ஐந்தாறு புதிய புத்தகங்கள்

இன்றுதான் திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு, கொலைவெறியில் எழுதிக்கொண்டிருந்த அனாடமி ஆஃப் டிஸொனன்ஸ் நாவலை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு, ஸ்ரீராம் எடிட் பண்ணிக் கொடுத்திருந்த, பத்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியிருந்த சிறுகதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். எல்லாமே ராஸ லீலா நாவலின் அத்தியாயங்களைப் போல் இருக்கின்றன. பொறுமையாகத் தொகுத்தால் இரண்டு புதிய நாவல்கள் கிடைத்திருக்கும். பரவாயில்லை. என் கட்டுரைத் தொகுப்புகளே சிறுகதைகள் போன்றவைதான். சிறுகதைகள் நாவலின் வெவ்வேறு அத்தியாயங்கள். இஞ்சி சுக்கு கடுக்காய் என்ற கட்டுரைத் தொகுப்பை … Read more

ஆசார்ய தேவோ பவ!

குருவை தெய்வமாகக் கருது. மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருள்.  தைத்திரீய உபநிஷதத்தில் வருகிறது.  குருவை தெய்வமாகக் கூட நினைக்க வேண்டாம்.  குருவை பைத்தியம் என்று சொல்லிக் கல்லால் அடிக்கக் கூடாது.  அடித்தால் என்ன ஆகும் என்று மஹாபாரதம் இப்படிச் சொல்கிறது:  ஸ குலஹீனஸ்ஸ்யாத் பாக்யமேவ ந ச ச்ரேயஸ் ஜஹாதி ஹி.   இதன் அர்த்தத்தை நான் சொல்லக் கூடாது.  இத்தனை எதிர்மறையாக எல்லாம் என் வாயிலிருந்தோ கரங்களிலிருந்தோ வார்த்தைகள் வராது.  இந்தக் காலத்தில் எழுத்தாளன்தான் குருவின் ஸ்தானத்தில் இருப்பவன்.  … Read more

காஃப்காவின் எழுத்தும் என் அன்றாட வாழ்வும்…

காஃப்காவின் எழுத்து எனக்குப் பிடிக்காது.  என் அன்றாட வாழ்வும் எனக்குப் பிடிக்காதது.  ஆனால் எனக்கு வேறு வழியில்லை.  இது என் மீது திணிக்கப்பட்டது.  இதிலிருந்து என்னால் விடுபட இயலாது.  எனக்குப் பிடித்தது போல் என் அன்றாட வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான வசதியும் வாய்ப்பும் எனக்கு இல்லை.  மார்க்கி தெ ஸாத் தன் வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழிக்க வேண்டியிருந்தது.  அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு அவருக்கு இல்லை.  வான் காகின் வறுமையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு வான் காகுக்கு … Read more

ஒரு வதந்தியைப் பற்றி…

யோகா குரு சௌந்தர் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்.  அதன் இணைப்பு :  https://barnasalai.blogspot.com/2025/11/blog-post_30.html?m=1&fbclid=IwY2xjawOaFYFleHRuA2FlbQIxMQBicmlkETFBNzJjMWpQMVdqbHc5Qk1rc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHlL7qdMvcIluHuAx84H9mSRXi0RojxUwy76163CDGmzEpjWYMzt71Ua7atRE_aem_eF1w2tRBHjg3CxcyTdnokw இந்தப் பதிவில் உள்ள ஒரு விஷயம் பற்றி இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது.  அதாவது, என்னோடு பழகும் நண்பர்கள் பற்றி நான் கொஞ்ச காலத்தில் திட்டி எழுதி விடுகிறேன்.  இப்படி ஒரு கருத்து பலரிடமும் இருக்கிறது.  இதற்கு நான் பல காலமாக பதிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஆனாலும், என் பதில் பற்றி யாருக்கும் கவலை இல்லை.  தாங்கள் சொல்வதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.  … Read more

echoes in the void

இன்று மாலை ஏழு மணியிலிருந்து ஒரு கவிதை எழுத ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில். தமிழில் எழுதினால் பிரச்சினை ஆகி விடுகிறது. தலைப்பு மேலே. அதன் கடைசிப் பத்தியைத் திரும்பத் திரும்ப எழுத வேண்டியிருந்தது. ஒன்று, வெளிப்படையாக இருந்தது. அது கவிதைக்கு அழகல்ல. இன்னொன்று, யாருக்கும் புரியாது. அதனால் இடைப்பட்ட நிலையில் அதை எழுதினேன். அதற்கே ஒரு மணி நேரம் ஆனது. கவிதையை சஞ்ஜனாவுக்கு அனுப்பியிருக்கிறேன். வந்ததும் இங்கே பதிவிடுவேன்.