பெட்டியோ மொழிபெயர்ப்பு முடிந்து விட்டது. அடுத்த மாதம் பதிப்பகத்திடம் கொடுத்து விடுவோம். இந்த ஆண்டு இறுதிக்குள் ஆங்கில மொழிபெயர்ப்பு Petiyo என்ற தலைப்பிலேயே கிடைக்கும்.
இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்கு செலவு இரண்டரை லட்சம் ரூபாய். ஐம்பதாயிரம் கொடுத்து விட்டேன். இன்னும் இரண்டு லட்சம் இந்த மாத இறுதிக்குள் கொடுக்க வேண்டும். ஏனென்றால், அடுத்த மாதமே மொழிபெயர்ப்பாளர் அன்பு நாவலை மொழிபெயர்ப்புக்கு எடுக்கிறார். இந்த இரண்டு லட்சம் ரூபாயை எப்படிக் கொடுப்பது என்று தெரியவில்லை. காரணம், என்னிடம் பணம் இல்லை. அதனால் இந்தச் செலவைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கும் வாசகர்கள் தங்களால் முடிந்த தொகையை அனுப்பி வைத்தால் என் பளு குறையும்.
இதைப் படித்தவுடன் காசு கேட்கிறான் என்று ஃபேஸ்புக்கில் என்னைத் தாறுமாறாகத் திட்டி எழுதப் போகும் கழிசடைகள் பற்றி நான் கவலையே படப் போவதில்லை. தாகூர் தன்னுடைய சாந்தி நிகேதன் கட்டுவதற்காக இந்தியா முழுவதும் போய் பணம் திரட்டினார். தமிழ்நாட்டுக்கு வந்தார். கல்லூரிகளில் அவர் பேச்சுக்கு மாணவர்கள் கட்டணம் கொடுத்தார்கள். அப்படித்தான் அவருக்குப் பணம் சேர்ந்தது. நான் உங்களுக்கு ஞானத்தை வழங்குகிறேன். முடிந்தவர்கள் என் பணத் தேவைக்கு உதவி செய்யுங்கள்.
பணம் அனுப்புவதற்கு விவரம் கீழே:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai