ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம் – 2

இடமும் தேதியும் முடிவாகி விட்டது. இடம்: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மதகடிப்பேட்டை, பாண்டிச்சேரி.

தேதி: நவம்பர் 8, சனிக்கிழமை. காலை பத்து மணி முதல் மாலை ஆறு வரை. இடையில் ஒரு மணி நேரம் மதிய உணவு. மதிய உணவு கல்லூரி வளாகத்திலேயே அளிக்கப்படும். காலை பதினொன்றரை அளவிலும் மதியம் மூன்றரை மணிக்கும் தேநீர் இடைவேளை, பதினைந்து நிமிடம்.

குறைந்த பட்ச நன்கொடை : 2000 ரூ. மாணவர்களுக்கு 1000 ரூ.

சுமார் முப்பது ஐரோப்பியத் திரைப்படங்கள் பற்றிப் பேசுவேன். படங்களிலிருந்து சில காட்சிகள் திரையிடப்படும். வர முடியாதவர்களுக்கு நிகழ்ச்சியின் லிங்க் அனுப்பி வைக்கப்படும். ஆனாலும் நேரில் பார்த்தால்தான் இந்த நிகழ்ச்சியின் முழுமையையும் ஒருவரால் உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பது என் கருத்து.

முப்பது திரைப்படங்களின் பெயர்களையும் ஒவ்வொன்றாகத் தருகிறேன். முடிந்தால் பார்த்து விட்டு வாருங்கள். முதல் படம்: Dracula: A Love Tale. Directed by Luc Besson.