லைசோகமென்று அவள் அழைத்தாலும்எனக்கு அது ஒரு மெல்லிய அழைப்புஎங்கோ ஒரு நட்சத்திரத்தின் கிசுகிசுப்பு. காதலும் இசையும் சொல்வதென்னவென்றால்.சோகம் ஒரு பெயர் மட்டுமேஆனால் பரவசம் தேன்மழைஎன் உயிரை உருக்கிநின் … Read more

நடனத்தில் ஒரு பிழை

”அண்டத்தின் விகசிப்பில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள்”  என்ற வரியில் ஒரு பெரிய பிழை உள்ளது. விகசிப்பு, விகாசம் என்றால் மலர்ச்சி என்று பொருள். சந்தேகப்பட்டுத்தான் நிகண்டில் பார்த்தேன். எனவே அந்த வாக்கியம் “அண்டத்தின் பிரமாண்டத்தில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள்” என்று வர வேண்டும். மூலத்தில் மாற்றி விட்டேன். யாரும் இது பற்றிக் குறிப்பிடாதது சற்றே வருத்தம். கவிதையில் இன்னொரு வாக்கியமும் சேர்த்திருக்கிறேன். “மரணம் கண்டு நகைத்திருக்க மாட்டார்கள்”. கவிதையைத் திரும்பவும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் … Read more

நடனம்

பொதுமக்கள் சேவைக்கான அரசு அலுவலகம்சிஸ்டம் வேலை செய்யவில்லையெனக்காத்திருந்த நேரத்தில்அங்கிருந்த மனிதர்களை நோக்கினேன்நாற்பது ஐம்பது பேர் இருக்கலாம்ஒவ்வொருவர் முகத்திலும்ஏதோ நோய்மையின் நிழல்மருத்துவமனை அல்ல அதுஆனாலும் அவர்கள் நோயாளிகளின்தோற்றம் கொண்டிருந்தார்கள் அவர்கள் ஒருபோதும்வாய்விட்டுச் சிரித்துகாற்றுடன் கைகோர்த்துநிலவின் குளிர்மையில் திளைத்திருக்க மாட்டார்கள்பிறர் பசியின் வலியுணர்ந்து வெகுண்டிருக்க மாட்டார்கள்மலையடிவாரத்தின் தனிமையில் தோய்ந்திருக்க மாட்டார்கள்கவிதையுடன் மௌனித்துஅண்டத்தின் விகசிப்பில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள் மரணம் கண்டு நகைத்திருக்க மாட்டார்கள் காதல்மிகக் கொண்டு முத்தமிட்டிருக்க மாட்டார்கள்கலவியின் பரவசம் கண்டிருக்க மாட்டார்கள்பிறர் துயர் கண்டு கசிந்திருக்க மாட்டார்கள்வாடிய … Read more