அரசு பயங்கரவாதம்

தன்னை நிர்வாணமாகப் படம் வரைந்த கேலிச் சித்திரக்காரரை போலீஸை விட்டுக் கைது செய்திருக்கிறார் நெல்லை கலெக்டர். அவரே செய்யவில்லை. அவர் புகார் மட்டுமே கொடுத்தார். போலீஸ் நடவடிக்கை எடுத்தது. என்ன வேகம் பாருங்கள்! இந்த வேகத்தை இசக்கிமுத்துவின் புகார் மீது காட்ட வேண்டியதுதானே ஐயா? ஆக, ஆள்பவனுக்கு ஒரு சட்டம். ஆண்டிக்கு ஒரு சட்டம். அப்படித்தானே? அதை ஒத்துக் கொள்ளுங்கள். ஏன் இப்படி அரசியல் நிர்ணயச் சட்டத்தையெல்லாம் மேற்கோள் காட்டி நாடகம் ஆடுகிறீர்கள்? சரி, அம்மணமாகப் படம் … Read more

வாழ்வும் இலக்கியமும்

சமயங்களில் நண்பர்கள் கேட்பதுண்டு, ஹெடோனிசம் என்று சொல்லி விட்டு ஏதோ ஆன்மீக சமாச்சாரங்களைப் பற்றி எழுதுகிறீர்கள், என்ன விஷயம்? ஹெடோனிசம் என்றால் வாழ்க்கையைக் கொண்டாடுதல். ஒரு மனிதனை அரசு சிறையில் போட்டு விட்டது; அவன் எப்படிக் கொண்டாடுவான்? கொண்டாட முடியும். அந்தச் சிறை வாழ்க்கையையே ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டால் முடியும். 1972- ஆம் ஆண்டு. மொராக்கோ மன்னர் இரண்டாம் ஹசன் தனது 42-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே சில ராணுவ லாரிகள் … Read more

சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும் – சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன் முகநூலில் எழுதியது: கப்பல் சோமாலியா கடல் எல்லையை தாண்டும் வரை பயணிகள் உஷாராக இருக்கும் படி சிப்பந்திகள் சொன்ன போது ஜெய்கிருஷ்ணன் சுப்ரமணியனுக்கு முதலில் சிரிப்பு தான் வந்தது. சென்னையில் தன் நண்பன் சந்தோஷ் வாங்கி கொடுத்த தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் கனமான புத்தகங்களை தவிர அவனிடம் சொல்லிக்கொள்ளும் படி எந்த உயர்தர வஸ்துவும் இல்லை. சோமாலிய கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்தால் கூட இப்புத்தகங்களை தூக்கி சுமக்க கஷ்டப்பட்டாவது தன்னை விட்டுவிடுவார்கள் என்று கற்பனை … Read more

என் கடன் பணி செய்து கிடப்பதே… (2)

சென்ற கட்டுரை பலரையும் பாதித்து விட்டது என்று நினைக்கிறேன்.  ஏகப்பட்ட கடிதங்கள்.  மற்றொரு விஷயத்தையும் இப்போதே சொல்லி விடுகிறேன்.  இப்படியெல்லாம் அன்புடனும், கருணையுடனும், நட்புடனும், அகந்தையே இல்லாமலும் இருப்பதால் ‘கேணை’யாக இருக்க வேண்டும் என்பதில்லை.  வேலையில் கடுமையாகவே இருங்கள்.  இல்லாவிட்டால் ஏய்த்து விடுவார்கள்.  நான் அதில் சமரசமே செய்து கொள்வதில்லை.  வாசகர் வட்டச் சந்திப்புகளுக்கு வந்தால் எல்லோரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்தே ஆக வேண்டும்.  யாருக்காவது காய்கறி நறுக்கத் தெரியாவிட்டால் அவர் வீட்டைச் சுத்தம் செய்யலாம். … Read more