நடிகர்களும் அரசியலும்

ArtReview Asia பத்திரிகையில் தமிழ் சினிமா நடிகர்களின் அரசியல் சேவை, இலக்கியச் சேவை குறித்து – குறிப்பாக கமல்ஹாசன் – விரிவாக எழுதியிருக்கிறேன்.  கடைசியில் கமல்ஹாசனை ஐரோப்பிய இலக்கியக் கலை உலகத்துக்கு அறிமுகம் செய்து விட்டேன்.  முடிந்தவர்கள் ArtReview Asiaவை இணையத்திலேயே வாங்கிப் படிக்கலாம்.  வழக்கம் போல் பிரபு காளிதாஸின் ரஜினி புகைப்படம் ஒன்று வந்துள்ளது.  மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 60 அடி கட் அவுட் புகைப்படமும் வெளிவந்துள்ளது.  வாங்கிப் படித்து இன்புறவும்.

ஆன் எபர் : காயத்ரியின் நேரடி மொழிபெயர்ப்பில்…

      இந்த மாத தடம் இதழில் காயத்ரி ஆர். மொழிபெயர்த்துள்ள ஆன் எபரின் சிறுகதை ஒன்று வெளியாகியுள்ளது.  விளிம்பு நிலை மக்களின் உளவியலைப் புரிந்து கொள்ள இந்தக் கதை உதவும்.  இந்த எழுத்தாளரைப் படித்த போதுதான் கனடாவில் ஃப்ரெஞ்ச் இரண்டாம் மொழியாக இருப்பதே எனக்குத் தெரிய வந்தது.  காயத்ரி இந்தக் கதையை ஃப்ரெஞ்சிலிருந்து தமிழாக்கியிருக்கிறார்.  இடையில் ஒரு கை இல்லாமல் நேரடியாக வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.  பொதுவாகவே நான் ஐரோப்பிய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதை … Read more