யாரைக் கல்லால் அடிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்…
http://www.gq-magazine.co.uk/entertainment/articles/2012-12/04/tarun-tejpal-tehelka-editor-interview
http://www.gq-magazine.co.uk/entertainment/articles/2012-12/04/tarun-tejpal-tehelka-editor-interview
வெளியூர் வாசகர்களின் வசதிக்காகவும் இப்போதே சொல்லி விடுகிறேன். ஜனவரி 4-ஆம் தேதி சென்னையில் அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் நாவல் வெளியிடப்பட உள்ளது. பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். நானும் பேசுவேன். அந்த நாவலுக்கு நான் எழுதிய முன்னுரையைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். பெருந்திரளாக வந்து கலந்து கொள்ளுங்கள். இந்த ஆண்டு என் நூல் எதுவும் வரவில்லை. தற்கொலைக் குறுங்கதைகளையே நீங்கள் என்னுடைய நாவலைப் போல் வாசிக்கலாம். இதை ஏன் நாம் எழுதாமல் போனோம் என்று பொறாமை கொள்ள வைத்த … Read more
சாருவின் நாவல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிரத்யேகத் தன்மை இருப்பதைக் காணலாம். உதாரணமாக ஸீரோ டிகிரிக்கு கல்ட் ஸ்டேடஸ் கிடைத்து விட்டதால் அதைப்படிக்காமல் யாரும் இருக்க முடியாது. ராஸ லீலாவை எடுத்துக் கொண்டால் , நெட் போன்ற சமகால விவகாரங்களைத் தொட்ட முதல் நாவல்; நவீன கால சிக்கல்களைச் சித்திரிக்கும் முதல் நாவல் என்ற பெருமை இருப்பதால் இளைஞர்களால் அதிகம் படிக்கப்படும் நாவலாக உள்ளது. த்ரில்லர் பாணியில் பின்நவீனத்துவ நாவல் என்ற தன்மையில் இணையத்தில் அதிகம் பேசப்படுவது தேகம். … Read more
பாரி, என் மீது பொது வெளியில் நிலவும் குற்றச்சாட்டுகள். ”அனைவரும் ஏற்பதை சாரு ஏற்க மாட்டார்.” இது குற்றச்சாட்டு அல்ல. பாராட்டு. மகாத்மா காந்தியிலிருந்து பாரதி, பெரியார் வரை யார் தான் பொதுஜனங்களின் கருத்தை ஏற்றுச் செயல்பட்டார்கள்? மிகச் சுருக்கமாக ஒரு பழமொழி இருக்கிறது. எதார்த்தவாதி வெகுஜன விரோதி. நான் எதார்த்தத்தை – உண்மையைப் பேசுகிறேன். எனவே நான் ஜனக்கூட்டத்துக்குப் பிடிக்காதவனாகத்தான் இருப்பேன். பொதுமக்கள் சொல்வதற்கு ஆமாம் சாமி போடுபவன் எழுத்தாளனாகவே இருக்க முடியாது. மற்ற குற்றச்சாட்டுகளைப் … Read more
அன்புள்ள சாரு, இதை எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. நான் ஒரு எழுத்தாளருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமே என்னைப் பதற்றமடையச் செய்கிறது. பலமுறை ‘அன்புள்ள சாரு’ என்ற இந்த வாசகத்தை மட்டும் எழுதிவிட்டு அதற்குமேல் பதற்றம் அடைந்து விட்டு விடுவேன். இது உங்களைப் பார்த்து வரும் பயம் அல்ல. ஒரு ஆளுமையைப் பார்த்து ஏற்படும் பயம். ஒருவித மரியாதையினால் ஏற்படும் பயம் என்று கூட சொல்லலாம். இது என்ன கொடுமை. வாசகனுக்கு மட்டும் ஏன் … Read more
சிறிய வயதில் அம்புலி மாமா பத்திரிகையை விரும்பிப் படிப்பேன். அதிலும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளமும் அதைப் பிடித்துத் தன் தோளில் போட்டுக் கொள்ளும் பட்டி விக்ரமாதித்தனும் இன்னமும் அப்படியே ஞாபகத்தில் தங்கி இருக்கின்றனர். அந்தக் கதை இன்று ஞாபகம் வந்தது. தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்துமே என்னை black list செய்து வைத்திருப்பது போல் தோன்றுகிறது. ஒருமுறை ஒரு தமிழ்நாட்டுப் பிரச்சினை பற்றி சென்னையின் பிரபலமான ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு ஒரு கட்டுரை அனுப்பினேன். ஒரு வாரம் … Read more