எழுத்தாளனைக் கொண்டாடுதல்
தமிழ்ச் சமூகம் எழுத்தாளனைக் கொண்டாடவில்லை என்ற கருத்தை வைத்து சுமாராக ஐநூறு புலம்பல் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அந்தப் புலம்பல் கட்டுரைகளாலேயே நண்பர்களிடமிருந்து நிறைய திட்டும் வாங்கியிருக்கிறேன். ஒரு நண்பர் பிரிந்தே போய்விட்டார். இனிமேல் அப்படி எழுத மாட்டேன். காலம் மாறி விட்டது. எல்லா எழுத்தாளர்களையும் அந்தந்த எழுத்தாளர்களின் வாசகர்கள் பிரமாதமாகக் கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் எனக்கு ரகுபதி என்ற வாசகர் அறிமுகம் ஆனார். இருபது ஆண்டுகளாக தீவிர இலக்கிய வாசகர். அவர் மனைவி தேவிகாவுக்கு இப்போதுதான் என் எழுத்து … Read more