வயது (குறுங்கதை)

கோயம்பத்தூர் புத்தக விழாவில் ஒரு மூத்த எழுத்தாளரைச் சந்திக்க நேர்ந்தது.  நீண்ட கால நண்பர்.  சந்தித்து சில ஆண்டுகள் இருக்கும்.  பத்து ஆண்டுகள் கூட இருக்கலாம்.  எனக்குப் பிரியமான எழுத்தாளரும் கூட.  அவரோடு இருந்தால் எப்போதும் சிரிப்பும் அமளியுமாகவே இருக்கும்.   குசலம் விசாரித்த பிறகு உரையாடலை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை.  நண்பர் என்னைப் போலவே ஒரு குடிவிரும்பி.  குடி பற்றிய அல்லது எது பற்றியுமே சங்கோஜமோ, கூச்ச உணர்வோ, குற்ற மனப்பான்மையும் இல்லாத அளவுக்கு வெளிப்படையானவர். … Read more

இலக்கிய நூல்களின் இன்றைய நிலை

1.சமீபத்தில் கோயம்பத்தூர் புத்தக விழாவில் ஒருவர் என்னைச் சந்தித்தார்.  அடையாளம் தெரியவில்லை.  பார்த்து இருபது ஆண்டுகளோ அதற்கு மேலோ இருக்கும்.  பெயரைச் சொன்ன பிறகுதான் புரிந்து கொண்டேன்.  முன்பு அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர்.  பிறகு பல லௌகீக காரணங்களால் இலக்கியத்திலிருந்து ஒதுங்கி விட்டார்.  தொடர்பு விட்டுப் போயிற்று.  இப்போது இருபது ஆண்டுகள் கழித்து, லௌகீக வாழ்க்கை சற்றே அலுத்துப்போய் இங்கே இலக்கியத்தின் பக்கம் வந்து எட்டிப் பார்த்தால் என்ன ஆகும்?  இங்கே இலக்கியத்திலோ … Read more